தேவையானப் பொருட்கள்
- உதிரியாக வடித்த சாதம் - ஒரு டம்ளர் (ஒரு ஆழாக்கு)
- வெண்டைக்காய் - கால் கிலோ
- நெய் - ஒரு தேக்கரண்டி (வெண்ண்டைக்கய் வதக்க)
- தாளிக்க
- -------
- எண்ணை + பட்டர் - நாலு தேக்கரண்டி
- சின்ன வெங்காயம் - ஐந்து
- கருவேப்பிலை - சிறிது
- பூண்டு - இரண்டு பல்
- இஞ்சி - ஒரு சிறிய துண்டு
- முந்திரி - ஐந்து
- தேங்காய் துருவல் - ஒரண்டு மேசை கரண்டி
- உப்பு - அரைதேக்கரண்டி
- வேர்கடலை - ஒரு மேசை கரண்டி
- கொத்து மல்லி தழை - சிறிது
|
செய்முறை
- ஒரு வாயகன்ற வானலியை காய வைத்து அதில் நெய் ஊற்றி முந்திரியை அரிந்து வருத்து தனியாக வைக்கவேண்டும்.
- அதே வானலியில் வெண்டைகாயை கழுவி ஒரு இன்ச் அளவு துண்டுகளாக போட்டு தண்ணீரில்லாமல் நெய்யில் சிறிது உப்பு சேர்த்து வதக்கி தனியாக வைக்கவேன்டும்.
- உதிரியான சாதத்தையும் ரெடியாக வைக்க வேண்டும்.
- இப்போது அதே வானலியில் எண்ணை + பட்டரை போட்டு கருவேப்பிலை ,வேர்கடலை , சின்ன வெங்காயத்தை நாலாக அரிந்து போடவும் ,பூண்டு பொடியாக அரிந்து போட்டு, தேங்காய் துருவல் ,இஞ்சி துவி போட்டு வதக்கி பச்ச மிளகாயையும் சேர்த்து வதக்கவும்.
- இப்ப்து முதலில் சாதம்,அடுத்து வென்டைக்காய் போட்டு நன்கு கிளறி இரண்டு நிமிடம் சீம்மில் வைக்க வேண்டும்.
- கடைசியில் வருத்த முந்திரி, கொத்துமல்லி தழை தூவி இரக்கவும்.
|
குறிப்பு:
இது ஆபிஸுக்கு எடுத்து போக வசதியாக இருக்கும் குழந்தைகளுக்கு பள்ள்க்கு கட்டி கொடுக்கலாம்.
வழங்கியவர்
ஜலீலா
பரிமாறும் அளவு
|
ஆயத்த நேரம்
|
சமைக்கும் நேரம்
|
|
2 person |
10min |
10 min |
|
|
|
|
சமீபத்தியக் கருத்துக்கள்
2 மணிநேரம் 9 நிமிடங்கள் முன்பு -
2 மணிநேரம் 39 நிமிடங்கள் முன்பு -
10 மணிநேரம் 51 நிமிடங்கள் முன்பு -
11 மணிநேரம் 47 நிமிடங்கள் முன்பு -
13 மணிநேரம் 45 நிமிடங்கள் முன்பு -
13 மணிநேரம் 54 நிமிடங்கள் முன்பு -
14 மணிநேரம் 12 நிமிடங்கள் முன்பு -
14 மணிநேரம் 35 நிமிடங்கள் முன்பு -
15 மணிநேரம் 31 நிமிடங்கள் முன்பு -
16 மணிநேரம் 20 நிமிடங்கள் முன்பு -