உள்நுழைதல்

வாக்கெடுப்பு






புதிதாக இணைந்தவர்கள்

சமீபத்தியக் கருத்துக்கள்

 

சோம்பு காப்பி

 

மோஷன் பிராப்ளம் உள்ளவர்கள், இதை தினமும் காலையில் குடிக்கவும்.மோஷன் பிராப்ளத்திற்கு குட் பை.

தேவையானப் பொருட்கள்

  • சுக்கு பொடி - ஒரு தேக்கரண்டி
  • ஏலக்காய் தூள் - கால் தேக்கரண்டி
  • சோம்பு - அரை தேக்கரண்டி
  • தண்ணீர் - அரை டம்ளர்
  • பால் - முக்கால் டம்ளர்
  • சர்க்கரை - ஒன்னறை தேக்கரண்டி
  • இன்ஸ்டண்ட் காபி பொடி - அரை தேக்கரண்டி(ஃபுரூ (அ) சன் ரஸ்

செய்முறை

  • சுக்கு,ஏலம்,சோம்பு மூன்றையும் அரை டம்ளர் தண்ணிருடன் கலந்து கொதிக்க விடவும்.கால் டம்ளராக வற்ற விடவும்
  • சூடான பாலில் காப்பி பொடி, சர்க்கரை, கால் டம்ளர் சுக்கு சோம்பு தண்ணி கலந்து குடிக்கவும்.

குறிப்பு:

இதை தினமும் குடித்து மோஷன் பிராப்ள இல்லாமல் இருக்கும். பெண்களுக்கு வரும் வயிற்று வலிக்கும் இது மிக நல்லது.

வழங்கியவர்

Jaleela

பரிமாறும் அளவு

ஆயத்த நேரம்

சமைக்கும் நேரம்

1 person 3 min 7 min
  random food image


comments
ஜலீலாக்கா
ஏப்ரல் 27, 2008 - 4:28am - வழங்கியவர் thalika

ஜலீலாக்கா உண்மையைச் சொல்லுங்க..நீங்க வைத்தியர் தானே??எப்படி ஜலீலாக்கா இவ்வளவு குறிப்பு தெரிஞ்சு வச்சிருக்கரீங்க??அய்யோ மலைப்பா இருக்கு

புதினா டீ
ஏப்ரல் 27, 2008 - 7:50am - வழங்கியவர் Jaleela Banu

தளிகா
ஒரு ஜோக்
சினிமா நடிகைகள் எல்லாம் பேட்டி எடுக்கும் போது நீங்க நடிக்க வராமல் இருந்தால் என்னவா ஆகியிருப்பீர்கள் என்று கேட்டால்
டக்டரா ஆகி இருப்பேன், இஞ்ஞினியர் என்று அது சொல்லும் ஸ்டைலே வேறு.

டாக்ட்டரும் இல்லை ஒன்றும் இல்லை, இந்த காப்பி எங்க மாமியார் டாக்டர் சொல்லி கொடுத்தது.
எங்க சின்ன் நாத்தனார் லோ பீபி அடிக்கடி கீழே விழுந்து விடுவார், அப்போது தான் இந்த புதினா டீ ஆரம்பம்.
பட்டை பொடி டீ இன்னொரு நாத்தனார் என் வயசு தான் ஆனால் பார்க்க பத்தங்கிளாஸ் படிகும் பெண் போல் இருப்பார், இன்னும் ஒரு நாத்தனார் மிளகு டீ அது தொண்டை கர கரப்பு உடம்புக்கு கரம் கொடுக்கும் என்று நாலு வருடம் முன் ஒவ்வொருத்தரும் விசிட்டில் வரும் போது சொல்லி கொடுத்தது.
நான் இஞ்சி, ஏலக்காய் டீயில் பேமஸ்.
இன்னும் ஒன்று அக்கரா டீ இப்படி நிறை இருக்கு
ஜலீலா

ஜலிலா பானு- சோம்பு காப்பி
ஏப்ரல் 28, 2008 - 6:22am - வழங்கியவர் SHAHUL HAMEE

1.முழு சோம்பு போடனுமா,அல்லது சோம்பு தூள் போடனுமா,
2,காப்பி தூள் பதில் டீ தூள் சேர்க்கலாமா,
வஸ்ஸலாம் அன்புடன் சகோதரர் ஷாஹுல் ஹமீத்

ஜனாப்.ஷாஹுல் ஹமீது
ஏப்ரல் 28, 2008 - 9:06am - வழங்கியவர் Jaleela Banu

அஸ்ஸ்லாமு அலைக்கும் ஜனாப்.ஷாஹுல் ஹமீது அவர்கலே.

1. சோம்பு நாங்க மொத்தமா திரித்து வைத்து கொள்வோம் அதிலிருந்து போட்டு கொள்ளனும்.

2. நான் டீக்கு சுக்கு, சோம்பு,புதினா,பனங்கற்கணு,மிளகு எல்லாம் பொடித்து வைத்துள்ளேன் அது நம்ம வைத்துள்ள போகனும் டீ என்றால் ஈசியா குடிக்கலாம்.

பசங்க வயிற்று பிராப்ளம் என்று சொன்னால் உடனே இதை ஒரு ஸ்பூன் போட்டு கொள்வேன்.

ஜலீலா

ஜலிலா பானு-ஷாஹுல் ஹமீத்
மே 1, 2008 - 2:42am - வழங்கியவர் SHAHUL HAMEE

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) ஜலிலா பானு அவர்களே,
1.நான் கேட்ட கேள்விக்கு பதில் தரவில்லை.அதாவது
(காப்பிதூள் பதில் டீ தூள் சேர்க்கலாமா யென்று கேட்டேன் அதற்கு பதில் தரவில்லை)
2. நான் டீக்கு சுக்கு, சோம்பு,புதினா,பனங்கற்கணு,மிளகு எல்லாம் பொடித்து வைத்துள்ளேன் அது நம்ம வைத்துள்ள போகனும் டீ என்றால் ஈசியா குடிக்கலாம்(அதெபோல் இதற்கும் என்ன அளவு குறிப்பிடவும்-எவ்வளவு நாள் வைத்து சாப்பிடலாம்)
3. எந்த எந்த வைற்று வலிக்கு சாப்பிடலாம்.
வஸ்ஸலாம் அன்புடன் ஷாஹுல் ஹமீத்

ஜானாப் ஷாஷுல் ஹமீது சோம்பு டீ
மே 5, 2008 - 12:28am - வழங்கியவர் Jaleela Banu

ஜானாப் ஷாஷுல் ஹமீது சோம்பு டீ

தாமதமான பதில்லுக்கு மன்னிக்கவும்.

1) காப்பி தூளுக்கு பதில் டீ தூள் சேர்க்கலாம். இன்று கூட என் வீட்டில் (சுக்கு, சோம்பு, ஏலம், பனங்கற்கண்டு, புதினா ) தூள் போட்ட டீ தான்.
2) இந்த தூள் தண்ணீர் படமால், நல்ல காற்று புகா கண்டெயினரில் போட்டு வைத்தால் ஆறு மாதம் கூட வைத்திருக்கலாம். நான் திரித்து வைத்து முன்று மாதம் ஆகிறது.
3) ஆண்கலும்,பெகளும் சாப்பிடலாம் எல்லவிதமான, வயிற்று வலி, கேஸ் பிராப்ளம், மற்றும் உள்ள உபாதைகளுக்கு நல்லது.

குறிப்பு:

எந்த வகையான பவுடர் திரிப்பதாக இருந்தாலும் நல்ல வெயிலில் காய்ந்த மிக்சியில் திரித்து விட்டு பிறகு சிறிது நேரம் ஆறவைக்கனும்.
ஏனென்றால் மிக்சி உடைய சூடும் ஆறனும். பிறகு ஒரு தட்டில் கொட்டி ஆறவைத்து பிறகு ஈர கையில்லாமல், கரண்டியும் ஈரமில்லமல் இருக்கனும்,ஒரு டப்பாவில் போட்டு வைக்க வேண்டும்.

இப்போது எததனை நாள் வேண்டு மானாலும் வைத்து கொள்ளலாம்.

ஜலீலா

ஜனாபா ஜலிலா பானு- சோம்பு டீ
மே 5, 2008 - 7:27am - வழங்கியவர் SHAHUL HAMEE

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) ஜலிலா பானு-பதில் தந்ததுக்கு நன்றி,ஆனால்(சுக்கு,சோம்பு,ஏலம்
,பனங்கற்கண்டு,புதினா,)
ஒவ்வொன்றும் அளவு குறிப்பிடவில்லை.தயவு செய்து குறிப்பிடவும்,
குறிப்பு:வெயிலில் மிக்ஸியை காய வைக்க வேண்டும்மா.அல்லது பவுடர் செய்யக்கூடிய பொருளை காயவைக்கவேண்டும்மா,
வஸ்ஸலாம்-அன்புடன் சகோதரர் ஷாஹுல் ஹமீது,