பேச்சுலர்ஸ் மெது வடை

தேதி: April 27, 2008

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (1 vote)

 

சிறு பருப்பு - ஒரு கோப்பை
ஜவ்வரிசி - ஒரு தேக்கரண்டி
பிரெட் - இரண்டு துண்டு
நறுக்கிய வெங்காயம் - அரைக்கோப்பை
நறுக்கிய பச்சைமிளகாய் - இரண்டு
நறுக்கிய இஞ்சி - ஒரு தேக்கரண்டி
நறுக்கிய கொத்தமல்லி - இரண்டு தேக்கரண்டி
நறுக்கிய கறிவேப்பிலை - ஒரு தேக்கரண்டி
ஆப்பச்சோடா - ஒரு சிட்டிக்கை
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
உப்பு - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - பொரிக்க தேவையானவை


 

பிரெட் துண்டுகளை மிக்ஸியில் போட்டு பொடித்து வைக்கவும்.
பருப்பில் ஜவ்வரிசியைச் சேர்த்து வெந்நீரில் அரைமணி நேரம் ஊறவைக்கவும்.
பிறகு அவற்றை அரவை இயந்திரத்தில் போட்டு சிறிது சிறிதாக நீரைச் சேர்த்து கொர கொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
பிறகு அதில் மேற்கூறிய அனைத்துப் பொருட்களையும் போட்டு கலக்கவும்.
சட்டியில் எண்ணெயை காயவைத்து மாவுக்கலவையிலிருந்து ஒரு எலுமிச்சையளவு எடுத்து தண்ணீர் தடவியுள்ள உள்ளங்கையில் வைத்து தட்டி நடுவில் ஒட்டை செய்து எண்ணெயில் போட்டு சிவக்க பொரித்தெடுக்கவும்.
இந்த சுவையான வடையை சாம்பார் மற்றும் தேங்காய் சட்னியுடன் சூடாக பரிமாறவும.


மேலும் சில குறிப்புகள்


Comments

மனோகரி அக்கா,
சிறுபருப்பு என்றால் என்ன? பயற்றம் பருப்போ?

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

டியர் அதிரா எப்படி இருக்கீங்க? சிறுபருப்பு என்பது பயத்தம் பருப்பு தான், இந்த பருப்பில் செய்யும் வடை மிகவும் சுவையாய் இருக்கும் செய்து பாருங்க நன்றி.

மிக்க நன்றி,
நான் நலம், நீங்கள் நலமோ... (ஸ்னோ ஸ்ரோமில்),செய்துவிட்டுச் சொல்கிறேன், நீங்கள் உடனுக்குடன் பதிலளிப்பது எல்லோருக்கும் ஊக்கத்தைக் கொடுக்கும் என்று நம்புகிறேன்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

மெதுவடை,
மனோகரி அக்கா, இந்த வடை செய்து, சுடச் சுட சாப்பிட்டு விட்டு, இப்பத்தான் பதிவு போட வந்தேன், சுவையான வடைகள், என் கணவரே முளுவதையும், சுவீட் சில்லி ஷோசுடன் முடித்துவிட்டார். ஆனால் என்னால் ஓட்டை போட முடியவில்லை, வெடிப்பு வந்தது எனவே தட்டை வடைகளாக்கிப் போட்டேன்.

கடலைப் பருப்பை விட பயற்றம் பருப்பு உடம்புக்கும் நல்லதுதானே. படம் எடுத்தேன், புது PC என்பதால், படங்கள் இணைப்பது பற்றி இன்னும் பார்க்கவில்லை, எப்படியும் விரைவில் அனுப்புவேன். ஏனைய பின்னூட்டங்களும் விரைவிலேயே அனுப்பி வைக்கிறேன்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி அதிரா உடனே செய்து பார்த்து பின்னூட்டம் அனுப்பியதற்கும், குறிப்பை படங்களாக எடுத்ததற்கும். அவற்றை பார்த்த பிறகு வெடிப்பிற்காக காரணத்தை கூற முயற்சி செய்கின்றேன். எனக்கு அவ்வாறு நிகழ்வதில்லை, பார்க்கவும் ருசியும் கூட உளுந்து வடைப் போல் தான் இருக்கும். பரவாயில்லை காரணத்தைப் பிறகு ஆராயலாம். தங்களின் முயற்சிக்கு என் மனமார்ந்த நன்றி.

திருமதி. அதிரா அவர்கள் இந்த குறிப்பினைப் பார்த்து தயாரித்த மெதுவடையின் படம்

<img src="files/pictures/bachelorsvadai.jpg" alt="picture" />