காய்கறி சேன்வெஜ் பரோட்டா

தேதி: April 27, 2008

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

முட்டை -- 3 என்னம்
சின்ன வெங்காயம் -- 10என்னம் (பொடியாக அரிந்தது)
பச்சை மிளகாய் -- 1 என்னம் (பொடியாக நறுக்கியது)
கேரட் -- 1ல் பாதி (துருவியது)
பீட்ரூட் -- 1 துண்டு (துருவியது)
பட்டாணி -- 1/4 கப் (வேகவைத்து ஒன்றிரண்டாக மசித்தது)
தக்காளி -- 1 என்னம் (வேகவைத்து தோலுரித்து மசித்தது)
உருளைக்கிழங்கு -- 1 துண்டு (வேகவைத்து மசித்தது)
மிளகுத்தூள் -- 1 1/2 டீஸ்பூன்
சீரகத்தூள் -- 1 டீஸ்பூன்
சிவப்பு மிளகாய் தூள் -- தே.அ
கரம் மசாலாதூள் -- 4 சிட்டிகை
உப்பு -- தே.அ
எண்ணைய் -- தே.அ


 

வாணலியில் எண்ணையை ஊற்றி வெங்காயம், பச்சைமிளகாய் போட்டு ஒரு வதக்கு வதக்கி உப்பு சேர்க்கவும்.
பின் தக்காளியை சேர்த்து நன்கு வதக்கி எல்லா தூளையும் சேர்த்து நன்கு கிளறவும்.
பின் எல்லா காய்கறிகளையும் ஒன்றன்பின் ஒன்றாக போட்டு நன்கு வதக்கிக் கொள்ளவும்.
கொஞ்ச நேரம் வதக்கி பின் ஆறவைக்கவும்.
பின் முட்டையை அடித்து அதனுடன் காய்கறிகலவையை போட்டு நன்கு கலக்கவும்.

பின் அவற்றை சிறு சிறு ஆம்லேட்களாக வார்த்து எண்ணையை ஊற்றி திருப்பி போட்டு நன்கு வேகவைத்து எடுக்கவும்.

ரெடிமேட் பரோட்டா (அ) ஃப்ரோசன் பரோட்டா (அ) கடையில் வாங்கும் பரோட்டாவின் உள்ளே வைத்து உருட்டி சான்ட்விச்சாக சாப்பிட நன்றாக இருக்கும்.


குழந்தைகள் காய்கறி சாப்பிட மறுக்கும் போது சத்து தர, இது போல செய்து தர எல்லா சத்தும் சேரும்.

மேலும் சில குறிப்புகள்