ஸ்டஃப்டு சப்பாத்தி

தேதி: April 27, 2008

பரிமாறும் அளவு: 2 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கோதுமை (அ) சோயா மாவு -- 1 கப்
கேரட் -- பாதி என்னம் (துருவியது)
பீட்ரூட் -- 1 துண்டு (துருவியது)
உருளை கிழங்கு -- 1 துண்டு (துருவியது)
உப்பு -- தே.அ
மிளகாய் தூள் -- காரத்திற்கேற்ப
சீரகத்தூள் -- 1/2 டீஸ்பூன்
சின்ன வெங்காயம் -- 1 டீஸ்பூன் (அரைத்த விழுது )
நெய் -- 1 ஸ்பூன்


 

வாணலியில் எண்ணைய் ஊற்றி வெங்காய விழுது சேர்த்து ஒரு வதக்கு வதக்கி அதனுடன் காய்கறிகளை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கவும்.
அதனுடன் சீரகத்தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.

கோதுமை/ சோயா மாவை உப்பு,தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசையவும்.

பின் அதனை சப்பாத்தியாக இடும் முன் இந்த காய்கறி கலவையை சேர்த்து நன்கு பிசைந்து சப்பாத்தியாக இட்டு தவாவில் போட்டு நெய் விட்டு திருப்பி போட்டு வெந்ததும் சாப்பிட சுவையாக இருக்கும்.


காய்கறி சாப்பிடாத குழந்தைகளுக்கு இந்த மாதிரி சாப்பிட பிடித்தமாதிரி இருக்கும்.
ஒன்று சாப்பிட்டாலே வயிறு நிறைய சாப்பிட்ட மாதிரி இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்