உள்நுழைதல்

Sponsored links


வாக்கெடுப்பு






புதிதாக இணைந்தவர்கள்

சமீபத்தியக் கருத்துக்கள்

Sponsored link


 

பருப்பு, காய்கறி சாதம் (குழந்தைகளுக்கு)

 


தேவையானப் பொருட்கள்

  • சாதம் வைக்கும் போதே இதெல்லாம் செய்ய வேண்டும்.
  • அரிசி -- ஒரு கைப்பிடி
  • கேரட் -- 1 துண்டு (நறுக்கியது)
  • பருப்பு (துவரை/பாசி பருப்பு ) -- 1 ஸ்பூன்
  • உருளைக்கிழங்கு -- 1 துண்டு
  • மஞ்சள் தூள் -- 1 சிட்டிகை
  • கொண்டைக்கடலை -- 10 என்னம் (8 மணி நேரம் ஊறவைத்தது)
  • நெய் -- 1 டீஸ்பூன்

செய்முறை

  • அரிசி, பருப்பை கழுவி மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றவும்.
  • அதனுடன் உருளை, கேரட்டை சேர்க்கவும்.
  • துளி உப்பு சேர்த்து மஞ்சள் தூள் சேர்க்கவும்.
  • கொண்டைக்கடலையை தனியாகவும் வைக்கலாம்.. இல்லை என்றால் கூடவும் வைக்கலாம்... (தோலை உரித்து பின் சாதத்துடன் சேர்க்கவேண்டும்)
  • குக்கரில் வேகவைத்து எடுத்து எடுக்கவும்.
  • பின் கொண்டைக்கடலையில் தோலை நீக்கி பின் எல்லா காய்கறி, அரிசி,பருப்பை நன்கு மசிக்கவும்.
  • இதனுடன் நெய்யை சேர்த்து குழந்தைகளுக்கு ஊட்டலாம்..

குறிப்பு:

எல்லாவகையான சத்துகளும் நிறைந்தது. 6 மாத குழந்தைகள் முதல் இதை கொடுக்கலாம்.

வழங்கியவர்

Subha Jayaprakash -- Dubai

ஆயத்த நேரம்

சமைக்கும் நேரம்

5 min 15 min
random food image


comments
சுபா
ஏப்ரல் 28, 2008 - 1:37am - வழங்கியவர் thalika

சுபா கொண்டைக்கடலைக்கு சுமார் 8 விசில் வேனுமே..வெள்ளைக்கு 4 விசில் வேனுமே ஒன்றாக வேகவைக்க முடியாதே?

சுபா
ஏப்ரல் 28, 2008 - 2:28am - வழங்கியவர் MarliyaNoohu

6 மாத குழந்தைக்கு கொண்டைகடலைய்யா?இது ஒத்துக்காதே சுபா?கேஸ் பிராப்லம் வருமே?விளக்கம் பிளீஸ்..
அன்புடன்,
மர்ழியாநூஹு

தளிகா
ஏப்ரல் 28, 2008 - 2:30am - வழங்கியவர் MarliyaNoohu

இல்லை தளிகா ஊற வைத்து போடுவாதால் 3,4 விசில் போதும்..
அன்புடன்,
மர்ழியாநூஹு

அதில்லை மர்ழியா
ஏப்ரல் 28, 2008 - 2:42am - வழங்கியவர் thalika

அதில்லை மர்ழியா..சாதம்,கேரட்டுக்கு 1 விசில் போதுமே அப்ப கடலை சேத்தால் தனியா வேகாமல் நிற்குமே அதான் கேட்டேன்.

தளிகா,
ஏப்ரல் 28, 2008 - 2:48am - வழங்கியவர் kr

தளிகா,
மெயில் கிடைத்ததா?

தளிகா,கே ஆர்
ஏப்ரல் 28, 2008 - 3:16am - வழங்கியவர் MarliyaNoohu

ஓஹ் ஆமாம்..அதை நான் கவனிக்கல..சுபா வந்துதான் சொல்லனும்...கே ஆர் மெய்ல் மெய்ல்ன்னு ஏதோ கேட்கிறாங்க அவன்fகளை போஇ பாருங்க இல்லைனே நேரா ஓடி வந்துடுவாங்க போல...

வேலை ஆரம்பம் பெரிய வேலை என் பொண்ணுக்கு சாப்பாடு கொடுக்கனும்..வந்து மற்றவைகள்..

ஆமாம் கே.ஆர்(என்னோட இன்சியல்)உங்க உன்மையாண் பெயர் என்ன?
அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புள்ள தளிகா, மர்லியா,கேஆர்,
ஏப்ரல் 30, 2008 - 3:10am - வழங்கியவர் Subha Jayaprakash

அன்புள்ள தளிகா, மர்லியா,கேஆர்,
கொண்டைக்கடலையை அதனுடன் சேர்த்து அல்லது தனியாக ஹைய்யில் 1விசில் வந்ததும் சிம்மில் 10 நிமிடம் வைத்து இறக்கவும்.
இப்போது சரியாக பட்டு போல் வெந்து இருக்கும்.
மேலும் கொண்ணைக்கடலையில் ப்ரோட்டின் நிறைய உள்ளது.. இது குழந்தைகளுக்கு மிகவும் நல்லது...
நாங்கள் 1 வயது வரை குழந்தைகளுக்கு குழந்தை மருந்து கொடுப்போம்...
தினமும் பெருங்காயத்தை தண்ணீரில் கரைத்து கொடுப்போம்.. அதை தினமும் செய்வதால் கேஸ் ப்ராப்ளம் கண்டிப்பாக வராது.. இது உறுதி...