கேபேஜ், காலிஃப்ளவர் முட்டை பொரியல்

தேதி: April 27, 2008

பரிமாறும் அளவு: நான்கு நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கேபேஜ் - 100 கிராம்
காலிஃப்ளவர் - 150 கிராம்
முட்டை - ஒன்று
வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
இஞ்சி பூண்டு பேஸ்ட் - ஒரு தேக்கரண்டி
பட்டை - ஒன்று
கறிவேப்பிலை - சிறிது
கொத்தமல்லி - சிறிது
பச்சை மிளகாய் - ஒன்று
மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - முக்கால் தேக்கரண்டி
எண்ணெய் - மூன்று தேக்கரண்டி


 

காலிஃப்ளவர், முட்டை கோஸை நன்கு கழுவி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வாணலியை காய வைத்து அதில் எண்ணெய் ஊற்றி பட்டை, கறிவேப்பிலை போட்டு வெடிக்க விட்டு, வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி போட்டு வதக்க வேண்டும்.
பிறகு இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு இரண்டு நிமிடம் வதக்கி தக்காளியை பொடியாக நறுக்கி சேர்த்து அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு தூள் சேர்த்து நன்கு கிளறி இரண்டு காயையும் சேர்த்து கிளறி தீயை சிம்மில் வைத்து மூடி போட்டு ஐந்து நிமிடம் வேக வைக்க வேண்டும்.
பொடியாக நறுக்கி இருப்பதால் சீக்கிரம் வெந்து விடும்.
பிறகு ஒரு முட்டையை அடித்து ஊற்றி கிளறி மறுபடியும் மூடி போட்டு இரண்டு நிமிடம் சிம்மில் வைக்கவும்.
பிறகு நன்கு கிளறி கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.


ரசம் சாதத்திற்கும், சாப்பாத்திக்கும் தொட்டு கொள்ள நல்லா இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

ஹாய் ஜலிலா அக்கா,

இன்று உங்களின் இந்த முட்டை பொரியல் ரெஸிப்பி செய்து பார்த்தேன். என்னிடம் இன்றைக்கு கேபேஜ் இல்லை, அதனால் வெறும் காலிப்ளவரில் முட்டை சேர்த்து செய்தேன். ரொம்ப ரொம்ப டேஸ்டியான ஒரு பொரியல் கிடைத்தது!.
நான் இதுநாள் வரை வெறும் முட்டையைதான் பொரியல் மாதிரி செய்திருக்கிறேன். இதுதான் முதல் தடவை காய்களோடையும் சேர்த்து செய்யலாமென்று தெரிந்து கொண்டு, ட்ரை பண்ணேன். சுவை அருமை, அருமை!! நன்றி!

அன்புடன்,
ஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

டியர் ஸ்ரீ முட்டையோடு கேபேஜ் இன்னும் ருசியாக இருக்கும்.
செய்து பாருங்கள்
உங்கள் பின்னூடத்துக்கு மிக்க நன்றி
ஜலீலா

Jaleelakamal