தேவையானப் பொருட்கள்
- கேபேஜ் - நூறுகிராம்
- காலிபிளெவர் - நூற்றி ஐம்பது கிராம்
- முட்டை - ஒன்று
- வெங்காயம் - ஒன்று
- தக்காளி - ஒன்று
- இஞ்சி பூண்டு பேஸ்ட் - ஒரு தேக்கரண்டி
- பட்டை - ஒன்று
- கருவேப்பிலை - சிறிது
- கொத்து மல்லி - சிறிது
- பச்சமிளகாய் - ஒன்று
- மிளாகாய் தூள் - அரை தேக்கரண்டி
- மஞ்சள்தூள் - கால் தேக்கரண்டி
- உப்பு - முக்கால் தேக்கரண்டி
- எண்ணை - முன்று தேக்கரண்டி
செய்முறை
- காளிபிளெவர், முட்டை கோசை நன்கு கழுவி பொடியா அரிந்து கொள்ளவும்.
- வானலியை காய வைத்து அதில் எண்ணை ஊற்றி பட்டை கருவேப்பிலை போட்டு வெடிய விட்டு, வெங்காயத்தை நீளவாக்கில் அரிந்து போட்டு வதக்க வேண்டும்.
- பிறகு இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு இரன்டு நிமிடம் வதைக்கி தக்காளியை பொடியாக அர்நிது சேத்து அதில் மிளகாய் தூள் மஞ்சள் தூள், உப்பு தூள் சேர்த்துநன்கு கிளறி இரண்டு காயையும் சேர்த்து கிளறி தீயை சிம்மில் வத்து முடிபோட்டு ஐந்து நிமிடம் வேக வைக்கவேண்டும்.
- பொடியாக ஐந்து இருப்பதால் சீக்கிரம் வெந்து விடும்.
- பிற்கு ஒரு முட்டைய அடித்து ஊற்றி கிளறி மறுபடியும் முடி போட்டு இரண்டு நிமிடம் சிம்மில் வைகக்வும் .
- பிறகு நன்கு கிளறி கொத்து மல்லி தழை தூவி இரக்கவும்.
-
-
-
-
குறிப்பு
ரசம் சாத்திற்கும், சாப்பாத்திக்கும் தொட்டு கொள்ள நல்ல இருக்கும்.
பரிமாறும் அளவு
| ஆயத்த நேரம்
| சமைக்கும் நேரம்
|
|
நான்கு நபர்களுக்கு |
10 min |
10 min |