கோடைக்கேற்ற உணவு தயாரிப்பு

கோடை காலத்திற்கேற்ற உணவு வகைகளை பற்றி இந்த புதிய ' த்ரட்டில் ' பேசுவோமா? கோடைக்கேற்ற உணவு வகைகளில் சமைப்பதற்கு எளிதாகவும் அடுப்பில் வேக வைக்கத்தேவை இல்லாத அல்லது அதிக நேரம் அடுப்பருகே நின்று சமைக்கத்தேவை இல்லாத உணவு வகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கலாம். மற்றபடி கோடை காலத்தில் உடல்நலம் காப்பது பற்றியும் பேசலாம்.

நானே ஆரம்பித்து வைக்கிறேன்.
-----------------------
1.வேக வைக்கத் தேவைஇல்லாத சாலட் வகைகள்:
கேரட், தக்காளி, வெள்ளரி, வெங்காயம் சேர்த்தது.
2.பழ சாலட்கள்
பழங்களை நறுக்கி தயிரில் போட்டு சிறிது உப்பு சேர்த்து சாப்பிடலாம்.
3. அவலை ஊறவைத்து வெல்லம் மற்றும் பழங்கள் சேர்த்து சிற்றுண்டியாக உண்ணலாம்.
4.மற்றும் தயிர் அவல், பாலில் ஊறவைத்த அவல் இவற்றை அடுப்பில்லாமலே தயாரித்து சாப்பிடலாம்.

அடுத்து எளிய முறையில் தயாரிக்கும் ரெஸிப்பீஸ்:
1.தயிர் சேமியா ( இது என்னுடைய குறிப்பில் உள்ளது.)
2.பாசிப்பருப்பு சுண்டல்
3. மோர்குழம்பு
4.அவல் உப்புமா
5. ஜவ்வரிசி உப்புமா ( இதுவும் என்னுடைய குறிப்பில் உள்ளது.)
இன்னும் உங்களுக்கெல்லாம்தான் நிறைய தெரியுமே. எழுதுங்கள் சகோதரிகளே!

ஹாய் மாலதிக்கா,நல்ல திரட்தான் இது...எனக்கு இப்ப சடன்னா மூலைக்கு படுறது ஒன்னுத்தான் நெய் சோறு,தேங்காய் சோறு,பிரியாணி இதெல்லாம் அதிக வெயில் இருக்குறப்ப சாப்பிட்டால் பட படன்னு வரும்...இவைகளை கொஞ்சம் அவாய்ட் பண்றது பெட்டர்...
அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

ஆமாம் மர்ழியா!.. நீங்க சொல்வது சரி. ஸ்பைசியான ஐட்டங்களை இப்ப தவிர்க்கவேண்டும். தேங்காய் பால் கஞ்சி, இட்லி, பழைய சாதம் வித் தயிர், இதெல்லாம் வயிற்றுக்கு இதமாக இருக்கும். கம்பு பிடித்தவர்கள் கூழ் செய்து அதில் சின்ன வெங்காயம், வெள்ளரிக்காய் பொடிப்பொடியாக நறுக்கிப்போட்டு குடிக்கலாம்.
அடுப்பில் வைத்து சமைக்காத ரெஸிப்பீஸ் இருந்தால் எழுதுங்க மர்ழியா.

மாலதியக்கா,
கொஞ்ச நாளாக காணவில்லை. நலமா?. கோடை வெயில் எல்லோரையும் வாட்டுகிறதா? உண்மைதான் நான் அறிந்து மோர், தேசிக்காய் தண்ணீர், சர்பத் நல்லது குடிப்பதற்கு. அடிக்கடி குளிர் நீரில் முகம் கழுவ வேண்டும். பருத்தி ஆடைகள்தான் குளிர்மையைக் கொடுக்கும். பிறகும் யோசித்து எழுதுகிறேன்.

மர்ழியா நலமா?

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

ஆமாம் மாலதி அக்கா நீங்க சொல்லுறது சரிதான்..அதென்ன கம்பு பிடித்தவர்கள்?அப்படின்ன என்ன ?

புரூட் ஸாலட்,இளம் தயிர்,கடல் பாசி,யோகார்ட்,இதெல்லாம் ரொம்ப நல்லது அதிகம் தண்ணீர் குடிப்பது,தினம் தலை குளிப்பது...அடிக்கடி பாடி வாஷ் பண்ணுறது இதெல்லாம் நம்மை பிரஷ்சா வைத்துக்க உதவும்..வியர்குறு நம்மை அண்டாது..(சமையல் பற்றிய திரட்டில் குளிப்பை பற்றி சொல்லியதற்க்கு மன்னிக்கவும் மாலதிக்கா)

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

ஹஹஹா இன்னைக்கி நல்ல ஜோக் மர்ழியா..அதாவது கம்புன்னா உங்க ரேஞ்சுக்கு குச்சின்னு நெனச்சுக்காதீங்க..கம்பு,ராகி இருக்கில்லையா..அதில் கம்பங்கூழ் ரோட்டோரத்தில் பார்க்கலாமே அதை சொன்னாங்க

ஆஹா ஆரம்பிச்சுட்டாங்கையா ஆரம்பிச்சுட்டாங்க....அதென்ன தேசிக்காய் தண்ணீர் அப்படினா தேங்காய் தண்ணீரா?அதிரா இப்பதான் மாலதிக்காவிடம் கம்பு பற்றி பதிவு போட்டுட்டு வாரேன்..அதுகுள்ள நீங்க?எங்க போக நான்?

நான் நலம் அதிரா ரொம்ப நாள் ஆயிற்று நாம் பேசி...பசங்கள்ளாம் நல்மா?இப்ப அங்கு ஏதோ விடுதலை புலீ பிரட்சனையாமே?இப்ப சரியகிட்டா?

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

என்ன இன்னும் நித்திரை வரவில்லையா? நான் செல்வியக்காவிற்காக காத்திருக்கிறேன்.

ஐயையோ மர்ழியா... நான் எதுபற்றியும் கதைக்கமாட்டேன் ஒன்லி சமையல் மட்டும்தான்.
தேசிக்காய் அதுதான் " தாய் பரட்டை, மகள் உருண்டை - அது என்ன?" விடை எலுமிச்சை.
புரிந்ததா?
தளிகா, நான் கூட ஏதோ தடி என்றுதான் நினைத்தேன்.. ஆனால் எல்லாவற்றிற்கும் ஏன் விளக்கம் கேட்டுகொண்டிருப்பான் என்று விட்டு விட்டேன். நல்ல காலம் சொன்னீங்கள்.

இந்தப் பதிலை அனுப்ப நிறைய நேரம் கஸ்டப்பட்டிட்டேன். அவ்வளவு ஸ்லோவாக இருக்கு.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

எஸ்...... கடல் பாசியை மறந்துவிட்டேன் மர்ழியா!...... ஞாபகப்படுத்திவிட்டீர்கள். தளிகா சொன்னமாதிரி கம்பு என்பது ஒரு வகை தானியம். சரி தளிகா..... விளக்கம் கரைக்ட். எங்கே அடுப்பில் சமைக்காத ரெஸிப்பீஸ்? ரெடி பண்ணிட்டீங்களா? ஜலீலா புதுசு புதுசா சட்...சட்...னு சொல்லிடுவாங்களே!

கேபேஜ் சாலட்

கேபேஜ் - 1 கப் நிள வாக்கில் அரிந்தது.
பெரிய வெங்காயம் - 1 நிள வாக்கில் அரிந்தது
சின்ன தக்காளி - 5
முளை விட்ட ப்யறு - 1 கப்
வால்நட் ரோஸ்ட் பண்ணினது - 1 தே.க
வெள்ளரிக்காய் - 1 கப் நிள வாக்கில் அரிந்தது
குடமிளகாய் - மஞ்சள் நிறமுள்ளது 1 நிள வாக்கில் அரிந்தது
உப்பு - 1 தே.க
மிளகு - 1 தே.க
ஆலிவ் ஆயில் - 1 தே.க

எல்லாவற்றையும் ஒன்றாக ஒரு பௌலில் போட்டு நன்றாக மிக்ஸ் பண்ணி ப்ரிட்ஜில் வைத்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.

ஹாய் டியர் அன்புள்ள(கூழ் பண்ணத்தான்)நீங்க இப்ப சொன்னது இதோ தம்மாந்துண்ண்டு எழுமிச்சையா?என்னமே நீங்க இதயா கேட்டேன் அய்யே அசிங்கமா இருக்கேம்மே...

தளிகா இது ரொம்ப ஓவ்ர் என்னனுதான் கேட்டேன் குச்சியான்னா கேட்டேன் ஏன் இப்படி அசிங்க படுத்துறீங்க? ஷேம் ஷேம் ஆயிட்டு எனக்கு

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

மேலும் சில பதிவுகள்