ரெட் பீன்ஸ் தொக்கு

தேதி: April 30, 2008

பரிமாறும் அளவு: 3 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

ரெட் பீன்ஸ் - 1 டின்
பல்லாரி - 1
தக்காளி - 2
நீளமான குடை மிளகாய் - 1
பச்சை மிளகாய் - 1
மசாலா தூள் - 1/2 மேசைக் கரண்டி
வற்றல் தூள் - 1/4 தேக்கரண்டி
சோம்பு தூள் - 1/4 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - சிறிதளவு
மிளகு தூள் - சிறிதளவு
புளி - பாதி எலுமிச்சை அளவு
பூடு - 3 பற்கள்
நச்சீரகம் - 1/4 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி தழை - சிறிதளவு
எண்ணெய் - 2 மேசைக் கரண்டி
உப்பு - தேவையான அளவு


 

ரெட் பீன்ஸ் டின்னில் உள்ள நீரை வடித்து விடவும் .
புளியை ஊற வைத்து நன்றாக கரைத்து வடிகட்டி வைக்கவும்.
பல்லாரி, குடை மிளகாய், பச்சை மிளகாய், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்
அடுப்பில் சட்டியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் நச்சீரகம் போட்டு பொரிந்ததும் பூண்டை நசுக்கி போடவும்.
அதில் பல்லாரி, தக்காளி, மிளகாய் அனைத்தையும் சேர்த்து நன்றாக வதக்கவும்.
வதங்கியதும் அனைத்து மசாலா தூள்களையும் சேர்த்து வதக்கவும். சிறிதளவு தண்ணீர் சேர்த்து மசாலாவை பிரட்டவும். இப்போது உப்பு சேர்த்து கறிவேப்பிலையையும் நறுக்கி போடவும்.
அதில் ரெட் பீன்ஸை சேர்த்து கிளறவும்.
மசாலா பீன்ஸ் உடன் சேர்ந்ததும் புளிக்கரைசலை ஊற்றி கொத்தமல்லித்தழை சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.
அகப்பையால் கொஞ்சம் மசித்து விடவும்.
கிரேவி போல் இறுகி தொக்கு பதம் வந்து எண்ணெய் விட ஆரம்பித்ததும் இறக்கி விடவும்.
இது சப்பாத்தி, ஆப்பத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்.


மேலும் சில குறிப்புகள்