கணக்குகள், விடுகதைகளை இங்கே கேட்போம் - 3

"கணக்குகள், விடுகதைகளை இங்கே கேட்போம் 2" - வது பாகம் நீளமானதால் இது 3 - வது பாகமாகிவிட்டது. அங்குள்ள பதிவிற்கான பதில்களை இங்கே தொடர்வோம்.

விஜி! வட்டத்தினுள் நீங்கள் எழுதிய எண் 19. சரியா?

எப்பிடி என்று சொல்ல முடியுமா? தெரிஞ்சுக்க ஆசை

அஸ்கு.....புஸ்கு.....!
சொல்லமாட்டேனே...:)) நான் தான் இது 'மேஜிக்' கணக்குன்னு சொன்னேனே! கவனிக்கலையா? உங்களின் ஆர்வத்தை பாராட்டுகிறேன். ஆனா எப்படின்னு நீங்களே கண்டுபிடிங்க. கண்டுபிடித்தால் அது எப்படின்னு இங்கே சொல்லாதீங்க. அப்போதான் மற்றவர்களும் எப்படின்னு யோசிக்க முயற்சி செய்வார்கள். அதனால்தான்! :) கண்டுபிடிக்க வழியை சொன்னால் அதில் சுவாரஸ்யமே இருக்காது. ஸாரி விஜி...! என் மீது கோபமில்லையே...?

ஹாய் கோதை,
நான் நல்ல இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க?.
சாரி நேத்து பதிவை கொடுத்ததும் தூங்க போய்ட்டேன். அதுனாலதான் உங்க பதிலை பார்க்க முடியலை. எனக்கும் குறுக்கெழுத்துப் போட்டின்னா ரொம்ப பிடிக்கும். கண்டிப்பா தொடரலாம்
Rajini

மேடம் இது நல்லா இருக்கே எனக்கு இதுப்போல கேட்க பிடிக்கும், நானும் நம்பர் சொல்லவா?
a) 100
b) 75
c) 55

இங்க விடுகதை கணக்கு எல்லாம் கேட்பது போல என்னோட ப்ரண்டுகிட்ட கேட்டு நேத்து மெயில் அனுப்பினேனா அதுக்கு அவ கரைக்டா பதில் சொல்லிட்டா, அவ வேற ஒரு கேள்வி கேட்டா அதுக்கு எனக்கு பதில் தெரியல நானும் நேத்து நைட்ல இருந்து யோசிக்கிறேன் சரி அதான் நம்ம ப்ரண்ட்ஸ் கிட்ட அவங்களயும் குழப்பலாம்னுட்டு இங்க வந்துட்டன், நானே போடலாம்னு தான் பார்த்தேன் ஆனா வரமாட்டேங்குது.
கணக்கு:
4:3 என்ற விகிதத்தில் நீளம், அகலம் உள்ள ஒரு செவ்வக மைதானத்தை சுற்றி, புறப்பட்ட இடத்திற்கு வர ஒருவர் எடுத்துக் கொண்ட நேரம் 42 நிமிடங்கள். அவர் அந்த மைதானத்தின் ஒரு மூலையில் இருந்து எதிர் மூலைக்கு குறுக்காக(diagnol) நடந்தால் அவர் எடுக்கும் நேரம் எவ்வளாவு?

கோதை! உங்களுக்கான விடை எண் 15. சரிதானே? :)

எப்படி இது கொஞ்சம் சொல்லி கொடுங்களேன் நானும் மத்தவங்க கிட்ட கேப்பேன மேடம். சரி நானே கண்டு பிடித்து பார்க்கிறேன். முயற்சி செய்வோம்

15 நிமிடங்கள் என நினைக்கிறேன்.

Asma, உங்கள் மேஜிக் கண்க்கிற்கு என்னால் விடை சொல்ல முடியும். நீங்கள் விரும்பினால் இங்கு தெரிவிக்கிறேன். சோதிக்க நீங்கள் வேண்டுமானால் 3 நம்பரை சொல்லுங்கள்.

அன்புடன்,
Ishani

அன்புடன்,
இஷானி

அன்புள்ள இஷானி! இங்கே நீங்கள் தெரிவிக்கவேண்டாம், ப்ளீஸ்! எல்லோரையும் கொஞ்சம் சிந்திக்க வைக்கலாமே? ஓ.கே. வா? சரி, டெஸ்ட்டுக்காக உங்களுக்கு நான் சொல்லும் எண்கள் இதோ:
(a) 10
(b) 76
(c) 76
வட்டத்தினுள் உள்ள எண்ணை சொல்லுங்கள்!

மேலும் சில பதிவுகள்