கணக்குகள், விடுகதைகளை இங்கே கேட்போம் - 3

"கணக்குகள், விடுகதைகளை இங்கே கேட்போம் 2" - வது பாகம் நீளமானதால் இது 3 - வது பாகமாகிவிட்டது. அங்குள்ள பதிவிற்கான பதில்களை இங்கே தொடர்வோம்.

கண்டுபிடித்தேன். ஆனால் நான் நேற்று கொஞ்சம் வேலையாக இருந்தேன். வீட்டில் கெஸ்ட் வந்திருந்தார்கள். அதுதான் அப்பா கோபம் ஒன்றும் கிடையாது. நிங்க நம்பர் சொல்லுங்க நான் சொல்றேன்.

நன்றி அஸ்மா

அன்புள்ள விஜி! இப்போதான் உங்கள் பதிவை பார்க்கிறேன். உங்களுக்கு ஏதோ கோபமோ என்று நினைத்தேன் :) கண்டுபிடித்தவரை ரொம்ப சந்தோஷம்! இதோ நீங்கள் கண்டுபிடிக்கவேண்டிய கணக்கு:
(a) 91
(b) 25
(c) 72
நடுவில் உள்ள எண்?

3

3

சரிதான் விஜி! இப்போ நீங்களே கண்டுபிடித்தது உங்களுக்கு சந்தோஷமா இல்ல...? :)

அஸ்மா நான் கண்டுபிடித்து விட்டு என் வீட்டுக்கு வந்த கெஸ்ட்களுக்கும் குடுத்தேன் ஒரு பார்ட்டி 45 நிமிடம் எடுத்து கொண்டார்கள். அடுத்த பார்ட்டி 60 நிமிடம் எடுத்து கொண்டார்கள். என் ஹஸ்டிடம் குடுத்தேன். அவர் 10 நிமிடத்தில் கண்டுபிடித்தார். நான் எடுத்து கொண்டது 30 நிமிடம். நன்றி அஸ்மா

நானும் கண்டுபிடித்து விட்டேன். நான் எடுத்துக்கொண்ட நேரம் 5 நிமிடங்கள்.
என்னையும் test செய்யுங்கள்

கவிதா! டெஸ்ட்டுக்கு தயாரா? :) இந்தாங்க எண்கள்:
(a) 124
(b) 92
(c) 56

இன்னக்கி நான் ஒரு புக்குல ஒரு கணக்கு படிச்சேனா அதுக்கு விடை பாதி கண்டு பிடிச்சிட்டேன் ஆனா இன்னும் முழுசா முடியல, புக்கு பின்னாடி ஆன்சர் இருக்கு ஆனால் நம்ம கண்டுபிடிப்போமே,
அந்த கணக்கு, தாத்தா ஒருவர் ஒரு செடி நடுகிறார் அப்போது அந்த செடியில் 7 இலைகள் இருக்கு. மறுநாள் 4 இலைகள் விழுந்துடுது.அடுத்த நாள் புதுசா 7 இலைகள் முலைக்குது, இதைப்போல ஒரு நாள் 4 இலைகள் உதிர்வதும் மறுநாள் 7 இலைகள் முலைப்பதுமாக இருக்கிறது. செடியில் எப்போது 100 இலைகள் இருக்கும்? எத்தனையாவது நாள் 100 இலைகள் இருக்கும் இது தான் கேள்வி.

கோதை 58 நாள் ஆகும்போதா 100 இருக்கும்??தெரீலப்பா..எனக்கு கொஞ்சமாவது கணக்கு வருதான்னு தெரிஞ்சுக்க ட்ரை பன்னினேன் அனேகமா தப்பா தான் இருக்கனும்..ஹிஹிஹீ

மேலும் சில பதிவுகள்