கணக்குகள், விடுகதைகளை இங்கே கேட்போம் - 3

"கணக்குகள், விடுகதைகளை இங்கே கேட்போம் 2" - வது பாகம் நீளமானதால் இது 3 - வது பாகமாகிவிட்டது. அங்குள்ள பதிவிற்கான பதில்களை இங்கே தொடர்வோம்.

முதல் புலியாக வந்து களத்துல இறங்கிய தளிக்கா அக்கா சூப்பர்ர்ர்ர்ர். ஆனா ஆன்சர் கரைக்டா தப்பா சொல்லிட்டீங்க. ஹா ஹா ஹா

ஹஹஹா..சிரிப்பு தாங்கல..இந்த லட்சனதுல எனக்கு கணக்கு போட ரெண்டு பேப்பர் வேண்டி வந்துது;-D அதான் சிரிப்பு சிரிப்பா வருது
நான் மட்டும் கரெக்டா பதில் சொன்னா என் மேத்ஸ் டீச்சரை தேடிக் கண்டுபிடிச்சு சொல்லலாம்னு இருந்தேன்.ஜஸ்ட் மிஸ்

என்னால் சிரிப்பு கந்த்ரோல் பண்ணவே முடியல சிரிச்சுகிட்டே இருக்கேன் அக்கா. நான் சாந்த்விச் பஜ்ஜி செய்யலாம்னு பார்த்துட்டு இருந்தேன் அதுக்குள்ள இங்க வந்து பார்த்தா உங்க பதிவு வந்திருக்கு. அக்கா நானும் இன்னும் கண்டுபிடிக்கல பாதி கண்டுபிடிச்சிருக்கேன் பாக்கலாம் யார் கண்டுபிடிக்கிறாங்கன்னு.

63வது நாள் 100 இலைகள் இருக்கும்.

என்றென்றும் அன்புடன்
ரீஹா :-)

அன்புடன்
ரீஹா :-)

ரீஹா அதான் புக்குல ஆன்சர் கொடுத்து இருக்காங்க ஆனா அதோட விளக்கம் தாங்க ரீஹா கொஞ்சம்.
31x3 = 93 தான வருது. அப்போ 31 என்றால் 62 நாட்கள் தான எப்படி 63 நாட்கள்னு தெரியல ரீஹா

31 நாள் 7 இலை முலைக்கும்
31 நாள் 4 இலை உதிரும்

மொத்தம் 62 நாட்கள்.அடுத்த 63 வது நாள் புதிய 7 இலைகள் முலைக்கும்

31 x 7 = 217
- 31 x 4 = 124
----
93
63 வது நாள் 7
-----
100
=====
கோதை விளக்கம் ஒகேனா பஜ்ஜி பார்சல் அனுப்பி விடுங்க:-)

அன்புடன்
ரீஹா :-)

இந்த விளக்கமும் ஓகே தான் ஆனா புக்குல என்ன தெரியுமா கொடுத்துருக்காங்க, 31 நாள் தான் இலை முலைக்கும் ஆனால் 2 நாட்களுக்கு ஒருமுறை என்பதால் 31x3=93 இலைகள். 31x2=62 நாட்கள். அந்த செடி நடும் போது உள்ள இலைகள் 7 மொத்தம் 63 நாட்கள் 100 இலைகள். இரண்டும் ஒன்று தான் பெரிய வித்தியாசம் இல்லை நீங்கள் நட்ட நாளை சேர்க்காமல் முதலில் கணக்கு செய்துள்ளீர்கள்.

அஸ்மா,விடை..12 சரியா.

ஆமா கவிதா, விடை சரிதான்! பாராட்டுகள்!

ஒரு கையில் அனைத்து விரல்களும் இல்லாதவனை எப்படி அழைப்பது?
பதில் தெரிந்த பிறகு என்னை எல்லாரும் சேர்ந்து அடிக்க கூடாது சரியா?

மேலும் சில பதிவுகள்