கணக்குகள், விடுகதைகளை இங்கே கேட்போம் - 3

"கணக்குகள், விடுகதைகளை இங்கே கேட்போம் 2" - வது பாகம் நீளமானதால் இது 3 - வது பாகமாகிவிட்டது. அங்குள்ள பதிவிற்கான பதில்களை இங்கே தொடர்வோம்.

'கையால் ஆகாதவன்' மாதிரி 'விரலால் ஆகாதவன்' என்பீர்களோ? :)

எப்படி இருக்கீங்க? நீங்க கேட்ட கணக்கு மற்றும் விடுகதைகள் இங்கு உள்ளது, இதில் நீங்க கேட்க விரும்பும் கேள்விகளை இங்கே இருந்து கேட்கலாம். குருவி உங்களை பற்றி சொல்லுங்கள் செல்வி ரஜினியா? இல்ல செல்வன் ரஜினியா?

தீபா

ஹாய் தீபாஅருன்குமார், குருவின்னு சும்மா ஜாலிக்காக வைதேன்... நான் செல்வி கிடையாது...நான் திருமதியாக்கும்....
அன்புடன்
குருவி

ஹாய் கோதை உங்க கடி கேள்விக்கான பதில் இது சரியான்னு சொல்லுங்க.கையில் விரல்கள் இல்லாதவனை அவன் பெயரை சொல்லிதான் அழைப்போம்.சரிதானே

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ஹாய் ப்ரென்ட்ஸ் அஸ்மாவின் மேஜிக் கணக்கு எப்படி என்று நானும் கண்டு பிடித்து விட்டேன்.யார் என்னை சோதிக்க போரீங்க?

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

இன்னக்கி தான் அறுசுவை உள்ள வரேன் வந்தா நேத்து என்னோட கேள்விக்கு பதில் இருக்கு. கரைக்ட் அஸ்மா மேடம் மற்றும் கவி சிவா மேடம்.
எல்லாரும் நல்லா இருக்கீங்களா?
இன்னொரு கேள்வி கேட்கட்டா?
ஒரு நாய் மணிக்கு 24 கி.மீ வேகத்திற்கு ஓடக் கூடியது. அதற்கு முன் 150 மீ தூரத்தில் ஒரு முயல் இருந்து மணிக்கு 18 கி.மீ வேகத்துக் ஓடும் முயலை எவ்வளவு நேரத்தில் பிடிக்கும். என்ன எல்லாரும் ரெடியா கணக்கு கேட்டாச்சு பதில் கொடுங்க.

ஹாய் கோதை
நல்லா இருக்கீங்களா?
25 மணி நேரத்துல நாய் முயல பிடிக்கும். பதில் குடுத்தாச்சு கரெக்டா?

என்றென்றும் அன்புடன்
ரீஹா :-)

அன்புடன்
ரீஹா :-)

ஹாய் ரீஹா நான் நல்லா இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க. என்ன ரீஹா நாய் முயலப்பிடிக்க ஒரு நாளுக்கு மேலே ஆகுமா? சாரி ரீஹா பதில் தவறு.

ஹாய் கோதை நலமா?
உங்கள் கணக்கின் விடை இதோ.நாய் ஒன்றரை நிமிடத்தில் முயலை பிடிக்கும்.சரியா?

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

கவிசிவா நான் நலம். நீங்க எப்படி இருக்கீங்க?
உங்க பதில் ரொம்ப சரி, கரைக்டான விடை சொல்லிட்டீங்க. கணக்கு என்றால் ரொம்ப பிடிக்குமா? எப்படி கண்டு பிடிச்சிங்க. மற்றொரு கேள்வி தயார் பண்ணிட்டு இருக்கேன். கேள்வி கேட்க நான் ரெடி. பதில் சொல்ல நீங்க தயாராக இருக்கீங்களா? நீங்க மட்டும் அல்ல மற்ற தோழிகளும் கண்டு பிடிக்கலாம்.

மேலும் சில பதிவுகள்