கணக்குகள், விடுகதைகளை இங்கே கேட்போம் - 3

"கணக்குகள், விடுகதைகளை இங்கே கேட்போம் 2" - வது பாகம் நீளமானதால் இது 3 - வது பாகமாகிவிட்டது. அங்குள்ள பதிவிற்கான பதில்களை இங்கே தொடர்வோம்.

அன்புத் தோழிகளே எல்லாரும் சுகமாக இருக்கிரீர்களா?
புதிர் கணக்கு.....ஒருவன் ஒரு கோவிலுக்கு கொஞ்சம் மாலை எடுத்துட்டு போகிரான்... அங்கு கொஞ்சம் சாமி சிலைகள் உள்ளது....முதல் சிலைக்கு கொஞ்சம் மாலை போட்டுகிறான்...கையில் உள்ள மீதி மாலை இரண்டு மடங்காக ஆகிரது....முதல் சிலைக்கு எத்தனை மாலை போட்டானோ அதே எண்ணிக்கையில் இரன்டாவது சிலைக்கும் போடுகிரான்....மீதி உள்ளது இரண்டு மடங்காகிரது இதே போலவேஎல்லா சிலைக்கும் செய்கிறான்...ஆனால் கோவிலை விட்டு வரும்போது அவன் கையில் மாலை கிடையாது... அங்கு இருந்த எல்லாசிலைக்கும் ஒரே எண்ணிக்கையில் மாலை போட்டான்...அப்படி எனில் அவன் கையில் எடுத்துசென்ற்து எத்தனை மாலை?...எத்தனை சிலைகள் அங்கு இருந்தது?... ஒவ்வொரு சிலைக்கும் எத்தனை மாலை போட்டிருப்பான்?....
அன்புடன்
குருவி..

ஹாய் குருவி நலமா?நிஜம்தான்.கணக்கு என்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும்.உங்கள் கேள்விக்கு நிறைய விடைகள் வரும் போல தெரிகிறதே.நாந்தான் கணக்கை தப்பாக புரிந்து கொன்டேனான்னு தெரியலை.இருந்தாலும் எனது விடையை சொல்கிறேன்.
3மாலைகள் எடுத்து செல்கிறான்.முதல்சிலைக்கு 2மாலைகள் போகிறான்.மீதி 1 மாலை உள்ளது.அது இரன்டு மடங்கானால் 2மாலைகளாகும்.அந்த இரன்டு மாலையையும் 2வது சிலைக்கு போடுகிறான்.

அடுத்த விடைகள்

மொத்த மலைகள்=6
ஒரு சிலைக்கு=4
மொத்த சிலைகள்=2

மொத்த மலைகள்=9
ஒரு சிலைக்கு=6
மொத்த சிலைகள்=2

இதே போல மாலைகளின் மொத்த எண்ணிக்கை 3ன் மடங்காகவும் சிலைகளுக்கு போடும் மாலைகளின் எண்ணிக்கை 2 மடங்காகவும் உயரும்.ஆனா சாமி சிலைகள் 2 தான்

சரியா? இல்லை எனில் கணக்கை இன்னும் ஒருமுறை விளக்குங்கள்.
அன்புடன்
கவிசிவா

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ஹாய் கவிசிவா, நலமா?....மன்னிக்கவும் அவன் 7 மாலைகள் எடுத்து செல்கிறான்....
அன்புடன்
குருவி...

ஹாய் கவிசிவா, நலமா?....மன்னிக்கவும்... அவன் 7 மாலைகள் எடுத்து செல்கிறான்....அப்படி எனில் எத்தனை சிலைகளுக்கு எத்தனை மாலை போட்டு இருப்பான்....
கவிசிவா, அஸ்மா மேடம் சொன்ன கணக்கு எனக்கும் தெரியும்...
a .... 21
b .... 22
c .... 23
விடை சொல்லவும்
அன்புடன்
குருவி...

ஹாய் கவிசிவா, நலமா?....மன்னிக்கவும்... அவன் 7 மாலைகள் எடுத்து செல்கிறான்....
அன்புடன்
குருவி...

ஹாய் குருவி 7 மாலைகள் எடுத்து சென்றால் ஒவ்வொரு சிலைக்கும் 4மாலைகள் வீதம் 3 சிலைகளுக்கு போடுவான் சரியா?
ஆன் லைனிலா இருக்கிறீங்க?

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ஹாய் கவிசிவா, நலமா?....ஆமாம் நான் ஆன் லைன்னில் இருக்கிரேன்.... தாய்லாந்தில் எத்தனை மணி ஆகிறது..இங்கு (france) 7.30 மண் ஆகிரது...நீங்கள் சொன்னவிடை மிகவும் சரி...வாழ்த்துக்கள் கவிசிவா.... ஸ்மைல் ப்ளீஸ்...நான் போட்டோ எடுத்துவிட்டேன்... பிறகு அனுப்புகிறேன்...
அன்புடன்
குருவி...

ஹாய் குருவி,

உங்கள் கேள்விக்கான விடை 12

ஹாய் கவிசிவா,குருவி எப்படி இருக்கீங்க. இந்த கணக்கும் விடையை கண்டுப்பிடித்து சொல்லுங்க பார்ப்போம்.
குப்புசாமி என்ற ஒருவன் காசி மகேஸ்வர் சாமியாரைப் பார்த்து ஆசீர்வாதம் பெறுவதற்காக காசி சென்று இருந்தான். அங்கு அவன் சாமியை பார்க்க அவருடைய ஆசிரமத்திற்கு சென்றான். வாசலில் நின்ற சாமியாரின் சீடன் ஒருவன் வந்து குப்புசாமியிடம் நீ முதலில் மூன்று சின்ன சாமியார்களின் தரிசனம் பெற்ற பின்தான், மகேஸ்வர சாமியாரை பார்க்க
முடியுமென்றும், சின்ன சாமியாரிடம் நீங்கள் விரும்புவதை கேட்கலாமென்றும் கூறினான். அந்த சீடன் உன்னிடம் உள்ள பணத்தைக் கொடுத்தால் சின்ன சாமியார்கள் இரட்டிப்பாக்கி கொடுப்பார்கள் என்றான். இறுதியில் உன்னிடம் உள்ள மொத்த பணத்தையும் மகேஸ்வர சாமியாரிடம் கொடுத்தால் அவர் 10 மடங்காக்கி கொடுப்பார் என்றான். பிறகு அந்த சீடன் ஒவ்வொரு சாமியாரிடம் நீ பெறும் இரட்டிப்பாக்கின் பணத்தில் எனக்கு ரூ. 1000 மாமூல் கொடுக்கனும் என்று சொன்னான். அதே போல் குப்புசாமிதன்னிடம் இருந்த மொத்த பணத்தையும் முதலில் உள்ள சின்ன
சாமியாரிடம் கொடுத்தான். சாமியார் இரண்டு மடங்காக்கி கொடுத்தார் மகிழ்ச்சியுடன் பெற்று கொண்ட குப்புசாமி சீடனுக்கு ரூ.1000 கொடுத்தான். 2 வது சாமியாரிடமும் அவனிடம் இருந்த மொத்தபணத்தையும் கொடுத்தான். அவரும் இரண்டு மடங்காக்கி கொடுத்தார்
மகிழ்ச்சியுடன் பெற்று கொண்ட குப்புசாமி சீடனுக்கு ரூ.1000 கொடுத்தான். 3வது சாமியாரிடமும் அவனிடம் இருந்த மொத்த பணத்தையும் கொடுத்தான். அவரும் இரண்டு மடங்காக்கி கொடுத்தார் மகிழ்ச்சியுடன் பெற்று கொண்ட அவன் சீடனுக்கு ரூ.1000 கொடுத்துவிட்டான் இப்போது குப்புசாமியிடம் மீதி பணம் இல்லை. பணம் எல்லாம் சரியாகிவிட்டது, சீடனும் மறைந்து விட்டான். இப்போது குப்புசாமி ஏமாந்து பறிகொடுத்த
பணம் எவ்வளவு என்பதை கண்டுபிடித்துச்சொல்லுங்கள் தோழிகளே.

ஹாய் கோதை,

குப்புசாமி கையில் இருந்த பணம் ரூ.875/-

என்றென்றும் அன்புடன்
ரீஹா :-)

அன்புடன்
ரீஹா :-)

மேலும் சில பதிவுகள்