கணக்குகள், விடுகதைகளை இங்கே கேட்போம் - 3

"கணக்குகள், விடுகதைகளை இங்கே கேட்போம் 2" - வது பாகம் நீளமானதால் இது 3 - வது பாகமாகிவிட்டது. அங்குள்ள பதிவிற்கான பதில்களை இங்கே தொடர்வோம்.

ஹப்பா எல்லாரும் ஒரு வழியா ஒரு இடத்தில வந்தாச்சு இப்பன்னு பார்த்து ஒரு கேள்விக்கூட ஞாபகம் வரமாட்டேங்குதே.

நீங்க ரொம்ப நல்லவங்களாம்ல ஒரே ஒரு க்ளு மட்டும் கொடுங்களேன்.

ஹச்..ஹச்.. கொஞ்சம் ஐஸ் மழைல நனைஞ்சிட்டேன் அதான் ஹச்..:)).க்ளு சொன்னா கண்டு பிடுச்சுடுவீங்களே... ஓகே இது ஏறுவதை நாம் கொண்டாடுவோம்.இப்ப சொல்லுங்க

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

கவிசிவா கண்டுபிடிச்சிட்டேன் நம்ப வயது கரெக்டா.

ஹுர்ரே...ரொம்ப சரி கவி.எஸ்.அடுத்த கேள்வி.
ரெட்டை வால் குருவி வாலால் நீர் குடித்து குளமே வற்றியது.ரெட்டை வால் குருவி எது?குளம் எது?

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ஐஸ் எல்லாம் இல்லை,ச்ச போங்கபா நானும் பதில் கண்டு பிடிச்சுட்டேன் அதுக்குள்ள கவி சொல்லிட்டாங்க. ஜூஸ் குடிப்போம்ல அந்த ஸ்ட்ராவும். குளம் வந்து ஜூஸ் டம்ளர் கரைக்டா. பதில் தப்புன்னா சிரிக்க கூடாது

தவறு காயத்ரி.(சத்தியமா நான் சிரிக்கவே இல்லை)நான் சொன்னது ரெட்டைவால் குருவி.இப்போ யோசிங்க.சின்ன க்ளு தரவா?ரெட்டை வால் குருவி வாலால் நீர் குடிக்க குளக்கரை பிரகாசமாக குளமே வற்றியது.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

இரட்டை வால்குருவியின் வால் திரி குளம் விளக்கு. திரியும் விளக்கும்.சரியா விடை?

நன்றி,
"அன்பான சொல் மருந்தாக இருப்பதோடு வாழ்த்தவும் செய்கிறது"

எக்ஸ்கியூஸ்மி.. எங்கிட்டே ஒரு அஞ்சு விடுகதை இருக்கு. யாராவது பதில் தெரிஞ்சவங்க சொல்லுங்களேன்...

தலைப்பு பார்த்து பார்த்து பயந்துடாதிங்க இது ஹிந்தி பையா(அண்ணா) உங்க விடுகதையை சொல்லுங்க, தெரிந்தால் சொல்கிறோம்.

மேலும் சில பதிவுகள்