மசாலா பால் (பொடி)

தேதி: May 1, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

முந்திரி - 15
தோலுரித்த பாதாம் - 15
ஏலக்காய் - 4
சர்க்கரை - 4 ஸ்பூன்
குங்குமப்பூ - சிறிது
பால் - 1 கப்


 

சுடு தண்ணீரில் பாதாமை 10 நிமிடம் ஊற வைத்து தோலுரித்து கொள்ளவும்.
எல்லாப் பொருட்களையும் பவுடராக தூளாக்கி கொள்ளவும்.
ஒரு டம்ளர் பாலை காய்ச்சி அரைத்த பொடியில் 1 1/2 டேபிள் ஸ்பூன் சேர்த்து நன்றாக கலக்கி பரிமாறவும். 3 அல்லது 4 முறை வரும்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஒன்ஸ் மோர் கேட்பார்கள். (என் குழந்தை மற்றும் கணவருடைய ஃபேவரைட் இது)


நீண்ட நாட்களுக்கு மசாலாபொடி தேவைப்பட்டால் முந்திரி பாதாமை லேசாக வறுத்து அரைக்கவும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

ஹாலோ ரேணுகா! மசாலா பால் செய்து சுவைத்தேன் நன்றாக இருந்தது. செய்வது ரொன்ப ஈசி. சிறியவர் முதல் பெரியவர்களும் விரும்பி குடிப்பார்கள். நல்ல ரேசப்பி தந்துள்ளிர்கள் நன்றி அன்புடன் ராணி

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

ராணி இது எங்க வீட்டிலும் எல்லோருக்கும் பிடிக்கும்,நான் முதலில் இதெல்லாம் குடிக்க மாட்டேன்,ஒரு முறை சரவனபவனில் குடித்தேன்,அத்தனை நன்றாக இருந்தது,நானும் ஒவ்வொன்று சேர்த்து,பார்த்தேன்,எதும் லாயக்கு படலை,இந்த முறை டேஸ்ட் நல்லா இருந்து,பிள்ளை களுக்கு அடிக்கடி கொடுக்கலாம்,செய்வதும் ரெம்ப ஈசி,நன்றி ராணி செய்து பின்னூட்டம் கொடுத்தமைக்கு

அன்புடன்
ரேணுகா

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

இந்த பால் குழந்தைகள் விரும்பி குடிச்சாங்க,நான் மசாலா பால் வேறமாதிரி செய்வேன்,இதுவும் நல்லா இருக்கு.

ரேணுகா... சூப்பரா இருக்குங்க. எற்கனவே செய்திருக்கேன். இப்ப மீண்டும் செய்துட்டேன். இனி அடிக்கடி செய்வேன்னு நினைக்கிறேன் குழந்தைகளுக்கு. சூடா குடிச்சுகிட்டே உங்களுக்கு பதிவு. மிக்க நன்றி. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மசாலாபால் பாதாம் பால்மாதிரி சூப்பரா இருக்கு குளிருக்கு குடிக்க இதமா இருக்கு..நன்றி..

வாழு, வாழவிடு..