இது தோசகாய என்ற காயில் பண்னினால் நல்லது.
இதே மாதிரி பச்ச கல்ர் தக்காளியிலும் செய்யலாம்.
தேவையானப் பொருட்கள்
- துவரம் பருப்பு - 1 கப் வேக வைத்தது
- தக்காளி - 3
- வெள்ளரிக்காய் - 1 பெரிய துண்டுகள்
- கடுகு - 1 தே.க
- சீரகம் - 1 தே.க
- பச்ச மிள்காய் - 1
- கறிவேப்பிலை - கொஞ்சம்
- பூண்டு - 2 தே,க
- இஞ்சி துறுவினது - 1 தே,க
- பிரியாணி இலை - 2 (விரும்பினால்)
- சோம்பு - விரும்பினால் 1 தே.க
- மஞ்சள் பொடி - 1 தே.க
- லெமன் ஜூஸ் - 1 . தே.க
- சின்ன வெங்காயம் - 8
- எண்ணெய் - 2 தே,க
- நெய் - 1 தே.க
செய்முறை
- முதலில் எண்ணெய் விட்டு கடுகு,சிரகம்,பிரியாணி இலை,சோம்பு,பெருங்காயம், போட்டு பொறிந்த பிறகு கறிவேப்பிலை, இஞ்ஞி,வெங்காயம் சேர்க்கவும். 10 நிமிடம் வதங்கின பிறகு தக்காளி சேர்க்கவும். நிற்ய்ய நேரம் வதங்க வேண்டாம். வெட்டி வைத்துள்ள வெள்ளரிக்காய் சேர்த்து 20 நிமிடம் ஆன பிறகு வேகவைத்துள்ள பருப்பை சேர்த்து பதினந்து நிமிடம் வேக விடவும். வெந்தபிறகு லெமன் ஜூஸ் சேர்க்கவும், கொத்தமல்லி இலை போட்டு அலங்கரிக்கவும்.மேலே உருக்கின் நெய் சேர்க்கவும்.
குறிப்பு
இதை சூடு சாதத்தோடு தொட்டு சாப்பிட நன்றாக இருக்கும்.
காரம் நிற்ய்ய வேண்டுபவர்கள் கூட்டி கொள்ளலாம்.
பச்ச கத்தரிக்காயிலும் செய்யலாம்.(புளி) சேர்க்க வேண்டும்.
பரிமாறும் அளவு
| ஆயத்த நேரம்
| சமைக்கும் நேரம்
|
|
5 |
15 |
20 |