உள்நுழைதல்

வாக்கெடுப்பு







புதிதாக இணைந்தவர்கள்

சமீபத்தியக் கருத்துக்கள்

 

நெத்திலி மீன் அவியல்



தேவையான பொருட்கள்

  • நெத்திலி மீன் - 1/4 கிலோ
  • சின்ன வெங்காயம் - 15 எண்ணம்
  • பச்சை மிளகாய் - 2
  • மாங்காய் - 1/4 பாகம்
  • கறிவேப்பிலை - 2 கீற்று
  • எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
  • உப்பு - தேவைக்கேற்ப
  • அரைக்க தேவையான பொருட்கள்
  • -------------------------------
  • தேங்காய் துருவல் - 3/4 கப்
  • மிளகாய் வத்தல் - 5 எண்ணம்
  • மஞ்சள் பொடி - 1/4 டீஸ் ஸ்பூன்

செய்முறை

  • நெத்திலி மீனை முள் உருவி உப்பு போட்டு உலசி கழுவவும்.(அப்படியே முள் உருவ வரவில்லை என்றாலும் பராவில்லை , மீனின் தலை மற்றும் வாலை நறுக்கிகொள்ளவும்,உடல் பகுதியில் ஒரு சின்ன கீறல் போட்டு உப்பு போட்டு கழுவவும்.)
  • சின்ன வெங்காயத்தை வட்டமாகவும், பச்சை மிளகாய், மாங்காய்யை நீளவாக்கில் நறுக்கி கொள்ளவும்.
  • தேங்காய் துருவல், மிளகாய் வத்தல், மஞ்சள் பொடி இவற்றை நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
  • மீன்சட்டியை அடுப்பில் வைத்து,அதில் எண்ணெய் விட்டு பச்சை மிளகாய்,சின்ன வெங்காயம் லேசாக வதக்கவும்,பின்னர் மாங்காய் மற்றும் அரைத்த விழுதையும்,நெத்திலி மீனையும் போட்டு கரண்டியால் ஒரு தடவை கிளறி விடவும்.
  • கலவையில் உப்பு சேர்த்து , கறிவேப்பிலை கிள்ளி போட்டு கொஞ்சமாக தண்ணீர் விட்டு,வேக வைக்கவும்.
  • மீன் வெந்து கலவை கெட்டியாக வரும் போது இறக்கி விடவும்.
  • நெத்திலி மீன் அவியல் தயார்

குறிப்பு:

அதிகம் தண்ணீர் சேர்க்க வேண்டாம்,கரண்டியும் கலவையில் போட்டு கிளற வேண்டாம்.மீன்சட்டியை இரு புறமும் பிடித்து அடிக்கடி சுற்றி விட்டால் போதும்.கரண்டியை அதிகம் கலவையில் போட்டால் மீன் பிஞ்சு போகவாய்ப்புள்ளது அதனால் கரண்டியை அதிகம் கலவையினுள் போட வேண்டாம்.

வழங்கியவர்

மஹாபிரகதீஸ்,China

பரிமாறும் அளவு

ஆயத்த நேரம்

சமைக்கும் நேரம்

3 15 min 15 min
  random food image


comments
மஹாபிரகதீஸ்- நெத்திலி மீன் அவியல்
மே 6, 2008 - 5:31am - வழங்கியவர் SHAHUL HAMEE

1. (நெத்திலி மீனை முள் உருவி உப்பு போட்டு உலசி கழுவவும்)

வணக்கம் மஹாபிரகதீஸ்
2,நெத்திலி மீன் முள்ளை எப்படி எடுக்க முடியும் மிக சிறிய மீன் அல்லவா பதில் அளிக்கவும்,
அன்புடன் சகொதரர் ஷாஹுல் ஹமீத்

வணக்கம்
மே 6, 2008 - 7:27pm - வழங்கியவர் Mahalakshmiprag...

அன்பு சகோதரர் ஷாஹுல் ஹமீத்

1.முதலில் மிக்கநன்றி இந்த குறிப்பை வாசித்து எனக்கு கேள்வி அனுப்பியதற்கு.
2.நீங்கள் மீனை கழுவி அதன் உடல் பகுதியில் ஒரு கீறல் போட்டு பின் தலையை திருகி இழுத்தால் போதும் முள் உருவி வரும்.
3.அப்படியே முள் உருவ வரவில்லை என்றாலும் பராவில்லை , மீனின் தலை மற்றும் வாலை நறுக்கிகொள்ளவும்,உடல் பகுதியில் ஒரு சின்ன கீறல் போட்டு உப்பு போட்டு கழுவவும்.
4.மேற்கொண்டு ஏதேனும் இருப்பின் கேள்வி அனுப்பவும்.

Think Positively U will achieve everything

மஹாபிரகதீஸ்,China

மஹாபிரகதீஸ்- நெத்திலிமீன் அவியல்
மே 7, 2008 - 7:34am - வழங்கியவர் SHAHUL HAMEE

வணக்கம் மஹாபிரகதீஸ் பதில் தந்ததுக்கு மிக்க நன்றி,
1,அதெபோல் மீன்னில் முள்ளை எடுத்து விட்டு அவியல்லில் போட்டால் உடைந்து தூள்ளாகிவிடுமே?
நன்றி-அன்புடன் ஷாஹுல் ஹமீத்

ஜனாப் ஷாஹுல் ஹமீது
மே 7, 2008 - 7:39am - வழங்கியவர் Jaleela Banu

ஜனாப் ஷாஹுல் ஹமீது என்ன சோம்பு டீ குடிச்சாச்சா

என் நெத்திலி மீன் குறிப்பில் நெத்திலிமீன் கழுவும் விதம் கொடுத்துள்ளேன் பருங்கள். மீன் மட்டும் தனியாக வரும்

ஜலீலா

வணக்கம்
மே 7, 2008 - 8:16pm - வழங்கியவர் Mahalakshmiprag...

அன்பு ஷாஹீல் ஹமீது அவர்களுக்கு,

1.உங்கள் கேள்விகளுக்கு என் குறிப்பிலே பதில் உள்ளது.எனது குறிப்பின் 4ஆவது மற்றும் 6ஆவது பாய்ண்டை பார்க்கவும்.

2.(4. மீன்சட்டியை அடுப்பில் வைத்து,அதில் எண்ணெய் விட்டு பச்சை மிளகாய்,சின்ன வெங்காயம் லேசாக வதக்கவும்,பின்னர் மாங்காய் மற்றும் நெத்திலி மீனையும் போட்டு, அரைத்த விழுதையும் போட்டு "கரண்டியால் ஒரு தடவை கிளறி விடவும்".)

3. (6.அதிகம் தண்ணீர் சேர்க்க வேண்டாம்,"கரண்டியும் கலவையில் போட்டு கிளற வேண்டாம்".மீன்சட்டியை இரு புறமும் பிடித்து சுற்றி விட்டால் போதும்.)

4.இந்த மேற்கோள் போட்ட பாய்ண்ட் எதற்கு என்றால் மீன் உடைந்து போகாமல் இருக்கவே,மீனை கலவையில் கடைசியில் தான் சேர்க்கவேண்டும்,கரண்டியை போட்டு கலவையில் அடிக்கடி கிண்டக்கூடாது எண்பதற்கு வேண்டிதான் "கரண்டியால் ஒரு தடவை கிளறி விடவும்"என்றும் "கரண்டியும் கலவையில் போட்டு கிளற வேண்டாம்".மீன்சட்டியை இரு புறமும் பிடித்து சுற்றி விட்டால் போதும். என்றும் எழுதி இருந்தேன்.

5.மீன் கழுவும் முறையை ஜலீலா பானு அவர்கள் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்கள்.அதை பார்த்தால் கழுவும் விதம் புரியும் என எண்ணுகிறேன்.

6.நீங்கள் கேட்ட கேள்விகளால் எனது குறிப்பில் ஒரு சிறு பாண்ட் சேர்த்து கொள்கிறேன்.

7.இன்னமும் ஏதேனும் கேள்வி இருந்தால் கேட்கவும்.

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

வணக்கம்
மே 8, 2008 - 2:17am - வழங்கியவர் Mahalakshmiprag...

அன்பு ஜலீலா பானு அவர்களுக்கு

1.நான் அறுசுவையில் இணைந்து 2 வது வாரம் ஆகிறது.

2.நான் உங்கள் குறிப்பை பாதி பார்த்திருக்கிறேன்.ஆனால் நெத்திலி மீன் எப்படி கழுவது என்பதைப் பற்றியகுறிப்பை பார்த்திருக்கவில்லை.

3.தாங்கள் சகோ ஷாஹீல் ஹமீது அவர்கள் என்னிடம் கேட்ட கேள்விக்கு பதில் தந்தமைக்கு மிக்க நன்றி.

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,

மஹா நெத்திலி மீன்
மே 8, 2008 - 2:55am - வழங்கியவர் Jaleela Banu

மஹா இதில் என்ன இருக்கு என வீட்டில் யாருக்கும் முள் மீன் சாப்பிட பயம், ஆனால் எனக்கு பிடிக்கும்.
ஆகையால் என் மாமியார் அப்படிதான் கழுவுவார்கள். அப்படி முள் மீன் சமைத்தால் அவர்கள் கூட வே ஒரு பிளேட்டை வைத்து உட்கர்ந்து முள் பிரித்து கொடுப்பார்கள் என் மாமனாருக்கு, அதே நான் அவ்ங்க மகனுக்கு செய்கிறேன்
இன்னும் இந்த பரப்பறை பழக்கம் தொடரும் போல இருக்கு ஹா ஹா எப்படியோ சாப்பிட்டால் சரிதான்.
வேலைக்கு நான் சோம்பல் பட மாட்டேன்.
நெத்திலி மீன் சிறிய முல் அதை எப்படி பிரித்தெடுக்கனும் என்பதை என் மாமியாரிடமிருந்து நான் கற்று கொண்டது, இப்ப ஈசியா அப்ப்டி மிட்டா மாதிரி எடுத்து சாப்பிட வெண்டியது தான்.

ஜலீலா

ஜலிலா!...ஒரு ஹெல்ப்
மே 8, 2008 - 3:15am - வழங்கியவர் malathi

ஜலீலா!....ஒரு சின்ன ஹெல்ப் பண்ண முடியுமா? உங்களுடைய நெத்திலி மீன் கழுவும் முறையை இவ்வளவு நேரமாக தேடிப்பார்த்தேன். என்னால் கண்டுபிடிக்கமுடியவில்லை. அந்த குறிப்புக்கு கீழேயே எனக்கு பதில் கொடுத்தீர்கள் என்றால் நான் பார்த்துக்கொள்கிறேன். ஏனென்றால் நீங்கள் எப்பவுமே பர்ஃபெக்டாக சொல்லிடுவீங்க. முன்னாடி ஒரு தடவை நீங்க சொன்ன வாளை மீன் கழுவும் முறை ரொம்ப வித்தியாசமாகவும் கரைக்டாகவும் இருந்தது.