உள்நுழைதல்

Sponsored links


வாக்கெடுப்பு






புதிதாக இணைந்தவர்கள்

சமீபத்தியக் கருத்துக்கள்

Sponsored link


 

பச்சை ஆப்பிள் பச்சடி

 


தேவையானப் பொருட்கள்

  • பச்சை ஆப்பிள் - 1 (பழமாக இல்லாமல் காயாக பார்த்து வாங்கவும்)
  • மிளகாய்ப் பொடி - 1 டீஸ் ஸ்பூன்(காரம் தேவை என்றால் 1/2 ஸ்பூன் சேர்த்து கொள்ளவும்)
  • கடுகு - 1 டீஸ் ஸ்பூன்
  • வெந்தயம் - 1 டீஸ் ஸ்பூன்
  • பெருங்காயப் பொடி - 1/4 டீஸ் ஸ்பூன்
  • நல்லெண்ணெய் - 1 மேஜை கரண்டி
  • எலுமிச்சை பழச்சாறு - 1 மேஜை கரண்டி
  • கறிவேப்பிலை - 1 கீற்று
  • உப்பு - தேவையான அளவு

செய்முறை

  • 1.பச்சை ஆப்பிள்ளை நன்றாக கழுவி பல்லு பல்லாக மெலிதாக நறுக்கி கொள்ளவும்
  • 2.நறுக்கிய ஆப்பிள்களை ஒரு பாத்திரத்தில் கொட்டி ,எலுமிச்சை பழச்சாறு, தேவையான அளவு உப்பு தூவி கிளறி வைக்கவும்
  • 3.அடுப்பில் கடாய் வைத்து சிறிது நல்லெண்ணெய் விட்டு,அதில் கடுகு,வெந்தயம்,கறிவேப்பிலை தாளித்து பின் மிளகாய்ப் பொடி,பெருங்காயப் பொடி போட்டு நுறை வந்தவுடன் இறக்கி விடவும்
  • 4.தாளிப்பை ஆப்பிள் கலவையுடன் கலந்து கிளறவும்
  • 5.சுவையான பச்சை ஆப்பிள் பச்சடி தயார்

குறிப்பு:

மாங்காய் கிடைக்காத நேரத்தில் இந்த பச்சை ஆப்பிள் கிடைக்கும் ஆயின் இதனை செய்து பாருங்கள். வெளிநாடுகளில் இந்த பச்சை ஆப்பிள் கிடைக்கும். இதுவும் தயிர் சாதத்திற்கு நன்றாக இருக்கும். நான் வசிக்கும் சீனாவில் மாங்காய் அதிகம் கிடைக்காது,அதனால் பச்சை ஆப்பிளை பச்சடி ஆக்கினேன் அது ஒரு வித சுவை.

வழங்கியவர்

மஹாபிரகதீஸ், China

பரிமாறும் அளவு

ஆயத்த நேரம்

சமைக்கும் நேரம்

5 10 min 3 min
food image


comments
மஹாபிரகதீஸ்,
மே 2, 2008 - 7:17am - வழங்கியவர் Vijitvm

ஆமாம் நானும் பச்சை ஆப்பிளில் ரெய்தா பண்னுவோல் மிகவும் நல்லா இருக்கும். ட்ரை பண்ணி பாருங்க

விஜி
மே 2, 2008 - 7:46am - வழங்கியவர் KT

விஜி பச்சை ஆப்பிள் ரெய்தா ரெசிபி கொடுக்க முடியுமா?

KT ஆப்பிள் ரெய்தா
மே 2, 2008 - 9:59am - வழங்கியவர் Vijitvm

ஹாய் KT நிங்க கேட்ட ஆப்பிள் ரெய்தா புதுசு கலா புதுசு வில் இருக்கு, கூட்டாங்சோறு பகுதியிலும் இருக்கு. பாருங்க செய்து பார்த்து சொல்லுங்க. நன்றி.
ப்ச்சமிளகாய் வேண்டம் என்றால் பெப்ப்ர் பௌடர் சேர்க்கலாம்.

Hai Viji (trivandrum)
மே 3, 2008 - 2:58am - வழங்கியவர் Mahalakshmiprag...

அன்பு விஜி

மிகவும் நன்றி,நான் அறுசுவையில் இணைந்து 2 வாரம் தான் ஆகிறது,அதுவும் எனது முதல் குறிப்பை வாசித்து பதில் தந்தமைக்கு மிக்க நன்றி.உங்கள் க்ரீன் ஆப்பிள் ரெய்தாவை கண்டிப்பாக செய்து பார்த்து பதில் தருகிறேன். என்ன ஒரு co-incident பார்த்தீங்களா?நானும்,நீங்களும் க்ரீன் ஆப்பிள் வைத்து ரெசிபி ஒரே நேரத்தில் கொடுத்துள்ளோம்.

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

Mahalakshmi க்ரீன் ஆப்பிள்
மே 3, 2008 - 9:07am - வழங்கியவர் Vijitvm

ஆமாம். நான் என்றைக்கோ அமெரிக்கா வந்தேனோ அப்பவே இது ஒரு நம்ம இந்தியன் வீட்டில் சாப்பிட்டேன் . அப்பவே தெரியும். நன்றாக இருக்கும். இங்கு நிற்ய்ய க்ரின் ஆப்பிள் நிற்ய்ய கிடைப்பதினா. ரொம்ப சௌகரியம். நான் அடிக்க்டி பண்ணுவேன்.

கிவி பழம் அங்கு கிடைக்குமா? கிடைத்தால் அதிலும் செய்யலாம்.

பச்சை ஆப்பிள் பச்சடி
மே 5, 2008 - 3:40pm - வழங்கியவர் vinnie

மஹா, இந்த பச்சடி செய்து பார்த்தேன். என்னிடம் கொஞ்சம் புளியோதரைப் பொடி (செல்வி அவர்களின் குறிப்பு) இருந்தது. தாளித்த பிறகு அதையும் சிறிது சேர்தேன். சூப்பராக இருந்தது. எனக்கும் இங்கு மாங்காயே அவ்வளவாக கிடைக்காது. மாங்காயில் செய்தது போலவே இருந்தது. இந்த குறிப்பை கொடுத்த உங்களுக்கு நன்றிகள்.

thankyou vinnie
மே 5, 2008 - 9:45pm - வழங்கியவர் Mahalakshmiprag...

அன்பு வின்னி

மிக்க நன்றி எனது குறிப்பான இந்த பச்சை ஆப்பிள் பச்சடியை செய்துபார்த்து பதில் தந்தமைக்கு. வின்னி எந்த ஊரில் இருக்கிறீர்கள்.சும்மா தெரிந்து கொள்ளவே.அங்கேயும் மாங்காய் கிடைப்பதில்லை என்று சொன்னதால் கேட்டேன்.

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

நம்ம ஊரு
மே 6, 2008 - 2:54pm - வழங்கியவர் vinnie

அன்பு மஹா நான் usa-வில் oklahoma என்ற ஸ்டேட்டில் இருக்கேன். இங்கு இண்டியன் பாப்புலேஷன் ரொம்ப கம்மி. அதனால் நம் காய்கறிகள் எல்லாம் கிடைப்பது ரொம்ப கஷ்டம்.