உள்நுழைதல்

வாக்கெடுப்பு







புதிதாக இணைந்தவர்கள்

சமீபத்தியக் கருத்துக்கள்

 

கறி மிளகு பிரட்டல்



தேவையான பொருட்கள்

  • ஆட்டுகறி 1/4 கிலோ
  • கொத்தமல்லி தழை - 1/2 கப்(பொடியாக அரிந்தது)
  • உப்பு - தேவைக்கேற்ப
  • அரைக்க தேவையான பொருட்கள்
  • -------------------------------
  • தேங்காய் துருவல் - 1 கப்
  • நல்ல மிளகு - 25 கிராம்
  • சோம்பு - 1 டீஸ் ஸ்பூன்
  • தாளிக்க தேவையான பொருட்கள்
  • -------------------------------
  • நல்லெண்ணெய் - 2 மேஜை கரண்டி
  • பட்டை - 1 துண்டு
  • கிராம்பு - 2 எண்ணம்

செய்முறை

  • ஆட்டுகறியை நன்றாக கழுவி,சிறு சிறு துண்டுகளாக வெட்டி உப்பு போட்டு வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்.
  • தேங்காய் துருவல், நல்ல மிளகு, சோம்பு இவற்றை மையாக அரைத்துக்கொள்ளவும்
  • அடுப்பில் அகன்ற பாத்திரத்தை வைத்து, அதில் நல்லெண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு தாளித்து பின் வேகவைத்த ஆட்டுகறியை சேர்த்து பிரட்டவும்.
  • 2 நிமிடம் கழித்து அரைத்த விழுதை சேர்த்து, குறைந்த அளவு தண்ணீர் சேர்த்து ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கொதிக்கவைக்க விடவும்.
  • கலவை கொதித்து வற்றி வரும் போது பொடியாக அரிந்து வைத்துள்ள கொத்தமல்லி தழை தூவி அடி பிடிக்காமல் பிரட்டி விடவும் கெட்டியான(dry) உடன் இறக்கவும்.
  • இப்பொழுது சுவையான கறி மிளகு பிரட்டல் தயார்

குறிப்பு:

பிள்ளை பெற்ற பெண்களுக்கு ஒரு மாதத்திற்குள் இந்த கறியை கொடுப்பார்கள் இது வயிற்று புண் ஆற்றும்,ஒரு மருந்து கறி. (கவனிக்க செய்முறை 1,4)கறியை உப்பு போட்டு வேவைத்துள்ளோம் பின் எதற்கு ஒரு சிட்டிகை உப்பு என்றால் அரைத்த கலவைக்கு தேவை அதனால் தான்.அல்ல்து தேவைக்கேற்ப உப்பு போட்டுக்கொள்ளவும்

வழங்கியவர்

மஹாபிரகதீஸ், China

பரிமாறும் அளவு

ஆயத்த நேரம்

சமைக்கும் நேரம்

3 15 min 30 min
  random food image


comments