உள்நுழைதல்

Sponsored links


வாக்கெடுப்பு






புதிதாக இணைந்தவர்கள்

சமீபத்தியக் கருத்துக்கள்

Sponsored link


 

குடமிளகாய் சாம்பார்

 


தேவையானப் பொருட்கள்

  • சாம்பார் பருப்பு - 1 கப்
  • பச்சை குடமிளகாய் - 1(பெரியது அல்லது 2 சிறியது)
  • பெரிய வெங்காயம் - 1
  • தக்காளி - 2
  • சாம்பார் பொடி - 1 மேஜை கரண்டி (காரம் தேவைக்கேற்ப போடவும்)
  • நல்ல மிளகுப்பொடி - 1/2 டீஸ் ஸ்பூன்
  • கடுகு - 1/2 டீஸ் ஸ்பூன்
  • வெந்தயம் - 1/2 டீஸ் ஸ்பூன்
  • சீரகம் - 1/2 டீஸ் ஸ்பூன்
  • நல்ல மிளகு - 5 எண்ணம்
  • பூண்டு - 1 பல் (நசுக்கி வைக்கவும்)
  • பெருங்காயப்பொடி - 1/4 டீஸ் ஸ்பூன்
  • கறிவேப்பிலை - 1 கீற்று
  • கொத்தமல்லி தழை - கொஞ்சம்
  • எண்ணெய் - 2 மேஜை கரண்டி
  • உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை

  • 1.சாம்பார் பருப்பை குக்கரில் 4 விசில் விட்டு இறக்கவும்.
  • 2.பச்சை குடமிளகாயை துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.
  • 3.பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் மெலிதாகவும்,தக்காளியை நீளமாக நறுக்கிக்கொள்ளவும்
  • 4.அகன்ற பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் கடுகு,சீரகம்,வெந்தயம்,நல்லமிளகு,நசுக்கிய பூண்டு,கறிவேப்பிலை, போட்டு தாளித்துக்கொள்ளவும்.
  • 5.பின்னர் வெங்காயத்தையும் தக்காளியும் நன்றாக வதக்கவும், அடுத்து பச்சை குடமிளகாய் துண்டுகளை வதக்கி அதில் சாம்பார்பொடி,நல்ல மிளகுப்பொடி போட்டு ஒரு தடவை கிண்டி விடவும்.
  • 6.கடைசியில் வேகவைத்தப்பருப்பை சேர்த்து தேவைக்கேற்ப தண்ணீர் விட்டு, உப்பு போட்டு கொதிக்கவைக்கவும்.
  • 7.குடமிளகாய் வெந்து கொதித்து வற்றி வரும் போது பெருங்காயப்பொடி மற்றும் கொத்தமல்லி தழை கிள்ளி போடவும்
  • 8.நல்ல வாசம் மற்றும் சுவைகூடிய குடமிளகாய் சாம்பார் தயார்

குறிப்பு:

1.புளி சேர்க்க விரும்பினால் தக்காளியின் அளவை குறைத்துக்கொள்ளவும். 2.குடமிளகாய் மஞ்சள்,சிவப்பு,பச்சை கலந்தும் செய்யலாம்,பார்க்கவும் அழகாகவும் இருக்கும்

வழங்கியவர்

மஹாபிரகதீஸ், China

பரிமாறும் அளவு

ஆயத்த நேரம்

சமைக்கும் நேரம்

3 15min 30min
food image


comments
I love this sambar. I
மே 5, 2008 - 3:25pm - வழங்கியவர் rumya

I love this sambar. I usually use green bell pepper. I tried it with red bell pepper but sambar tasted little sweet. My family thinks bell pepper sambar taste really like drumstick sambar. I think so too. So this sambar is our family favorite.

oh thank you ramya
மே 5, 2008 - 10:42pm - வழங்கியவர் Mahalakshmiprag...

Anbu Ramya

Thankyou,for your comments abt this sambar,everytime v use veg mix sambar only, once v change the item and taste it.i tried oneday my hubby like and me also,then i do this sambar often. and once again thank you for the comments

Think Positively U will achieve everything
mahapragatheesh,china