தேவையானப் பொருட்கள்
- சாம்பார் பருப்பு - 1 கப்
- பச்சை குடமிளகாய் - 1(பெரியது அல்லது 2 சிறியது)
- பெரிய வெங்காயம் - 1
- தக்காளி - 2
- சாம்பார் பொடி - 1 டேபிள் ஸ்பூன் (காரம் தேவைக்கேற்ப போடவும்)
- நல்ல மிளகுப்பொடி - 1/2 டீஸ் ஸ்பூன்
- கடுகு - 1/2 டீஸ் ஸ்பூன்
- வெந்தயம் - 1/2 டீஸ் ஸ்பூன்
- சீரகம் - 1/2 டீஸ் ஸ்பூன்
- நல்ல மிளகு - 5 எண்ணம்
- பூண்டு - 1 பல் (நசுக்கி வைக்கவும்)
- பெருங்காயப்பொடி - 1/4 டீஸ் ஸ்பூன்
- கறிவேப்பிலை - 1 கீற்று
- கொத்தமல்லி தழை - கொஞ்சம்
- எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
- உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை
- 1.சாம்பார் பருப்பை குக்கரில் 4 விசில் விட்டு இறக்கவும்.
-
- 2.பச்சை குடமிளகாயை துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.
-
- 3.பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் மெலிதாகவும்,தக்காளியை நீளமாக நறுக்கிக்கொள்ளவும்
-
- 4.அகன்ற பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் கடுகு,சீரகம்,வெந்தயம்,நல்லமிளகு,நசுக்கிய பூண்டு,கறிவேப்பிலை, போட்டு தாளித்துக்கொள்ளவும்.
-
- 5.பின்னர் வெங்காயத்தையும் தக்காளியும் நன்றாக வதக்கவும், அடுத்து பச்சை குடமிளகாய் துண்டுகளை வதக்கி அதில் சாம்பார்பொடி,நல்ல மிளகுப்பொடி போட்டு ஒரு தடவை கிண்டி விடவும்.
-
- 6.கடைசியில் வேகவைத்தப்பருப்பை சேர்த்து தேவைக்கேற்ப தண்ணீர் விட்டு, உப்பு போட்டு கொதிக்கவைக்கவும்.
-
- 7.குடமிளகாய் வெந்து கொதித்து வற்றி வரும் போது பெருங்காயப்பொடி மற்றும் கொத்தமல்லி தழை கிள்ளி போடவும்
-
- 8.நல்ல வாசம் மற்றும் சுவைகூடிய குடமிளகாய் சாம்பார் தயார்
-
-
-
-
-
-
-
-
குறிப்பு
1.புளி சேர்க்க விரும்பினால் தக்காளியின் அளவை குறைத்துக்கொள்ளவும்.
2.குடமிளகாய் மஞ்சள்,சிவப்பு,பச்சை கலந்தும் செய்யலாம்,பார்க்கவும் அழகாகவும் இருக்கும்
பரிமாறும் அளவு
| ஆயத்த நேரம்
| சமைக்கும் நேரம்
|
|
3 |
15 min |
30 min |