கத்திரிக்காய் மசாலா

தேதி: April 1, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கத்திரிக்காய் - அரை கிலோ
வெங்காயம் - 100 கிராம்
தக்காளி - 100 கிராம்
மிளகாய் பொடி - ஒரு மேசைக்கரண்டி
மல்லி பொடி - ஒரு மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி
பட்டை - அரை தேக்கரண்டி
சோம்பு - அரை தேக்கரண்டி
இலவங்கம் - 2
எண்ணெய் - 50 கிராம்
உப்பு - தேவையானவை


 

கத்திரிக்காயை துண்டங்களாக நறுக்கி தண்ணீரில் போட்டு வைக்கவும்.
வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி, பட்டை, சோம்பு, இலவங்கம் தாளித்து அதில் வெங்காயம் சேர்த்துக் பொன்னிறமாக வதங்கியதும் தக்காளி சேர்த்துக் கிளறவும்.
எல்லாம் சேர்ந்து நன்கு சுருண்டு வந்ததும் மிளகாய் பொடி, தனியா பொடி, மஞ்சள் தூள், கத்திரிக்காய் சேர்த்து மூன்று நிமிடம் வதக்கவும்.
பிறகு கால் டம்ளர் வெந்நீர் ஊற்றி வேக விடவும். தண்ணீர் நன்றாக வற்றியதும் அடுப்பிலிருந்து எடுக்கவும்.


மேலும் சில குறிப்புகள்