தேவையான பொருட்கள்
- பச்சரிசி-இரண்டு கோப்பை
- வெல்லம்- இரண்டு கோப்பை
- கசகசா- ஒரு தேக்கரண்டி
- பொடித்த ஏலக்காய்- நான்கு
- எண்ணெய்- பொரிக்க தேவையான அளவு.
|
செய்முறை
- அரிசியை குறைந்தது ஒரு மணி நேரம் ஊறவைத்து
- வடித்து ஒரு கெட்டியான துணியில் கொட்டி உலர்த்தவும்.
- அரிசி முழுவதும் காயவிடவேண்டாம் சற்று ஈரமாயிருக்கும்போதே மிக்ஸியில் மைய்ய பொடித்து பலமுறை ஜல்லடையில் ஜலித்து, அதில் கசகசா மற்றும் பொடித்த ஏலக்காயையும் சேர்த்து கலக்கி வைக்கவும்.
- பிறகு வெல்லத்தில் அரைக்கோப்பை நீரைச் சேர்த்து அடுப்பில் வைத்து கரையவிடவும்.
- பின்பு அதை அடி கணமான பாத்திரத்தில் வடிகட்டி அடுப்பில் வைத்து பாகு காய்ச்சவும்.
- பாகு கெட்டி பாகு பதத்தில் வந்ததும் அடுப்பை சிம்மில் வைத்து மாவை சிறிது சிறிதாக கொட்டி கிளற்வும்.
- அனைத்து மாவையும் கிளறிய பின்பு நன்கு ஆறவைத்து மூடி, இரவு முழுவதும் ஊறவைக்கவும்.
- அடுத்த நாளன்று இறுகி இருக்கும் பாகை கைகளால் நன்கு பிசையவும்,கை சூட்டிலேயே மாவுக் கலவை இலகிவிடும்.
- அவற்றை சிறு உருண்டைகளாக உருட்டி எண்ணெய் தடவிய பிலாஸ்டிக் பேப்பரில் வைத்து வடையை விட சற்று மெல்லியதாகத் தட்டி சூடான எண்ணெயில் போடவும்.
- அடுப்பை நிதானமாக எரியவிட்டு அதிரசங்களை பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
- அதிரசம் சூடாக இருக்கும்போது கெட்டியாக இருக்கும் நன்கு ஆறியபின் பதமாக சாப்டாகிவிடும்.
|
குறிப்பு:
கிளறிய பாகை ஊறவைக்க நேரமில்லாவிட்டால் மாவு கலவையை நன்கு ஆறவைத்து உடனே அதிரசஙளை தட்டி பொரிக்கலாம்.
கெட்டிபாகு என்பது ஒரு தட்டில் சிறிது நீரை ஊற்றி,அதில் கொதிக்கும் வெல்லப்பாகை ஒரு சொட்டு ஊற்றி விரலால் தேய்த்தால் கரையாமல் திரண்டு வரும் அந்த பதம் தான் அதிரசத்திற்க்கு சரியாக இருக்கும், அதுவரை பல முறை இவ்வாறு செய்து பார்க்கவும்.வெல்லம் வாங்கும் போது உருண்டை/மண்டை வெல்லமாக வாங்கி அதை உடைத்து தூளாக்கி அளந்துக் கொள்ளவும்.
வழங்கியவர்
மனோகரி
ஆயத்த நேரம்
|
சமைக்கும் நேரம்
|
|
குறைந்தபட்சம் ஒரு இரவு முழுவதும் ஊறவைத்தல் |
1 மணிநேரம் |
|
|
|
|
சமீபத்தியக் கருத்துக்கள்
ஒரு நிமிடம் 39 நொடிகள் முன்பு -
3 நிமிடங்கள் 30 நொடிகள் முன்பு -
5 நிமிடங்கள் 55 நொடிகள் முன்பு -
13 நிமிடங்கள் 39 நொடிகள் முன்பு -
15 நிமிடங்கள் 53 நொடிகள் முன்பு -
25 நிமிடங்கள் 25 நொடிகள் முன்பு -
29 நிமிடங்கள் 2 நொடிகள் முன்பு -
30 நிமிடங்கள் 7 நொடிகள் முன்பு -
33 நிமிடங்கள் 3 நொடிகள் முன்பு -
38 நிமிடங்கள் 9 நொடிகள் முன்பு -