உள்நுழைதல்

வாக்கெடுப்பு







புதிதாக இணைந்தவர்கள்

சமீபத்தியக் கருத்துக்கள்

 

குடமிளகாய் உசிலி



தேவையான பொருட்கள்

  • பச்சை குடமிளகாய் - 1பெரியது
  • துவரம் பருப்பு - 3/4 கப்
  • வற்றல் மிளகு - 2 எண்ணம்
  • கடுகு - 1/4 டீஸ் ஸ்பூன்
  • உளுத்தம் பருப்பு - 1/4 டீஸ் ஸ்பூன்
  • கறிவேப்பிலை - 1 கீற்று
  • உப்பு - தேவைக்கேற்ப
  • எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை

  • 1.துவரம் பருப்பை கழுவி குக்கரில் போட்டு அதனுடன் வற்றல் மிளகும் , உப்பும் போட்டு அளவாக தண்ணீர் விட்டு 3 விசில் விட்டு இறக்கவும்.அது 3/4 பாக வெந்தால் போதும்
  • 2.பின்னர் வேகவைத்த பருப்பை வற்றல் மிளகோடு மத்தால் கடைந்துவைக்கவும்.
  • 3.பச்சை குடமிளகாயை துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.
  • 4.பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும்,கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளித்து அதில் குடமிளகாயை துண்டுகளை போட்டு வதக்கவும்,அதனோடு 1சிட்டிகை உப்பு போடவும்.
  • 5.இந்த கலவையுடன் கடைந்துவைத்துள்ள பருப்பைச்சேர்த்து கிளறவும்.
  • 6.சுவையுடன் கூடிய குடமிளகாய் உசிலி தயார்.

குறிப்பு:

1.பருப்பில் ஏற்கனவே உப்பு சேர்த்துள்ளதால் குடமிளகாய் கலவையில் பார்த்து போடவும். 2.காரத்திற்கு 2 வற்றல் மிளகு போதும், ஏற்கனவே இது குடமிளகாய் கொண்டு செய்வதால் அதிகம் காரம் தேவை இல்லை.

வழங்கியவர்

மஹாபிரகதீஸ், China

பரிமாறும் அளவு

ஆயத்த நேரம்

சமைக்கும் நேரம்

3 15 min 10 min
  food image


comments
உசிலி
மே 5, 2008 - 9:29am - வழங்கியவர் Vijitvm

இதே ரெசிப்பி வைத்து வெங்காய உசிலி,காராமணி,காரட் கூட பண்ணலாம். நான் பண்னுவதுண்டு ரொம்ப நல்ல இருக்கும்.

Thank you Vijitvm
மே 5, 2008 - 10:21pm - வழங்கியவர் Mahalakshmiprag...

அன்பு விஜி

1.மிக்க நன்றி, எனது குறிப்புகளை நீங்கள் பார்த்து முதல் விமர்சனம் தருகிறீர்கள், மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது,இனி குறிப்புகளை கொடுத்து விட்டு விஜி கமண்ட் எப்பொழுது வரும் என்று எதிர்பார்க்கலாம்.

2.ஆ நான் அன்று தவறாக எழுதிவிட்டேன் விஜி trivandram என்று,அந்த ஊரில் இருக்கிறீர்கள் என்று நினைத்துவிட்டேன் மன்னிக்கவும். பிறகு உங்கள் பதிலில் இருந்து நீங்கள் அமெரிக்காவில் இருப்பது தெரிந்து கொண்டேன்.

3.கிவி பழத்தைக்கொண்டு பச்சடி செய்ய சொன்னீர்கள்,முதல் முறையாக இந்த பெயரை கேட்கிறேன்,முயற்சி செய்து பார்க்கிறேன்.

4.வெங்காய உசிலி (சின்ன வெங்காயமா?),காரமணி என்றால் தட்டை பயறு சரியா?

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

மஹா
மே 6, 2008 - 10:16am - வழங்கியவர் Vijitvm

தவறு இல்லை என்னுடைய்ய பிறந்த ஊர் trivandram நான் தற்போது இருப்பது அமெரிக்கா. கிவி பழம் இங்கு கிடைக்கும். புளிப்பா இருக்கும். அங்கு கிடைக்குமா தெரியாது.

எதில் வேண்டுமானலும் செய்யலாம் நன்றாக காரமணி என்பது நிட்டாமாக பச்சை கலரில் இருக்கும்.

நன்றி