சோம்பு டீ (அ) காப்பி பொடி

தேதி: May 5, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

சுக்கு - 50 கிராம்
சோம்பு - 25 கிராம்
ஏலக்காய் - 10 கிராம்
புதினா - ஒரு கைப்பிடி
பனங்கற்கண்டு - 10 கிராம்


 

சோம்பை லேசாக வறுத்து கொள்ள வேண்டும்.
எல்லாவற்றையும் வெயிலில் காய வைத்து காய்ந்த ஈரமில்லாத மிக்ஸியில் போட்டு பவுடராக்கி ஒரு பவுளில் கொட்டி சூடு ஆறியதும் ஒரு டப்பாவில் போட்டு வைக்க வேண்டும்


மோஷன் ப்ராப்ளம் உள்ளவர்களும் இந்த பவுடர் போட்டு குடிக்கலாம்.
இது வயிறு வலி, கேஸ் பிராப்ளம், வயிறு உப்புசம், செரிக்காமல் இருப்பவர்கள் இந்த பவுடரை ஒரு டம்ளருக்கு கால் தேக்கரண்டி வீதம் டீ (அ) காப்பியில் போட்டு குடிக்க வேண்டும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)ஜலீலா பானு,
நான் பதில் கேட்டதுக்கு கோபத்தில் அதற்குவொரு ரெசிபியை தந்துவிட்டிர்கள் மிக்க நன்றி,
அதெபோல் நீங்கள் தந்த 1,சோம்பு டீ, காப்பி,சோம்பு டீ(அ)காப்பி பவுடர்ல்,பால் கலந்து குடிக்கலாமா.பதில் கூறவும்,
வஸ்ஸலாம்- அன்புடன் சகோதரர் ஷாஹுல் ஹமீத்

அறுசுவை தேன் சுவை

ஜனாப்.ஷாஹுல் ஹமீது

என்ன கேட்கிறீங்கள் நீங்கள்

பாலில் அந்த பவுடர் கலக்கி குடிக்கலாம் என்றா//

இல்லை பால் டீ, பால் காப்பியில் அந்த பவுடரை போட்டு குடிக்கலாமான்னா?

நீங்க கேட்டது எனக்கு புரியல,
விளக்கமாக கேட்கவும்.

ஜலீலா

Jaleelakamal

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) ஜலீலா பானு
1,பால் கலந்த டீ, காப்பியில்?
2,வெறும் டீ, காப்பி,டிக்கஷனில்?
3,வெறும் பாலில்லும்?
வஸ்ஸலாம்- அன்புடன் ஷாஹுல் ஹமீத்

அறுசுவை தேன் சுவை

ஜனாப் ஷாஹுல் ஹமீது

வெறும் பாலில் நான் போட்டதில்லை.//

டீ பிளாக் டீயில் போட்டு குடிக்கலாம்

நான் பால் டீயில் தான் போடுகிறேன்,

பால்,சர்க்கரை, டீ தூள் எல்லாம் சேர்ந்து கொதிக்க ஆரம்பிக்கும் போது நாலு டம்ளர் டீக்கு ஒரு தேக்கரண்டி குவியலாக போட்டு மேலும் இரண்டு முன்று நிமிடம் கொத்திக்க விட்டு இரக்குவேன். (அ) டீ போடு முடித்ததும் அதில் போட்டு சிறிது நேரம் ஊறவைத்து பிறகு வடிகட்டியும் குடிக்கலாம்.

குழந்தைகளுக்கு சோம்பை வருத்து அதில் அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி இரண்டு ஸ்பூனாக வற்றவிட்டு கொடுப்போம்.

இது என் மாமியார் ஐடியா சோம்பு காப்பி, என் ஐடியா சோம்பு டீ

ஜலீலா

Jaleelakamal

அஸ்ஸலாமு அலைக்கும்[வரஹ்] ஜலீலா பானு
பதில் தந்ததுக்கு மிக்க நன்றி,
வஸ்ஸலாம்-அன்புடன் சகொதரர் ஷாஹுல் ஹமீத்

அறுசுவை தேன் சுவை