கோபி ஸ்டஃப்ட் சப்பாத்தி

தேதி: May 5, 2008

பரிமாறும் அளவு: 2 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கோதுமை மாவு -- 2 கப்
காலிப்ளவர் -- 1/2 கப் (துருவியது)
கொத்தமல்லி தழை -- 1/4 கப் (பொடிதாக நறுக்கியது)
புதினா தழை -- 15 இலைகள் (பொடிதாக நறுக்கியது)
மஞ்சள் தூள் -- 3 சிட்டிகை
தனியா தூள் -- 1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் -- 1/4 டீஸ்பூன்
உப்பு -- தே.அ


 

கோதுமை மாவுடன் உப்பு சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து 1/2 மணி ஊறவைக்கவும்.
வாணலியில் காலிப்ளவரை போட்டு ஒரு வதக்கு வதக்கி பின் உப்பு, மஞ்சள்தூள், தனியா தூள், பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கி அதனுடன் கொத்தமல்லி தழை, புதினா இலையை சேர்த்து ஒரு வதக்கு வதக்கி இறக்கி ஆறவைக்கவும்.
கொஞ்சம் ஆறியதும் சப்பாத்தி மாவை சிறு உருண்டையாக உருட்டி சப்பாத்தியாக இட்டு அதில் இந்த காலிப்ளவர் கலவையை வைத்து நன்கு மூடி நன்கு தேய்க்கவும்.
பின் தோசைக்கல்லில் சப்பாத்தியை போட்டு நெய்/எண்ணைய் விட்டு நன்கு வெந்ததும் எடுக்கவும்.
ரெடி.


கெட்டித்தயிருடன் கொஞ்சம் சாட்மசாலா சேர்த்து தொட்டுக்கொள்ள வைத்துக்கொள்ளலாம். போதும்

மேலும் சில குறிப்புகள்


Comments

கோபி ஸ்டஃப்ட் சப்பாத்தி எளிமையான சுவையான குறிப்பு நான் புதினா கிடைக்காததால் சேர்க்கலை கொஞ்சம் காரப்பொடி சேர்த்துக்கொண்டேன்
நன்றிகளுடன்,
லக்ஷ்மிஷங்கர்