தேவையானப் பொருட்கள்
- கோதுமை மாவு -- 2 கப்
- காலிப்ளவர் -- 1/2 கப் (துருவியது)
- கொத்தமல்லி தழை -- 1/4 கப் (பொடிதாக நறுக்கியது)
- புதினா தழை -- 15 இலைகள் (பொடிதாக நறுக்கியது)
- மஞ்சள் தூள் -- 3 சிட்டிகை
- தனியா தூள் -- 1/2 டீஸ்பூன்
- பெருங்காயத்தூள் -- 1/4 டீஸ்பூன்
- உப்பு -- தே.அ
செய்முறை
-
-
-
- கோதுமை மாவுடன் உப்பு சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து 1/2 மணி ஊறவைக்கவும்.
- வாணலியில் காலிப்ளவரை போட்டு ஒரு வதக்கு வதக்கி பின் உப்பு, மஞ்சள்தூள், தனியா தூள், பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கி அதனுடன் கொத்தமல்லி தழை, புதினா இலையை சேர்த்து ஒரு வதக்கு வதக்கி இறக்கி ஆறவைக்கவும்.
- கொஞ்சம் ஆறியதும் சப்பாத்தி மாவை சிறு உருண்டையாக உருட்டி சப்பாத்தியாக இட்டு அதில் இந்த காலிப்ளவர் கலவையை வைத்து நன்கு மூடி நன்கு தேய்க்கவும்.
- பின் தோசைக்கல்லில் சப்பாத்தியை போட்டு நெய்/எண்ணைய் விட்டு நன்கு வெந்ததும் எடுக்கவும்.
- ரெடி.
-
-
-
-
-
-
-
-
-
-
குறிப்பு
கெட்டித்தயிருடன் கொஞ்சம் சாட்மசாலா சேர்த்து தொட்டுக்கொள்ள வைத்துக்கொள்ளலாம். போதும்
பரிமாறும் அளவு
| ஆயத்த நேரம்
| சமைக்கும் நேரம்
|
|
2 நபர்களுக்கு |
25 min |
15 min |