முள்ளங்கி சப்பாத்தி

தேதி: May 7, 2008

பரிமாறும் அளவு: 2 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

முள்ளங்கி -- 1 என்னம்
கோதுமை மாவு -- 2 கப்
மஞ்சள் தூள் -- 1சிட்டிகை
மிளகாய் தூள் -- காரத்திற்கேற்ப
பெரிய வெங்காயம் -- பாதிஅளவு (பொடியாக நறுக்கியது)
தனியா தூள் -- 1/4 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் -- 2 சிட்டிகை
கொத்தமல்லி தழை -- 1 ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
புதினா இலை -- 4 இலை (பொடிதாக நறுக்கியது)
உப்பு -- தே.அ
நெய்/எண்ணைய் -- சப்பாத்திக்கு ஊற்ற


 

முள்ளங்கியின் தோலை சீவிய பின் துருவி அதனை கோதுமை மாவுடன் போடவும்.
அதனுடன் மற்ற எல்லாபொருட்களையும் சேர்த்து நன்கு பிசையவும்.
அவற்றை சிறிய சிறிய சப்பாத்தியாக இட்டு தோசைக்கல்லில் போட்டு நெய்/எண்ணைய் ஊற்றி திருப்பி போட்டு நன்கு வெந்ததும் பரிமாறலாம்.
காய்கறி சாப்பிடாத குழந்தைகளுக்கு இவ்வாறு கொடுக்கலாம்.
சப்ஜி இல்லாமல் சாப்பிட இவை நன்றாக இருக்கும்.
தொட்டுகொள்ள கெட்டித்தயிரில் சிறிதளவு சாட் மசாலா சேர்த்து சாப்பிட ருசியாக இருக்கும்.


மேலும் சில குறிப்புகள்