www.arusuvai.com
முள்ளங்கி சப்பாத்தி
தேவையானப் பொருட்கள்
- முள்ளங்கி -- 1 என்னம்
- கோதுமை மாவு -- 2 கப்
- மஞ்சள் தூள் -- 1சிட்டிகை
- மிளகாய் தூள் -- காரத்திற்கேற்ப
- பெரிய வெங்காயம் -- பாதிஅளவு (பொடியாக நறுக்கியது)
- தனியா தூள் -- 1/4 டீஸ்பூன்
- கரம் மசாலா தூள் -- 2 சிட்டிகை
- கொத்தமல்லி தழை -- 1 ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
- புதினா இலை -- 4 இலை (பொடிதாக நறுக்கியது)
- உப்பு -- தே.அ
- நெய்/எண்ணைய் -- சப்பாத்திக்கு ஊற்ற
செய்முறை
-
-
-
- முள்ளங்கியின் தோலை சீவிய பின் துருவி அதனை கோதுமை மாவுடன் போடவும்.
- அதனுடன் மற்ற எல்லாபொருட்களையும் சேர்த்து நன்கு பிசையவும்.
- அவற்றை சிறிய சிறிய சப்பாத்தியாக இட்டு தோசைக்கல்லில் போட்டு நெய்/எண்ணைய் ஊற்றி திருப்பி போட்டு நன்கு வெந்ததும் பரிமாறலாம்.
- காய்கறி சாப்பிடாத குழந்தைகளுக்கு இவ்வாறு கொடுக்கலாம்.
- சப்ஜி இல்லாமல் சாப்பிட இவை நன்றாக இருக்கும்.
- தொட்டுகொள்ள கெட்டித்தயிரில் சிறிதளவு சாட் மசாலா சேர்த்து சாப்பிட ருசியாக இருக்கும்.
பரிமாறும் அளவு
| ஆயத்த நேரம்
| சமைக்கும் நேரம்
|
|
2 நபர்களுக்கு |
20 min |
12 min |