உடல் தானம்

தோழியர்களே, தோழர்களே, தம்பி, தங்கைகளே

என் சின்ன மாமனார் திரு கே.கே.வி. நாராயண ஐயர் அவர்கள் 24.04.2008 வியாழக் கிழமை காலமாகி விட்டார். அவர் தன் உடலையும், கண்களையும் முன்பே தஞ்சை மருத்துவமனைக்கு தானம் செய்து விட்டார். 25.04.2008 அன்று காலையே ஒரு சிறுவனுக்கும், ஒரு பெண்ணுக்கும் அவரது கண்கள் பொருத்தப்பட்டுவிட்டன. அவரது உடல் தஞ்சை மருத்துவமனையில் உள்ளது.
அவருக்கு வயது 87. அவர் தனது 18வது வயதிலிருந்து இறக்கும் வரை உப்பு, புளிப்பு, இனிப்பு போன்ற எந்த சுவையும் இல்லாத உணவை உட்கொண்டு வாழ்ந்து வந்தார். திருமணம் செய்து கொள்ளவில்லை.
நாம் கூட உடல் தானம் செய்யாவிட்டாலும் நம் கண்களை தானம் செய்யலாம். நாம் இறந்த பின்னும் நம் கண்கள் மூலம் இந்த உலகைப் பார்த்துக் கொண்டிருபோம் என்பது எவ்வளவு பெரிய விஷயம்.
உடல்தானம் பற்றிய உங்கள் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்.

அன்புடன்
ஜெயந்தி மாமி

ஜெயந்தி மாமி... இப்படி ஒரு மாமனார் கிடைக்க புண்ணியம் செய்து இருக்க வேண்டும்.அவரது நல்ல மனதை நான் பாராட்டுகிறேன்....

இவ்வளவு நல்ல குடும்பத்தினரை இழந்து வாடும் உங்கள் குடும்பத்திற்க்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்....
லிவர் கிட்னி போன்ற உடல் உறுப்புகளை தானம் செய்ய முடியும் ஆனால் அதன் மெடிக்கல் இம்ப்ளிகேஷ்ன்ஸ் என்ன என்று தெரியாது.

இந்தியாவிலே லிவர் கிடைத்தாலும் புது டெல்லியில் தான் வெற்றிகரமாக டிரன்ஸ்ப்லேன்ட் செய்ய முடியும்.

Hope is just the part of the equation

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

ஹலோ ஜெயந்தி மேடம், உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கிறேன். அவர் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன். உண்மையிலேயே இதுப் போல மனிதர்கள் இருப்பது அரிது தான். இதைப் போல் ஒவ்வொருவரும் நினைத்து விட்டால் பல பேரின் வாழ்க்கை பிரகாசமாக இருக்கும் இல்லையா? ஆனால் இப்போது இருக்கும் இளைஞர்களுக்கு நிறைய விழிப்புணர்வு உள்ளது. நானும் கண் தானம் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்து இருக்கிறேன்.

நீங்கள் அனைவரும் அறிந்திருப்பீர்களா என்று தெரியவில்லை கடந்த 7 நாட்களுக்கு முன்பு நம் உயிரியே உலுக்கும் அளவிற்கு ஒரு இளைஞனின்(ஹிதேந்திரன்) மரணம் நடந்தது. அவன் இறந்தும் வாழும் விதமாக தன் இதயத்தையே தானமாக கொடுத்து சென்று விட்டான். அவன் குடும்பத்தார்கள் அவனை பிரிந்து தவித்தாலும் அவன் மூலம் மற்றொரு உயிர் வாழ்கிறது என்ற ஆறுதல் அவர்களை தேற்றிக் கொண்டிருக்கிறது. இந்த இருதய மாற்று அறுவை சிகிச்சை டாக்டர்களால் மட்டுமல்ல, ஹிதேந்திரனின் பெற்றோர்கள், அவர்கள் மருத்துவர்களாக இருந்ததாலோ என்னமோ இப்படி ஒரு நல்லெண்ணத்துடன் ஒரு சிறுமியை வாழ வைத்திருக்கிறார்கள். காவல்துறையினர், நமக்கு தான் தெரியுமே சென்னையின் போக்குவரத்தை பற்றி அப்படிப்பட்ட நெருசலில் 40 நிமிடங்களில் செல்லவேண்டிய தூரத்தை வெறும் 11 நிமிடத்தில் கடக்க உதவி புரிந்தனர். அந்த வண்டியை ஓட்டி சென்ற ஓட்டுநரும் பாராட்டுதலுக்கு உரியவர். இப்படி அனைவரது ஒத்துழைப்பாலும் இன்று ஒரு உயிர் ஒன்பது வயது சிறுமியான அபிராமியின் உயிரில் வாழ்கிறது. இதன் மூலம் நம் ஒவ்வொருவருக்கும் உடல் தானம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி சென்ற ஹிதேந்திரனின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திபோம்.

டாக்டர் செரியன் மற்றும் அவரது குழுவினர்கள், ஹிதேந்திரனின் பெற்றோர்கள், காவல்துறையினர் மற்றும் இதில் செயல்பட்ட ஒவ்வொருவருமே
போற்றுதலுக்குரியவர்கள்.

உடல்தானம்,
கேட்கவே உடலெல்லாம் சிலிர்க்கிறது. இது உண்மையில் எல்லோராலும் முடியாத ஒன்று, அப்படிப்பட்ட ஒன்றைச் செய்பவர்கள்.... இறந்தும் வாழ்பவர்கள்... போற்றப்பட வேண்டியவர்கள்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

எப்படி இருக்கீங்க.இப்பதான் இந்த த்ரெட் பார்த்தேன். இந்த செய்தி எனக்கு தெரியாது நீங்க சொல்லி தான் தெரியும் அந்த பையனின் ஆத்மா சாந்தி அடைய நானும் பிராத்திக்கிறேன். ஒரு சின்ன பொண்ணு மூலமாக அவர் இதயம் துடிப்பதை பார்க்க அவர்கள் குடும்பத்துக்கும் ஒரு ஆறுதல் கிடைக்கும்.தானத்தில் சிறந்தது இரத்த தானம் என்பார்கள் ஆனால் உடல் தானம் செய்யவும் பெரிய மனம் வேண்டும்.

அன்புடன் கதீஜா.

ஆம்.ஹிதேந்திரனின் சமபவத்தை பத்திரிகை வாயிலாக படித்து விட்டு கண்கள் கலங்க வில்லை எனக்கு.விம்மி,விம்மி அழுது விட்டேன்.அவர்களின் முழு முகவரி தெரியாமல் பத்திரிகையில் வந்த குறிப்பினை வைத்து,அவரின் பெற்றோருக்கு ஒரு கடிதம் போட்டு விட்டேன்.கைகளை கட்டிக்கொண்டு என்ன ஒரு பவ்வியமாக நிற்கின்றார் அந்த சிறுவன்.அவரை வைத்து அவரது பெற்றோர் என்னவெல்லாம் கற்பனைகள் வைத்து இருந்தனரோ?அனைத்தையும் தவிடு பொடியாக்கி விட்டது ஹிதேந்திரனின் மரணம்.ஹிதேந்திரனின் தம்பிக்கு அவனது அண்ணனின் ஆயுளையும் சேர்த்து நீண்ட காலங்களுக்கு வாழ்ந்து மூத்தமகனிடம் பெறாத சந்தோஷங்களை எல்லாம் இளைய மகனால் பெற்று மகிழ உதவி செய் இறைவா என பிரார்த்தனை செய்து கொண்டேன்.அந்த சிறுவனின் மரணம் ,அதன் பிறகு நடந்த நிகழ்வுகள் என் மனதை ரொம்பவுமே பாதித்து விட்டது.
ஸாதிகா

ஆம்.ஹிதேந்திரனின் சமபவத்தை பத்திரிகை வாயிலாக படித்து விட்டு கண்கள் கலங்க வில்லை எனக்கு.விம்மி,விம்மி அழுது விட்டேன்.அவர்களின் முழு முகவரி தெரியாமல் பத்திரிகையில் வந்த குறிப்பினை வைத்து,அவரின் பெற்றோருக்கு ஒரு கடிதம் போட்டு விட்டேன்.கைகளை கட்டிக்கொண்டு என்ன ஒரு பவ்வியமாக நிற்கின்றார் அந்த சிறுவன்.அவரை வைத்து அவரது பெற்றோர் என்னவெல்லாம் கற்பனைகள் வைத்து இருந்தனரோ?அனைத்தையும் தவிடு பொடியாக்கி விட்டது ஹிதேந்திரனின் மரணம்.ஹிதேந்திரனின் தம்பிக்கு அவனது அண்ணனின் ஆயுளையும் சேர்த்து நீண்ட காலங்களுக்கு வாழ்ந்து மூத்தமகனிடம் பெறாத சந்தோஷங்களை எல்லாம் இளைய மகனால் பெற்று மகிழ உதவி செய் இறைவா என பிரார்த்தனை செய்து கொண்டேன்.அந்த சிறுவனின் மரணம் ,அதன் பிறகு நடந்த நிகழ்வுகள் என் மனதை ரொம்பவுமே பாதித்து விட்டது.
ஸாதிகா

arusuvai is a wonderful website

ஹிதேந்திரா கடந்த ஒரு வாரமாக பெரும் விழிப்புணர்வையே ஊட்டி வருகிறார்.உண்மையில் அவரது பெற்றோர் செய்த சாதனையை,செய்ய கூடியவர்கள் உலகத்தில் மிகச்சிலரே.சன் டிவியில் நான் பார்க்கும் போது கண்ணீரே வந்துவிட்டது.அதுவும் ஹிதேந்திரனின் அப்பா அவரது மகன் பற்றி கூறும் போதும்,மகனின் இருதயம் தானம் அளிக்கப்பட்ட அந்த சிறுமி(அபிராமி)யின் புகைப்படத்தை முத்தமிடும் போதும் மெய்சிலிர்க்க வைத்து என்னை அழ வைத்து விட்டது.
தயவு செய்து இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் தலைக்கவசத்தை அணியுங்கள்.
ஹிதேந்திரா உங்கள் தவறு எல்லோருக்கும் ஓர் படிப்பினை
ஹிதேந்திரா உங்கள் தானம் எல்லோருக்கும் ஓர் பாடம்

மேலும் சில பதிவுகள்