தேவையானப் பொருட்கள்
- கீரை - 1 கட்டு
- துவரம் பருப்பு அல்லது பயத்தம்பருப்பு - 1/2 கப்
- உப்பு - தேவையான அளவு
- சீரகம் - 1 டீஸ்பூன்
- தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன்
- காய்ந்த மிளகாய் - 3
- பெருங்காயம் - 2 சிட்டிகை
- கடுகு - 1/4 டீஸ்பூன்
- உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்
|
செய்முறை
- கீரையை ஆய்ந்து, கழுவி, பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- பருப்பைக் குழைய வேக வைத்துக் கொள்ளவும்.
- ஒரு வாணலியிலோ, பாத்திரத்திலோ கீரையைப்போட்டவும்.
- கல் உப்பையும், சீரகத்தையும் கையால் நிரடி கீரையில் போடவும்.
- வெந்ததும் மத்தால் மசித்து வெந்த பருப்பை சேர்த்துக் கலந்து தேங்காய் எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயம் தாளித்துக் கொட்டவும்.
|
குறிப்பு:
என் பாட்டியின் சமையலில் எனக்கு மிகவும் பிடித்தவற்றில் இந்தக்கீரை மசியலும் ஒன்று.
வழங்கியவர்
T S JAYANTHI CHENNAI 600 048
பரிமாறும் அளவு
|
ஆயத்த நேரம்
|
சமைக்கும் நேரம்
|
|
3 நபர்களுக்கு |
10 நிமிடங்கள். |
10 நிமிடங்கள். |
|
|
|
|
சமீபத்தியக் கருத்துக்கள்
11 நிமிடங்கள் 13 நொடிகள் முன்பு -
12 நிமிடங்கள் 27 நொடிகள் முன்பு -
16 நிமிடங்கள் 33 நொடிகள் முன்பு -
20 நிமிடங்கள் 52 நொடிகள் முன்பு -
23 நிமிடங்கள் 50 நொடிகள் முன்பு -
25 நிமிடங்கள் 13 நொடிகள் முன்பு -
33 நிமிடங்கள் 5 நொடிகள் முன்பு -
35 நிமிடங்கள் 23 நொடிகள் முன்பு -
35 நிமிடங்கள் 32 நொடிகள் முன்பு -
38 நிமிடங்கள் 4 நொடிகள் முன்பு -