உள்நுழைதல்

Sponsored links


வாக்கெடுப்பு






புதிதாக இணைந்தவர்கள்

சமீபத்தியக் கருத்துக்கள்

Sponsored link


 

தூனா டின் மீன் புட்டு

 

மீன் கிடைக்காத இடங்களில் இதை வாங்கி செய்து சப்பிடலாம். வேலை சுலபம்.

தேவையானப் பொருட்கள்

  • தூன மீன் டின் - ஒன்று
  • வெங்காயம் - கால் கிலோ
  • தக்காளி - ஒன்று
  • பச்ச மிளகாய் - இரண்டு
  • மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
  • உப்பு - ஒரு தேக்கரண்டி
  • மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
  • கரம் மசலா தூள் - கால் தேக்கரண்டி
  • எண்ணை - நாலு தேக்கரண்டி
  • கடுகு - ஒரு தேக்கரண்டி
  • இஞ்சி பூண்டு - ஒரு தேக்கரண்டி
  • கருவேப்பிலை - அரை கை பிடி
  • கொத்து மல்லி தழை - சிறிது
  • தேங்காய் துருவல் - கால் கப்

செய்முறை

  • டின்னில் உள்ள மீனை தண்ணீரை வடித்து விட்டு உதிர்த்து கொள்ளவும்.
  • ஒரு இரும்பு வானலியில் எண்ணை ஊற்றி கடுகு,கருவேப்பிலை போட்டு தாளித்து வெங்காய்த்தை பொடியாக அரிந்து போடு வதக்க வேண்டும்.
  • வெங்காயம் வதங்கியதும், இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கவும்,.
  • பிறகு தக்காளியை பொடியாக அரிந்து போட்டு வதக்கி அதில் மிளகாய்தூள், மஞ்சள் தூள், உப்பு தூள், பச்சமிளகாய் போட்டு வதக்கி உதிர்த்து வைத்துள்ள மீனை சேர்த்து நன்கு கிளறி முடி போடு சிறிது நேரம் வேக விட வேண்டும்.
  • கடைசியில் தேங்காய் தூருவல் சேர்த்து கொத்து மல்லி தழை துவி இரக்கவும்.

வழங்கியவர்

ஜலீலா

பரிமாறும் அளவு

ஆயத்த நேரம்

சமைக்கும் நேரம்

முன்று நபர்களுக்கு 15 நிமிடம் 15 நிமிடம்
random food image


comments