www.arusuvai.com
தூனா டின் மீன் புட்டு
மீன் கிடைக்காத இடங்களில் இதை வாங்கி செய்து சப்பிடலாம்.
வேலை சுலபம்.
தேவையானப் பொருட்கள்
- தூன மீன் டின் - ஒன்று
- வெங்காயம் - கால் கிலோ
- தக்காளி - ஒன்று
- பச்ச மிளகாய் - இரண்டு
- மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
- உப்பு - ஒரு தேக்கரண்டி
- மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
- கரம் மசலா தூள் - கால் தேக்கரண்டி
- எண்ணை - நாலு தேக்கரண்டி
- கடுகு - ஒரு தேக்கரண்டி
- இஞ்சி பூண்டு - ஒரு தேக்கரண்டி
- கருவேப்பிலை - அரை கை பிடி
- கொத்து மல்லி தழை - சிறிது
- தேங்காய் துருவல் - கால் கப்
செய்முறை
- டின்னில் உள்ள மீனை தண்ணீரை வடித்து விட்டு உதிர்த்து கொள்ளவும்.
- ஒரு இரும்பு வானலியில் எண்ணை ஊற்றி கடுகு,கருவேப்பிலை போட்டு தாளித்து வெங்காய்த்தை பொடியாக அரிந்து போடு வதக்க வேண்டும்.
- வெங்காயம் வதங்கியதும், இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கவும்,.
- பிறகு தக்காளியை பொடியாக அரிந்து போட்டு வதக்கி அதில் மிளகாய்தூள், மஞ்சள் தூள், உப்பு தூள், பச்சமிளகாய் போட்டு வதக்கி உதிர்த்து வைத்துள்ள மீனை சேர்த்து நன்கு கிளறி முடி போடு சிறிது நேரம் வேக விட வேண்டும்.
- கடைசியில் தேங்காய் தூருவல் சேர்த்து கொத்து மல்லி தழை துவி இரக்கவும்.
-
பரிமாறும் அளவு
| ஆயத்த நேரம்
| சமைக்கும் நேரம்
|
|
முன்று நபர்களுக்கு |
15 நிமிடம் |
15 நிமிடம் |