மைதா ஸ்வீட்

தேதி: May 7, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பால்- 1 கப்
சீனி- 1 கப்
கோதுமை மாவு- 1 கப்
மைதா மாவு- 1 கப்
நெய்- 1 கப்
ஏலப்பொடி- 1 ஸ்பூன்
சோடா உப்பு- 1 சிட்டிகை


 

அனைத்தையும் சேர்த்து நன்கு பிசையவும்.
பிசைய பால் போதவில்லையென்றால் இன்னும் சிறிது சேர்த்துக் கொள்ளலாம்.
பிசைந்த மாவு சப்பாத்தி மாவு போல இருக்கவேண்டும்.
மூன்று மணி நேரம் இந்த மாவை மூடி வைக்கவும்.
பின் சற்று கனமான சப்பாத்தி இட்டு, கத்தியினால் சிறிய துண்டுகள் விருப்பமான டிசைனில் செய்யவும்.
சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

மனோ அக்கா எப்படி இருக்கீங்க? இந்த அருமையான ஸ்வீட் குறிப்பு கொடுத்ததற்கு மிக்க நன்றி. என் அம்மாவும் இதேப் போல் ஒரு ஸ்வீட் செய்வாங்க ஒரே ஒரு வித்தியாசம் எண்ணெயில் பொரிக்காமல் தோசைக்கல்லில் சுட்டதாக ஞாபகம். முக்கியமாக நாங்க பள்ளிக்கூடத்தில் எக்ஸ்கர்ஷன் போகும் போதும், குடும்பமாக நீண்ட ரெயில் பயணத்தின் போதும், கட்டு சாதத்துடன் இந்த பிஸ்கட்டும் கட்டாயம் இடம் பெறும். பார்த்ததும் மலரும் நினைவுகள் வந்து அதிலிருந்து விடுபட நீண்ட நேரமெடுத்தது, அதற்கு ஓராயிரம் நன்றிகள் உங்களுக்கு கூறுகின்றேன். இந்த குறிப்பை கட்டாயம் செய்துப் பார்க்க போகின்றேன் அதேமாதிரி சுவை கிடைத்தால் இந்த உங்க குறிப்பை எனது பொக்கிஷமாக வைத்துக் கொள்வேன். ஆமா ஏன் குறிப்பில் மைதாவிற்கு பதில் கோதுமை என்று இருக்கின்றது, அல்லது கோதுமையைத் தான் குறிப்பிட்டுள்ளீர்களா? என்று சரிபார்க்கும்படி கேட்டுக் கொள்கின்றேன்.நன்றி.

நீங்கள் எழுதியதைப்படிக்க மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. எப்போதுமே சில குறிப்பிட்ட சமையல் குறிப்புகள், நிகழ்வுகள் எல்லாவற்றுக்குமே மலரும் நினைவுகள் உண்டு. அந்த வகையில் என் குறிப்பு உங்களின் மகிழ்வான மலரும் நினைவுகளை கிளறி விட்டதில் எனக்கும் மிகவும் மகிழ்ச்சியே. அப்புறம் நானும் உங்களுக்கு என் நன்றியைத் தெரிவிக்க வேண்டும்- எப்படியோ மைதா பற்றி குறிப்பை எழுதாமல் விட்டிருக்கிறேன். இப்போது அந்த தவறை சரி செய்து விட்டேன். இதில் மைதாவும் உண்டு, கோதுமையும் உண்டு.

வணக்கம் மனோ ஆன்டி உங்களுடைய மைதா ஸ்வீட் செய்தேன் ரெம்ப நல்ல வந்தது நன்றி பொறித்து எடுத்தப்ப ஸாப்டாக இருந்தது ஒரு மணி நேரம் கழித்து ரெம்ப கிரிஸ்பியாக இருக்கு நான் ஏதாவது தப்பு பண்ணியிருக்கேனா நீங்க சொல்லுங்க ஆனாலும் என் குழந்தைங்க ரெம்ப விரும்பி சாப்பிட்டாங்க அடுத்த தடவை கரெக்டா செய்கிறேன் once again thanks

நீங்கள் இந்த மைதா ஸ்வீட்டை செய்து பார்த்து ருசித்து ரசித்ததற்கு என் நன்றி!

இவற்றை ரொம்ப நேரம் வறுக்காமல் அதிக தீயில் பொரிக்காமல், நடுத்தரமான் தீயில் பொன்னிறமாக பொரித்தெடுத்தால் அவை மிருதுவாகவே இருக்கும். அடுத்த முறை செய்யும்போது எப்படி வந்தது என்று சொல்லுங்கள்.

அக்கா உங்க பலகாரம் ரொம்ப அற்புதமாக இருந்தது, ரொம்ப நன்றி. எங்க வீட்டுகாரவுங்கலுக்கு ரொம்ப புடிச்சிருந்தது. நானும் இன்னும் பல செய்முரைகலை பதிவு செய்கிறேன்....மிக்க நன்றி

திலகவதி - U.S.A

மைதா ஸ்வீட் செய்து பார்த்து எழுதியதற்கு என் அன்பான நன்றிகள்!!

Hi Mam,

Yesterday evening i done your maida sweet. thank you for giving this receipe.

Leela Nandakumar

Leela Nandakumar

மைதா ஸ்வீட் நன்றாக வந்ததறிய மகிழ்ச்சி. அன்பான பின்னூட்டத்துக்கு என் அன்பு நன்றிகள்