உள்நுழைதல்

வாக்கெடுப்பு






புதிதாக இணைந்தவர்கள்

சமீபத்தியக் கருத்துக்கள்

 

சுரைக்காய் பகோடா

 


தேவையானப் பொருட்கள்

  • கடலைப் பருப்பு- 1 கப்
  • பச்சரிசி- அரை கப்
  • துவரம்பருப்பு- 1 ஸ்பூன்
  • பயத்தம்பருப்பு- 1 ஸ்பூன்
  • உளுத்டம்பருப்பு- 1 ஸ்பூன்
  • துருவிய சுரைக்காய்- 2கப்
  • பொடியாக அரிந்த வெங்காயம்- 1 கப்
  • நசுக்கிய இஞ்சியும் பச்சைமிளகாயும்- 2 ஸ்பூன்
  • பொடியாக அரிந்த கொத்தமல்லி- அரை கப்
  • கறிவேப்பிலை- சிறிது

செய்முறை

  • பருப்பு வகைகளையும் அரிசியையும் தனித்தனியே போதுமான நீரில் சில மணி நேரங்கள் ஊறவைக்கவும்.
  • முதலில் அரிசியை மையாக அரைத்து, பிறகு, பருப்பு வகைகளையும் சுரைக்காய்த்துருவலையும் உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.
  • மற்ற பொருள்களையும் சேர்த்துக் கலக்கவும்.
  • சூடான எண்னெயில் சிறிய விள்ளல்களாக எடுத்துப் போட்டு பக்கோடக்களாக பொரித்தெடுக்கவும்.


comments
சுரைக்காய் பகோடா & வடை
ஜூன் 6, 2008 - 10:03am - வழங்கியவர் arunkavi

ஹாலோ மனோ மேடம்,
நான் சுரைக்காய் பகோடாசெய்து பார்த்தேன்.நன்றாக வந்தது.ஆனல் நான் பச்சரிசிக்கு பதில் அரிசி மாவு கலந்து கொண்டேன்.வடையாகவும் செய்து பார்த்தேன்.மிகவும் டேஸ்ட்டாக உள்ளது.

நன்றி,
கவிதா

அன்புள்ள கவிதா!
ஜூன் 24, 2008 - 9:32pm - வழங்கியவர் Mrs.Mano

இந்த சுரைக்காய் பக்கோடாவை வடையாகவும் செய்து பார்த்து அன்பான பின்னூட்டம் தந்ததற்கு என் மகிவான நன்றி!!