அடுப்பறை வேலைகளை சுலபமாக்க

வேலைக்கு செல்பவர்களுக்கு அவசர அவசராமாக உணவு செய்ய வேண்டும்..அதுவும் சிறு பிள்ளைகள் உள்ள விட்டில் சொல்லவே வேண்டாம்..
அதனால் அடித்து பிடித்து செய்யாமல் சுலபமாக அதே சமயம் சுவையாக தினசரி சமையல் செய்வது எப்படி என்று பேசுவோமா.எளிதில் சமைக்கக் கூடிய குறிப்புகளோ அறுசுவை லின்கோ இருந்தால் கொடுக்கலாம்.
வித்யா இது உங்களுக்கும் உபயோகப்படும்

ஹா ஹா வரவேற்கிறேன் தளிக்கா//

கொஞ்சம் மெயில் பார்க்க வேண்டி இருக்கு
பார்த்துட்டு வரேன்
மாலதி யக்காவ் வருவாங்க சூப்பரா சொல்ல

ஹி ஹி ஜலீலா

Jaleelakamal

நான் வெஜ் அடிக்கடி செய்பவர்களாக இருந்தால் இஞ்சி&பூண்டை விழுதாக்கி உப்பு,மஞ்சள் சேர்த்து 1 மாதம் வரை ஃப்ரிட்ஜில் வைக்கலாம்.
என் ஆன்டி நான் வெஜ்ஜுக்கு செய்யும் மசாலாவை வதக்கி பாக்கெட் போட்டு ஃப்ரிட்ஜில் மாதக்கணக்கில் வைப்பார்கள்.
தேவைக்கு 1 பாக்கெட் மசாலாவும் சிக்கன் சேர்த்து கிளறி மூடியிட்டு விட்டு போனால் போதும்
சமைப்பதை விட கஷ்டம் என்ன செய்யலாம் என்று யோசிப்பது..அதற்கு அதிக நேரம் வேண்டும்..இரவு படுத்தபின் தூங்க நேரம் எடுக்கும் அந்த நேரத்தில் நாளை என்ன சமைக்கலாம் என்ற்ய் யோசித்து வைத்து விட்டு அடுத்த நாள் காலையே எல்லா பொருட்களும் தயாராஇ வைத்து சமைத்தால் 1 மணிநேரம் போதும்

எப்படி ஜலீலா கண்டுபிடித்தீர்கள்? நான் எழுதுவேன் என்று.
தளிகாவின் புது த்ரட் தலைப்பை பார்த்தவுடனே நாமும் ஏதாவது எழுதவேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்.........
சமையல் வேலை ஈஸியாக முதலில் தேவை கான்ஸன்ட்ரேஷன்.
இரண்டாவது சாமான்கள் கைக்கு எட்டும் தூரத்தில் கரைக்டாக இருக்கவேண்டும்.
தினமும் உபயோகப்படுத்தும் தாளிப்பு சாமான்களை நமக்கு வலது பக்கமாக அடுப்புக்கு பக்கத்திலேயே வைத்திருக்க வேண்டும்.
அஞ்சறைபெட்டி இருந்தால் சௌகரியமாக இருக்கும்.
மற்ற சாமான்களை ட்ரான்ஸ்பரன்ட் கண்டைனர்களில் போட்டு வைக்கவேண்டும்.
அடுப்பு இருக்கும் இடத்திலிருந்து இரண்டு அடி எடுத்துவைத்தால் எல்லா சாமான்களும் இருக்கவேண்டும்.
சிலர் நறுக்க வேண்டியவை, அரைக்கவேண்டியவைகளை எல்லாம் முடித்து ரெடியாக வைத்துக்கொண்டு சமைக்க ஆரம்பிப்பார்கள். ஆனால் நான் பெரும்பாலும் பீன்ஸ், அவரை, கொத்தவரை,வெண்டை போன்ற காய்களை மட்டும்தான் நறுக்கி தயாராக வைத்திருப்பேன். மற்றபடி வெங்காயம், ப. மிளகாய், மற்றும் பொடியாக நறுக்க தேவை இல்லாத காய்களை அடுப்பில் பாத்திரத்தை ஸிம்மில் வைத்து அது சூடாவதற்குள் வெங்காயம் நருக்குவேன். கடுகு வெடித்து வெங்காயம் வதங்குவதற்குள் காயை நறுக்கி விடுவேன்.....இது கொஞ்சம் அனுபவத்தில்தான் வரும்.
மற்ற சாமான்களை போட்டு வதங்கும் நேரத்தில் மிக்ஸியில் அரைக்கவேண்டியதை அரைத்துவிடலாம்.
என்னமோ மேஜிக் செய்வது மாதிரி இருக்கிறதா?
இன்னுமொரு முக்கியமான விஷயம் இப்ப மூன்று பர்னர் அடுப்பு கிடைக்கிறது. எக்சேஞ்ச் ஆஃபரில் கூட கொடுக்கிறார்கள். அதை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்.
ரைஸ் குக்கர் இருந்தால் அதையும் யூஸ் பண்ணலாம்.
சமையல் கலையில் பிகினர்ஸ் எல்லாம் முதல் நாளே காய்களை வாங்கி நருக்கி ஃபிரிஜில் வைக்கலாம். அரைக்க வேண்டியவைகளை அரைத்து ஃபீஸரில் வைக்கலாம்.
நல்ல பழைய ( பிடித்தவர்கள் புதிய பாடலையும் கேட்கலாம் ) பாடல்களை போட்டுவிட்டு மனதை ஒருநிலைப்படுத்தி அதில் லயிக்கவிட்டு சமையலை ஆரம்பித்தால் பிறகு ஒருமணி நேரத்திற்கு மேல் அங்கு என்ன வேலை?.....
சும்மாவா சொன்னாங்க? ஆடிப்பாடி வேலை செஞ்சா அலுப்பிருக்காது.....
சமையல்வேலை சுலபமாக எனக்கு தெரிந்த ஒரேவழி கான்ஸன்ட்ரேஷன்....கான்ஸன்ட்ரேஷன்...
இன்னும் ஞாபகத்தில் ஏதாவது தோன்றினால் பிறகு எழுதுகிறேன்

தளி சூப்பர் திரட் கொஞ்சம் திடகாத்தமா ஆனதும் பதிவு போடறேன்...

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

தளி நல்ல் த்ரெட். இங்கு நான் என் தோழிகள் நாங்கஎல்லாம் செய்யகூடியது எல்லா ஊற வைக்க வேண்டிய பருப்புகள் என்றால் நாங்க கொஞ்சம் மொத்தமாக ஊறவைத்து ப்ரிஸ்ரில் போட்டு வைப்போம். தேவயானா போது எடுத்து குக் பண்ன யூஸ் ஆக இருக்கும். அதே மாதிரி கூட்டு பொடி,கறிகாய் பொடி,சாதம் கலக்க பொடி என்று எல்லாவற்றையும் வைத்துள்ளேம். தேவையான போது அதை எடுத்து ஒரு கிண்ணத்தில் போட்டு தண்ணிர் விட்டு பேஸ்ட் போல செய்து கூட்டு அரைத்து விடும் சாம்பார்ம் எல்லாத்துக்கும் ரொம்ப யூஸ் ஆக இருக்கு, எப்பவும் போய் அரைத்துகொண்டு இருக்க தேவையில்லை.

ப்ரிட்ஜின் மளிகை லிஸ்ட் மேக்னேட் வைத்து ஒட்டி வைத்து கொண்டிருக்கோம். சாமான்கள் திர திர அதில் எழுதி வைத்தால் வீட்டில் எது இருக்கு இல்லை என்பதை தெரிந்து வாங்க யூஸ் ஆக இருக்கும்.

சூப்பர் த்ரெட் தளிகா. உண்மையிலேயே என்னை மாதிரி ஆளுங்களுக்கு ரொம்ப யூஸ்சா இருக்கும். எனக்கு தெரிஞ்சதை சொல்றேன்.
அவசரத்துக்கான ஆபத்பாந்தவன்கள் யாருன்னு பார்த்தா, பொடிகள், தொக்குகள், இன்ஸ்டன்ட் மிக்ஸ் இதெல்லாம் தான். வீட்ல சும்மா இருக்கும் போது இதையெல்லாம் ரெடி செஞ்சுகிட்டா போதும். பருப்புப்பொடி, கருவேப்பிலை பொடி, இட்லிபொடி, புளிகாய்ச்சல், தக்காளி தொக்கு, கொத்தமல்லி தொக்கு, புதினாதொக்கு இதெல்லாம் ப்ரிட்ஜ்ல ரொம்ப நாளைக்கு வைக்கலாம். ரவா இட்லி, ரவா தோசை, பெசரட்டு இதுக்கெல்லாம் இன்ஸ்டன்ட் மிக்ஸ் செஞ்சு வைச்சுக்கலாம்.

இஞ்சி, பூண்டு பேஸ்ட், பச்சை மிளகாய் பேஸ்ட்ன்னு செஞ்சு வைச்சா சமைக்கும் போது ஈசியா இருக்கும். புளி கூட வாரத்திற்கு ஒரு தடவை ஊறப்போட்டு கெட்டியா கரச்சு, லேசா கொதிக்க வைச்சு எடுத்து ப்ரிட்ஜ்ல வைச்சுகிட்டா வேணும் போது சாம்பார்,ரசம்,குழம்புக்கு யூஸ்சாகும்.
Rajini

தளி என் சமையல் டிப்ஸ் இதோ :

தேங்காயை முதல் நாளே உடைத்து கட் பண்ணி பாக்ஸில் போட்டு பிரிஜில் வைத்துப்பேன் இது 2 நாளைக்கு வரும் பால்,துறுவல் இப்படி எனக்கு எடுத்து தேவை படுதோ அதுக்கு உடனே எடுக்க வசதியா இருக்கும்....
இங்சி,பூந்தை பேஸ்ட் பண்ணி டப்பாவில் போட்டு வைத்துப்பேன்...
எப்போதும் என் பிர்ஜில் தயிர் ரெடியா இருக்கும்...

கறி,காய்கறிகளை பால்தீன் கவரில் போட்டு வைதுப்பேன்..கறி வகைகளை மொத்தமாக கிளீன் பண்ணி என் குடும்பத்துக்கு தேவையான அளவை எடுத்து அவைகளை தனி தனி கவரில் போட்டு வைத்துப்பேன்..சமைக்க ஆரம்பிக்குறப்ப ஒரு கவரை மட்டும் எடுத்தால் போதுமானது..மொத்தமா எடுத்து பிய்த்து அதோட போராட வேண்டிய அவசியம் இல்லை....

தேங்காய் அரைக்குறப்ப கொஞ்சம் அதிகமாகவே அரைத்து வைத்துப்பேன்..கசகசாவும் அப்ப்டிதான் அவைகளை பிரீஜரில் வைத்தால் தேவைக்கு எடுத்துக்கலாம்..அதிலும் நமக்கு ஒரு வேலைக்கு எவ்லோ தேவைன்னு நமக்கே தெரியும் சோ அதையும் தேவையான அளவுகளாக உருண்டை பிடித்து போட்டுப்பேன்..எடுக்குறப்ப ஒரு உருண்டையை மட்டும் எடுத்தால் போதமானது...இதெல்லாம் ரெடி ஆனால் போதுமே காலை டீ போடுறப்பவே தாளிச்சும் போட்டுடலாம்...இன்னும் எதும் நினைவுக்கு வந்தால் சொல்லுறேன்

அன்புடன்,
மர்ழியாநூஹுஅன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

உண்மையிலேயே சூப்பர் த்ரெட்தளிக்கா! ,எனக்கு தெரிஞ்சதை சொல்றேன்.

தேங்காய்,அதிகளவு காய்கறிகளிருந்தால் நல்ல பொடிசா,கட் பண்ணி பிரட்ஜ் பிரிசரில் போட்டு வைக்கலாம்,
பச்சைமிளக்காயை காம்பு எடுத்து ஒரு பாக்ஸ் போட்டு பிரட்ஜ் வைக்கலாம்,
கறுவேப்பிலையை நல்ல கழுவி காயவைத்து பிரட்ஜ்ல வைக்கலாம்.
மாலதி யக்கா சொன்ன மாதிரி தினமும் உபயோகப்படுத்தும் தாளிப்பு சாமான் கூட எண்ணையும் நமக்கு வலது பக்கமாக அடுப்புக்கு பக்கத்திலேயே வைத்திருக்க வேண்டும்.
அடுப்புக்கு பக்கத்திலேயே சுக்கர்,காப்பிபொடி,தேயிலைபொடின்னு பெயரெழுத்துன டாப்பாவை யுஸ்பன்னுங்க வந்தவங்களுக்கு கட்க்க்னுகாப்பி,டீபோட வசதியாருக்கும்,
புதுசா உங்க கிச்சனுக்கு வந்து காப்பி போடுரவங்க்ளுக்கும் ரொம்ப ஈஸியா இருக்கும்
பொரித்த எண்ணைய்களை மீண்டும்பயன்படுத்து உடல் நலத்துக்கு கேடு
அதனால்,நல்ல எண்ணைய் விட்டு எவ்வள்வு அப்பளம் பொரிக்க முடியுமோ பொரித்து அதை கவர்ல போட்டு கெட்டி பிரட்ஜ்ல வைக்கலாம்.
ஜாமான் காலியாவுடனே லீஸ்ட்போட்டு எழுந்துவைச்சுகோங்க,காய்கறி,முட்டை,பாலானாலும் சரி அதையும் எழுத்துங்க அத கண்ணுக்கு தெரியிரயிடத்தில வைங்க.
நானும் அப்ப்டித்தான் எழுத்தி வைச்சுப்பேன்,சாமான் வாங்கபோக்கும்போது எடுக்க ஈசியாயிருக்கும்
புளி ஊற வைத்து வைத்திருங்கள், மாசால்பொடிகளை பிரிசரில் பாதுகாத்து கொள்ளுவேன்
வாங்கி வரும் மட்டன் ,சிக்கன்,மீன் அப்படியே வைக்காமல் நல்ல கழுவி பாக்ஸிலாக்கி பிரிசரில் வைத்தால் தேவைப்படும்போது லைட்டா கழுவி பயன்படுத்தலாம்.நினைவுக்கு வந்தால் சொல்லுறேன்

naturebeuaty

எப்படி இருக்கீங்க ரீமா நல்லா இருக்காளா. ஒரு த்ரெட்ல உங்களுக்கு உடம்பு சரியில்லைன்னு இப்பதான் பார்த்தேன் காய்ச்சல் எல்லாம் சரியாகிவிட்டதா.மிகவும் அருமையான த்ரெட் ஆரம்பித்து இருக்கீங்க.

எனக்கு தெரிந்ததை சொல்கிறேன். மாலதி அக்கா,அஞ்சலி சொல்றதை போல தான் நானும் செய்வேன். சீனி, டீ தூள், காபி பவுடர் எல்லாம் வலது பக்கமா வைத்து இருப்பது நல்லது, அதே போல காய்கறிகளை கட் பண்ணியே ப்ரீஜரில் வைத்துக்கலாம். காலையில் நாம டீ போடுறப்பவே மறு அடுப்பில் சமைத்துக்கலாம் வெங்காயம் மட்டும் அந்த சமயத்துல நறுக்கிக்கலாம். நான் காலையில் டீ போடுறப்பவே டிபனும்,லஞ்சுக்கு சாப்பாடும் தயாரித்து வைத்துவிடுவேன். அதே போல நைட் சமயலும் மாலையில் ப்ரீயா இருக்கும் போதே செய்து முடித்துவிடுவேன். என் பையன் தூங்குறப்பவே நிறைய வேலையை முடித்துவிடுவேன். அவன் முழித்து இருக்கும் போது கிச்சனில் போய் இருந்தால் இனி எதுவுமே முடியாது.
ஜலீலா அக்கா சொன்னது போல நாம நாளைக்கு என்னலாம் செய்யலாம்னு யோசித்து வைத்துவிட்டால் வேலை ஈஸியாக இருக்கும். சமையல் செய்றதை விட என்ன செய்யலாம்னு அந்த சமயத்துல யோசித்தால் வேலையே ஓடாது.
மர்ழியா சொன்னது போல மீன்,கறி எல்லாம் சுத்தம் செய்து தனியா வைத்து இருப்பதும் நல்லதுதான்.

அதே போல மசாலா சாமான்களை எல்லாம் சின்ன சின்ன டப்பாக்களில் போட்டு வைத்து மற்றதை பாக்கட்டுடன் பெரிய டப்பாக்களில் போட்டு வைத்துக்கலாம் டேட் போய்விட்டதா என்று பார்க்க வச்தியாக இருக்கும் சில சமயம் நாம அவசரமா சமையல் செய்யும் போது மசாலாவில் ஈரம் பட்டு விட்டால் அந்த மசாலா கெட்டியாகி வீணாக போய்விடுவதை இதன் மூலம் தவிர்க்கலாம்.

சப்பாத்தி,பரோட்டா செய்வதாக இருந்தால் மாவு பிசைந்து வளர்த்து லேசாக தவாவில் போட்டு கவரில் போட்டு ப்ரீஜரில் வைத்துக்கலாம் இது நமக்கு தேவை படும் சமயம் ரெம்பவும் வசதியாக இருக்கும்

நாம கட்லட்,சமோசா போன்றவைகள் செய்யும் போது அதிகமாகவே செய்து ஒரு ப்ளேட்டில் ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் ப்ரீஜரில் வைத்து கொஞ்சம் கெட்டியானதும் டப்பாக்களில் போட்டு ப்ரீஜரில் வைக்கலாம். தேவையான சமயம் வெளியில் எடுத்து சிறிது நேரம் கழித்து பொரித்து சாப்பிடலாம்.
மற்றவை நியாபகம் வந்தால் எழுதுகிறேன்.

அன்புடன் கதீஜா.

இந்த மீதமான இட்லிய வச்சி என்ன பண்ணலாம்? எப்ப பார்த்தாளும் உப்புமா செய்து போர் அடிச்சிட்டு வேற என்ன செய்யலாம் யாராவது ஐடியா சொல்லுங்களேன்.உடனே சொல்ல முடியுமா?

மேலும் சில பதிவுகள்