பச்சை மொச்சை குழம்பு

தேதி: May 8, 2008

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பச்சை மொச்சை -- 1 கப் (தனியாக வேகவைத்தது)
சின்ன வெங்காயம் -- 1/2 கப் (வட்டமாக நறுக்கியது)
பச்சை மிளகாய் -- 2 என்னம் (நீளமாக கீறியது)
பூண்டு -- 4 என்னம் (லேசாக தட்டியது)
தக்காளி -- 2 என்னம் (சிறியது)
சாம்பார் பொடி -- 2 ஸ்பூன்
புளி -- 1/4 கப் (கரைத்தது)
உப்பு -- தே.அ
தாளிக்க:
பட்டை -- 1 சிறிய துண்டு
கடுகு, உளுந்து -- 1/4 டீஸ்பூன்
சிறிய வெங்காயம் -- 10 என்னம் (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை -- 2 இனுக்கு
அரைக்க:
தேங்காய் -- 1 துண்டு
மிளகு -- 1/2 டீஸ்பூன்
சீரகம் -- 1/2 டீஸ்பூன்
சோம்பு -- 1/4 டீஸ்பூன்
கசகசா -- 1/4 டீஸ்பூன்


 

குக்கரில் எண்ணைய் ஊற்றி வெங்காயம், பச்சைமிளகாய், பூண்டு சேர்த்து வதக்கி தக்காளி போட்டு வதக்கி உப்பு போடவும்.
நன்கு வதங்கியதும் சாம்பார் பொடி சேர்த்து ஒரு கொதி வந்ததும் புளி தண்ணீரை ஊற்றி ஒரு கொதி வந்ததும் பச்சை மொச்சையை போடவும்.
கொதிக்கும் சமயம் அரைக்க வேண்டியவைகளை அரைக்கவும்.
அதையும் கொதிக்கும் குழம்பில் ஊற்றி ஒரு கொதிவந்ததும் குக்கரை மூடி வெயிட்டை போட்டு ஒரு விசில் வந்ததும் சிம்மில் 10 நிமிடம் வைத்து இறக்கவும்.
ஸ்ட்ரீம் போனதும் திறந்து தாளிக்கவேண்டியவைகளை தாளித்து கொட்டி தேவை எனில் மீண்டும் கொதிக்கவைத்து இறக்கி பரிமாறலாம்.
சுவையான பச்சைமொச்சை குழம்பு ரெடி.


மேலும் சில குறிப்புகள்


Comments

வணக்கம் சுபா ஜெயபிரகாஷ் நலம் தானா,
1,பச்சை மொச்சையை தனியாக வேக வைத்து கொள்ளவேண்டும்
யென்று குறிப்பிட்டுள்ளீர்கள்,[எவ்வளவு நிமிடம் வேக வைக்க
வேண்டும்]
2,பிறகு வேக வைத்தே மொச்சையை குழம்பில் போட்டு வேக
வைத்தால் கரைந்து விடுமே?
3,அதற்கு பதில் தனியாக வேக வைக்காமல் நேரடியாக குழம்பில்
போட்டு வேகவைத்தால் என்ன?
4,அப்படி ஏதேனும் விளக்கம்யிருந்தால் தெரிவிக்கவும்.
[அதை செய்முறையில் மாற்றிஅமைக்க வேண்டும்]
அன்புடன் சகோதரர் ஷாஹுல் ஹமீத்

அறுசுவை தேன் சுவை

அன்புள்ள ஷாகுல் ஹமீது அவர்களுக்கு,
நலமாயிருக்கிறோம். நன்றி.

குக்கரில் செய்தால் வேகவைக்க தேவையில்லை.அப்படியே போடலாம்.
வாணலியில் செய்தால் வேகவைக்கவேண்டும்.குக்கரில் பச்சைமொச்சையை 4 விசில் வைத்தால்
போதுமானது. சில சமயம் பாதி மொச்சை வெந்தும் பாதி வேகாமலும் இருக்கும். அந்தமாதிரி சமயத்தில் வேகவைப்பதே சிறந்தது.

காய்ந்த மொச்சை என்றால் ஒரு விசில் வரும் வரை ஹையிலும் 10 நிமிடம் சிம்மிலும் இருந்தால் நன்றாக இருக்கும்.
காய்ந்த மொச்சையிலும் இதே மாதிரி குழம்பு செய்யலாம்.