www.arusuvai.com
பச்சை மொச்சை குழம்பு
தேவையானப் பொருட்கள்
- பச்சை மொச்சை -- 1 கப் (தனியாக வேகவைத்தது)
- சின்ன வெங்காயம் -- 1/2 கப் (வட்டமாக நறுக்கியது)
- பச்சை மிளகாய் -- 2 என்னம் (நீளமாக கீறியது)
- பூண்டு -- 4 என்னம் (லேசாக தட்டியது)
- தக்காளி -- 2 என்னம் (சிறியது)
- சாம்பார் பொடி -- 2 ஸ்பூன்
- புளி -- 1/4 கப் (கரைத்தது)
- உப்பு -- தே.அ
- தாளிக்க:
- பட்டை -- 1 சிறிய துண்டு
- கடுகு, உளுந்து -- 1/4 டீஸ்பூன்
- சிறிய வெங்காயம் -- 10 என்னம் (பொடியாக நறுக்கியது)
- கறிவேப்பிலை -- 2 இனுக்கு
- அரைக்க:
- தேங்காய் -- 1 துண்டு
- மிளகு -- 1/2 டீஸ்பூன்
- சீரகம் -- 1/2 டீஸ்பூன்
- சோம்பு -- 1/4 டீஸ்பூன்
- கசகசா -- 1/4 டீஸ்பூன்
செய்முறை
-
-
-
- குக்கரில் எண்ணைய் ஊற்றி வெங்காயம், பச்சைமிளகாய், பூண்டு சேர்த்து வதக்கி தக்காளி போட்டு வதக்கி உப்பு போடவும்.
- நன்கு வதங்கியதும் சாம்பார் பொடி சேர்த்து ஒரு கொதி வந்ததும் புளி தண்ணீரை ஊற்றி ஒரு கொதி வந்ததும் பச்சை மொச்சையை போடவும்.
- கொதிக்கும் சமயம் அரைக்க வேண்டியவைகளை அரைக்கவும்.
- அதையும் கொதிக்கும் குழம்பில் ஊற்றி ஒரு கொதிவந்ததும் குக்கரை மூடி வெயிட்டை போட்டு ஒரு விசில் வந்ததும் சிம்மில் 10 நிமிடம் வைத்து இறக்கவும்.
- ஸ்ட்ரீம் போனதும் திறந்து தாளிக்கவேண்டியவைகளை தாளித்து கொட்டி தேவை எனில் மீண்டும் கொதிக்கவைத்து இறக்கி பரிமாறலாம்.
- சுவையான பச்சைமொச்சை குழம்பு ரெடி.
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
பரிமாறும் அளவு
| ஆயத்த நேரம்
| சமைக்கும் நேரம்
|
|
4 நபர்களுக்கு |
15 min |
45 min |