உள்நுழைதல்

வாக்கெடுப்பு






புதிதாக இணைந்தவர்கள்

சமீபத்தியக் கருத்துக்கள்

 

கோதுமை மசாலா வடை

 


தேவையானப் பொருட்கள்

  • உடைத்த கோதுமை (or) கோதுமை ரவை - 1 கப்
  • வெள்ளை உளுந்து - 1/2 கப்
  • பெரிய வெங்காயம் - 1/2 கப்(பொடியாக நறுக்கியது)
  • பச்சைமிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
  • சோம்பு - 1/2 டீஸ் ஸ்பூன்
  • கறிவேப்பிலை - 2கீற்று (பொடியாக நறுக்கியது)
  • உப்பு - தேவைக்கேற்ப
  • எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

செய்முறை

  • 1.பெரிய வெங்காயத்தையும்,பச்சைமிளகாயையும் பொடியாக நறுக்கி உப்பு போட்டு விரவி வைக்கவும்,கறிவேப்பிலையையும் நறுக்கி கொள்ளவும்.
  • 2.உடைத்த கோதுமை (or) கோதுமை ரவை, மற்றும் வெள்ளை உளுந்தை 3 மணி நேரம் ஊற வைத்து "கரகரப்பாக" அறைத்துக் கொள்ளவும்.நைசாக வேண்டாம், அரைத்தவிழுது ஒன்றிரண்டாக இருந்தாலும் பரவாயில்லை.
  • 3.ஒரு பாத்திரத்தில் அறைத்த மாவையும்,சோம்பு,நறுக்கி வைத்துள்ள வெங்காயம்,பச்சைமிளக்காய்,கறிவேப்பிலை இவற்றை பிழிந்து விட்டு விரவவும்(உப்பு பார்த்துவிட்டு போடவும்)
  • 4.பொரிக்க எண்ணெய் விட்டு காய்ந்ததும் சிறு சிறு வடைகளாக தட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.வடைகளாக சரியாக தங்களுக்கு தட்ட வராது என்றால் ஒரு சின்ன குழிகரண்டியில் எண்ணெய் தேய்த்து அரைத்த மாவை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
  • 5.சுவையான கோதுமை மசாலா வடை தயார்

குறிப்பு:

1.எதற்காக உப்பு போட்டு விரவ வேண்டும் என்றால் வெங்காயம் மற்றும் பச்சைமிளகாயும் நன்றாக நைந்து விடுவதால் வடையின் உள் பகுதி விரைவில் வெந்து விடும். 2.சில வேளையில் மாவில் உப்பு போட்டு விரவுவதால் மாவுப்பதம் இளகி வடை சரியாக வராது அதனால் வெங்காயத்தில் போட்டு விரவி 5நிமிடம் கழித்து பிழிந்துவிட்டு விரவவும். 3.உடைத்த கோதுமை (or) கோதுமை ரவை இது அதிகம் வழுவழுப்பு தன்மையுடையதுதால் அரைக்க சிறிது கடினமே, ஆனால் விரைவில் ரவை ஊறிவிடும்(நான் கோதுமைரவை வைத்து தான் செய்வேன்) 4.அரைத்த விழுது தண்ணியாக மட்டும் இருக்கவே கூடாது

வழங்கியவர்

மஹாபிரகதீஸ், China

பரிமாறும் அளவு

ஆயத்த நேரம்

சமைக்கும் நேரம்

3 3 hr 20 min
  food image


comments
Hello maha, its a very good
மே 8, 2008 - 9:54am - வழங்கியவர் priyaudai

Hello maha,

its a very good recipe, iam going to try this... but one doubt for me... the rava u mentioned is the coarse wheat rava? if yes means how to soak it? after soaking it is difficult to grind it know?... i think u can understand my doubt.. please clear my doubt.. iam going to try this recipe... thanks..

வணக்கம்
மே 8, 2008 - 7:32pm - வழங்கியவர் Mahalakshmiprag...

அன்பு பிரியா

1.முதலில் நன்றி எனது குறிப்பு பார்த்து கேள்வி எழுப்பியதற்கு
2.நீங்கள் குறிப்பிட்டது போல் இந்த ரவை வழுவழுப்பு தன்மையுடையதுதான்,நன்றாக ஊறியபின் தண்ணீரை வடித்து விட்டு மிக்ஸியில் ஒரு தடவை ஓட விட்டு,பின்பு உளுந்தை போட்டு "கரகரப்பாக" அரைத்தால் போதும்.அரைத்த விழுது ரொம்ப நைசாக வேண்டாம்,
3.அரைத்த விழுது தண்ணியாக மட்டும் இருக்கவே கூடாது
4.நீங்கள் முழு கோதுமையை ஊறவைத்தால் அதுவும் மேற் கூறியது போலவே அரைக்கவும் ஆனால் இது ஊறவைக்கும் நேரம் அதிகம்.
5.நீங்கள் கேள்வி கேட்ட பின்பு ஒரு சில குறிப்பு சேர்த்துள்ளேன் பார்க்கவும்.

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

கோதுமை ரவை
மே 8, 2008 - 9:29pm - வழங்கியவர் vinnie

அன்பு மஹா, ப்ரியா அவர்கள் வெள்ளையாக இருக்குமே அந்த ரவையை நினைத்து சொல்கிறார்களோ என்று சந்தேகமாக உள்ளது. இந்த ரெஸிப்பிக்கு உடைத்த கோதுமை/கோதுமை ரவையைத்தானே உபயோகப் படுத்தியுள்ளீர்கள். ப்ரியா நான் சொல்வது சரியா இல்லை வழக்கம்போல் குழப்பிவிட்டேனா?:-D

வணக்கம்
மே 8, 2008 - 10:01pm - வழங்கியவர் Mahalakshmiprag...

அன்பு வின்னி

1.நீங்கள் கூறியது போல் இதுகோதுமையில் செய்யும் ஒரு ரெசிப்பி அதனால் முழு கோதுமை (அ) உடைத்த கோதுமை (அ) கோதுமை குருணை (ரவை) இந்த 3 லும் செய்யலாம் ஆனால் ஊற வைக்கும் பக்குவம் தான் முக்கியம்
2.ரொம்ப நன்றி பிரியா கேட்ட கேள்விக்கு தாங்கள் தந்த பதிலில் இருந்து அது வெள்ளை ரவை இல்லை எனபது அவருக்கு புரிந்து இருக்கும் என எண்ணுகிறேன்.

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

thanks
மே 9, 2008 - 3:05am - வழங்கியவர் priyaudai

Thanks a lot for replying.. now my doubt is cleared.. i understood.. its a new and different recipe.. i'll try this and send the feedback to u maha madem...

no vinnie u r correct.. u
மே 9, 2008 - 3:07am - வழங்கியவர் priyaudai

no vinnie u r correct.. u didnt confuse.. i know its wheat rava only.. r u going to try this recipe?

yummy
மே 9, 2008 - 9:10am - வழங்கியவர் priyaudai

Hello maha madem,

just now i prepared ur vada recipe.. mmm it tastes yummy and in different taste.. my husband liked it very much.. the credit goes to u only.. i added one more green chilli to it for extra spicey.. expecting such different recipe's for u a lot.. thanks bye..

வணக்கம்
மே 11, 2008 - 10:36pm - வழங்கியவர் Mahalakshmiprag...

அன்பு பிரியா
1.எப்படி இருக்கீறீங்க,மிகவும் மகிழ்ச்சி எனது குறிப்பை செய்து பார்த்து உடனடியாக பதில் தந்தமைக்கு,நீங்கள் ரவை அரைக்க வருமா? என்ற கேள்வி எழுப்பிய உடன் ,கோதுமையில் கண்டிப்பாக அரைத்து வடை செய்யலாம் என்று உங்களுக்கு விளக்கவேண்டி நான் கோதுமையை ஊறவத்து அரைத்து வடை செய்து போட்டோவும் எடுத்து எனது குறிப்பில் சேர்த்து விட்டேன்.
2. வின்னி அவர்கள் நீங்கள் தவறாக வெள்ளை ரவையை நினைத்து இருக்கிறீர்கள் என்று சரியான சமயத்தில் பதில் தந்ததற்க்கும் அவர்களுக்கும் நன்றி சொல்கிறேன்.
3.மற்றும் ஒரு வேண்டுகோள் என்னை மேடம் என்று குறிப்பிடவேண்டாம்,எனக்கு இன்னமும் 30வயது கூட ஆகவில்லை.

Think Positively U will achieve everything
mahapragatheesh,China

ஹாய் மஹா,
மே 11, 2008 - 11:57pm - வழங்கியவர் kr

ஹாய் மஹா,
நான் சினாவில் உள்ள ஷங்காய் நகரத்தில் வசிக்கிரேன்.நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்?

வணக்கம்
மே 12, 2008 - 4:28am - வழங்கியவர் Mahalakshmiprag...

ஹாய் kr

நான் சீனாவில் உள்ள shaoxing நகரத்தில் வசிக்கிறேன் .உங்கள் பெயர் என்ன?

மஹாபிரகதீஸ்

நலமா
மே 12, 2008 - 1:10pm - வழங்கியவர் vinnie

அன்பு ஹிபா, மஹா இருவரும் நலமா? சீனாவில் பயங்கரமான பூகம்பம் என்று டீவியில் பார்த்தேனே. இருவருக்கும் ப்ரச்சனை ஒன்றும் இல்லையே.

வணக்கம்
மே 13, 2008 - 10:19pm - வழங்கியவர் Mahalakshmiprag...

அன்பு வின்னி
மிக்க நன்றி, நான் எனது குடும்பம்மும் நலமே,மற்றும் ஹிபா என்பவர் யார்? என்று எனக்கு தெரியாது, கடவுள் ஆசீர்வாதத்தில் அவரும் நலமாகவே இருப்பார்.பூகம்பம் நடந்தது நான் இருக்கும் இடத்தில் இருந்து 400கீ.மீ தூரத்தில் இருக்கிறது.,ரொம்ப மகிழ்ச்சி அறுசுவை இணையதளம் மூலம் எனக்கு ,நீங்கள் ஒரு நல்லதொரு தோழி கிடைத்துள்ளீர்.சமையல் நிகழ்ச்சி கொடுக்கும் இணையதளத்தில்,சமையல் மட்டும் அல்லாது அதையும் தாண்டி மற்றவர்களுடன் ஒரு தொடர்பு ஏற்படுத்திக்கொடுத்தில் பாபு சாருக்கு இந்தநேரத்தில் மிக்கநன்றி தெரிவித்துக்கொள்கிறேன்

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

மஹா
மே 14, 2008 - 2:01pm - வழங்கியவர் vinnie

அன்பு மஹா உங்களுக்கு எந்த ப்ரச்சனையும் இல்லை என்பதை அறிந்து மிக்க மகிழ்ச்சி. ஹிபா என்பது வேறு யாரும் இல்லை, அவர் நம்ம kr தான். அவரும் நலமாகவே உள்ளார் என்பது குறித்து நிம்மதியாக உள்ளது. ஆமாம் அட்மின் அவர்கள் சேவை நோக்கோடு இந்த தளத்தை நடத்தி வருகிறார். சமையலையும் தாண்டி எத்தனையோ நல்ல விஷயங்களும் இதில் அடக்கம்.உங்கள் அறிமுகம் கிடைத்ததில் எனக்கும் மிகவும் சந்தோஷம்