தேவையானப் பொருட்கள்
- நேந்திரம்பழம் - 5(பழுத்த பழம் பார்த்து வாங்கவும்)
- சர்க்கரை (வெல்லம்) - 3/4 கிலோ
- தேங்காய் - 1/2 மூடி
- ஜவ்வரிசி - 100 கிராம்
- அண்டி பருப்பு - 10 எண்ணம்
- கிஸ்மிஸ்பழம் - 10 எண்ணம்
- ஏலக்காய் - 3 (தட்டி வைக்கவும்)
- நெய் - 100 கிராம்
|
செய்முறை
- 1.நேந்திரம்பழத்தை தோலுரித்து பொடிப்பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.ஒரு பாத்திரத்தில் கொஞ்சம் தண்ணீர் விட்டு நறுக்கிய துண்டுகளை போட்டு வேகவைக்கவும்.
- 2.வெல்லத்தை பொடியாக்கிக்கொள்ளவும்.
- 3.தேங்காய்யை துருவி அதில் ஒரு கப் தண்ணீர் விட்டு கையால் பிசைந்து வடிகட்டி பால் எடுத்து வைக்கவும்(1ஆம் பால்), மீண்டும் 2 கப் தண்ணீர் விட்டு மிக்ஸியில் ஒரு அடி அடித்து விட்டு வடிகட்டி பால் எடுத்து வைக்கவும்(2ஆவது பால்)
- 4.அடுப்பை சிம்மில் வைத்து வேறு ஒரு பாத்திரத்தில் ஜவ்வரிசி மூழ்கும்வரை தண்ணீர் விட்டு வேகவைக்கவும். அதை கிளறிக் கொண்டே இருக்கவும்,ஜவ்வரிசி வெந்து கலவை கட்டியான பிறகு அடுப்பை அணைத்து விடவும்.
- 5.நேந்திரம்பழம் நன்றாக வெந்ததும்,தண்ணீர் வற்றிவரும் போது அதைக் கொஞ்சம் நெய்விட்டு,வெல்லம் சேர்த்து வரட்டவும்.
- 6.நன்றாக வரண்டு வந்ததும் 2ஆம் பால் ஊற்றி கிளறவும்,ஒரு கொதி வந்ததும் 1ஆம் பால் ஊற்றி,ஜவ்வரிசி கலவையையும் போட்டு நன்கு கைவிடமால் கிளறவும்.நல்ல வாசனையோடு வரும் போது நெய்விட்டு கிளறவும்.
- 7.ஒரு வாணலியில் கொஞ்சம் நெய்விட்டு அதில் அண்டி பருப்பு ,கிஸ்மிஸ்பழம்,ஏலக்காய் பொடிபண்ணியதும் போட்டு வறுத்து பாயாசத்தில் போடவும்.
- 8.நல்ல வாசனையோடும் சுவையோடும் நேந்திரம்பழம் பாயாசம் தயார்.
|
வழங்கியவர்
மஹாபிரகதீஸ்,China
பரிமாறும் அளவு
|
ஆயத்த நேரம்
|
சமைக்கும் நேரம்
|
|
5 |
20 min |
20 min |
|
|
|
|
சமீபத்தியக் கருத்துக்கள்
8 நிமிடங்கள் 44 நொடிகள் முன்பு -
9 நிமிடங்கள் 58 நொடிகள் முன்பு -
14 நிமிடங்கள் 4 நொடிகள் முன்பு -
18 நிமிடங்கள் 23 நொடிகள் முன்பு -
21 நிமிடங்கள் 22 நொடிகள் முன்பு -
22 நிமிடங்கள் 45 நொடிகள் முன்பு -
30 நிமிடங்கள் 37 நொடிகள் முன்பு -
32 நிமிடங்கள் 55 நொடிகள் முன்பு -
33 நிமிடங்கள் 4 நொடிகள் முன்பு -
35 நிமிடங்கள் 36 நொடிகள் முன்பு -