உள்நுழைதல்

Sponsored links


வாக்கெடுப்பு






புதிதாக இணைந்தவர்கள்

சமீபத்தியக் கருத்துக்கள்

Sponsored link


 

கோழி சாப்ஸ்

 


தேவையானப் பொருட்கள்

  • கோழி - 1 கிலோ
  • பச்சை மிளகாய் - 3
  • இஞ்சி - 2 அங்குலம்
  • பெரிய வெங்காயம் - 1
  • முட்டை - 3
  • உப்பு - தேவையான அளவு

செய்முறை

  • கோழி இறைச்சியை நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.
  • இஞ்சி, பச்சை மிளகாய், பெரிய வெங்காயம் ஆகியவற்றை ஒன்றாய் சேர்த்து அரைத்து, அத்துடன் சிறிது உப்பும் சேர்த்து கோழி இறைச்சியுடன் கலந்து, நன்கு பிசறி வைக்கவும்.
  • சிறிது நேரம் சென்றவுடன் இறைச்சியை குக்கரில் ஒரு தனிப்பாத்திரத்தில் வைத்து வேக விடவும். ஒரு விசில் வந்தவுடன் இறக்கி விடவும்.
  • ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி, அதில் உப்பு சேர்த்து நுரைக்க அடித்து கலக்கவும்.
  • வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் வேக வைத்து எடுத்துள்ள கோழி இறைச்சியை முட்டை கலவையில் முக்கி எடுத்து, எண்ணெய்யில் போட்டு பொரித்து எடுக்கவும்.

வழங்கியவர்

திருமதி. கரோலின் இம்மானுவேல்

பரிமாறும் அளவு

ஆயத்த நேரம்

சமைக்கும் நேரம்

6 நபர் 15 நிமிடங்கள் 30 - 45 நிமிடங்கள்
random food image


comments
என்ன சொல்றாங்க
மே 9, 2008 - 2:29am - வழங்கியவர் sekar

இது என்ன லாங்க்வேஜ்? கொழி, பசை மிலகை, வெஙயம் இதெல்லாம் எங்க கெடைக்கும்னு கொஞ்சம் சொல்லுங்க

எனக்கு புரிஞ்சுடுத்து
மே 9, 2008 - 2:34am - வழங்கியவர் T S JAYANTHI

கோழி, பச்சை மிளகாய், வெங்காயம்
அது ஒண்ணுமில்ல சேகர். தமிழ் வல்லாடுது.
அன்புடன்
ஜெயந்தி மாமி

யாருடைய குறிப்பு
மே 9, 2008 - 2:43am - வழங்கியவர் harigayathri

இது யாராடோட குறிப்பு? என்ன தமிழ் இது, வார்த்தை எல்லாம் புதுசா இருக்கு. சரியா தமிழ் தெரியலனா பழகிய பிறகு குறிப்பு குடுக்கலாம்ல?

நிர்வாகி கவனிக்கவும்
மே 9, 2008 - 2:46am - வழங்கியவர் sekar

இப்படியெல்லாம் குறிப்பு வெளியானா அறுசுவையோட தரம் குறைஞ்சு போயிடும். முதல் பக்கத்துல இனிய தமிழில் ஒரு இணையத்தளம்னு போட்டுட்டு உள்ளே தமிழ் கொலை நடக்கிறது நல்லது இல்ல. இப்பல்லாம் நிறைய குறிப்பு இப்படி வருது. கொஞ்சம் கவனியுங்க.

என்னால் தாங்க முடியலே
மே 9, 2008 - 3:44am - வழங்கியவர் kulasaisulthan

பல முறை நான் அனைவருக்கும் சொல்கிறது தான். தயவு செய்து பிழைகள் இல்லாமல் எழுத முயற்சியுங்கள். கேட்டால் அவசரத்தில் பதிவு போடுவதால் இந்த தவறுகள் நடப்பதாக கூறுகிறீர்கள். வேண்டாம் இந்த விளையாட்டு. தமிழோடு விளையாட வேண்டாம். கையெடுத்து கும்பிட்டு கேட்டு கொள்கிறேன். அட்மின் என்ன செய்கிறார் என தெரியவில்லை. கொஞ்ச காலமாகவே மவுன விரதம் இருக்கிறார் போலும். சார்! கொஞ்சம் தளத்துக்கு வாங்க! வந்து பாருங்க இங்கே என்ன கொலை நடக்கிறது என்று? குறிப்பு போட்டவரின் பெயர் கூட இல்லாமல் குறிப்புகள் வருகின்றன.
குலசை சுல்தான்.

வீழ்வதில் வெட்கப் படாதே! மீண்டு எழுவதில் தான் வெற்றி கிட்டும்...

மாற்றம் தேவை
மே 9, 2008 - 4:35am - வழங்கியவர் malathi

எஸ்....அருசுவையின் நிர்வாகி அடிக்கடி காணாமல் போய்விடுகிறார்...அந்த மஷ்ரூம் பாலக் பிரியாணி படம் பாருங்கள் எத்தனை நாட்களாக மாற்றப்படாமல் அப்படியே இருக்கிறது... நம் சகோதரிகள் நிறைய படங்களை அனுப்பிவிட்டு காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

எழுத்து பிழைகள்
மே 9, 2008 - 9:45am - வழங்கியவர் admin

குறிப்புகளில் உள்ள எழுத்துப் பிழைகள் பற்றி:

கூட்டாஞ்சோறு பகுதியில் எழுத்து பிழைகளோடு குறிப்புகள் கொடுப்பவர்களை இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கலாம்.

1. உண்மையிலேயே என்ன எழுத்து பயன்படுத்துவது என்று தெரியாமல், எந்த ர, எந்த ன போடுவது என்று தெரியாமல் பிழை செய்வர்கள் ஒரு வகை. இவர்கள் எத்தனை குறிப்புகள் கொடுத்தாலும் அதில் அந்த பிழைகள் தொடரும்.

2. சரியான எழுத்துக்கள் தெரிந்திருந்தும் இந்த தமிழ் விசைப்பலகை பயன்படுத்த தெரியாமல் தவறுகள் செய்பவர்கள் மற்றொரு வகை. இவர்கள் காலப்போக்கில், கீபோர்டு பழக்கம் ஆனவுடன் சரியாகிவிடுவார்கள்.

இங்கே இந்த குறிப்பினை கொடுத்துள்ளவர் இரண்டாவது வகையைச் சேர்ந்தவர். கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றியவர். தமிழ் நன்கு அறிந்தவர். எனது நெருங்கிய நண்பரின் துணைவியார். Baking நுட்பங்களை முறைப்படி கற்றறிந்தவர்.

இதற்கு முன்பு அவரது குறிப்புகளை நான் டைப் செய்து வெளியிட்டு வந்தேன். தற்போது அவரது இல்லத்தில் இண்டெர்நெட் கனெக்சன் கொடுக்கப்பட்டவுடன், அவரையே நேரடியாக குறிப்புகள் கொடுக்கச் சொல்லி நான்தான் வற்புறுத்தினேன். அவர் நேரடியாக அறுசுவையில் பங்களித்தால் நன்றாக இருக்கும் என்பது எனது எண்ணம். அவர் இப்போதுதான் முதல்முறையாக தமிழில் தட்டச்சு செய்ய பழகுகின்றார். குறிப்புகள் கொடுக்கும் பகுதியில் இதனை பரிசோதனையாகத்தான் டைப் செய்திருக்கின்றார். அது வெளியாகிவிடவே என்னை அழைத்து அதை எப்படி நீக்குவது என்றும் கேட்டார். நான் வெளியில் இருந்த காரணத்தால் என்னால் அதை உடனடியாக நீக்க முடியவில்லை. இப்போது அதை நீக்க விருப்பம் இல்லை. பிழைகளை சரி செய்து விடுகின்றேன்.

மற்ற குறிப்புகளில் உள்ள பிழைகளை குறிப்புகள் கொடுப்பவர்கள்தான் சரி செய்யவேண்டும். கூட்டாஞ்சோறு பகுதியில் உறுப்பினர்களை இணைக்கும்போது அவர்களால் தமிழில் பிழையின்றி டைப் செய்ய இயலுமா என்பதை பரிசோதித்துதான் சேர்க்கின்றோம். ஒருசிலர் மிகுந்த ஆர்வம் காட்டுவதால், அவர்களை ஏமாற்றமைடைய செய்யவேண்டாமே என்ற எண்ணத்தில், விரைவில் பிழையின்றி டைப் செய்ய கற்றுக்கொள்ளுங்கள் என்ற ஆலோசனையை வழங்கி சேர்க்கின்றோம். காலப்போக்கில் சிலர் பிழைகளை குறைத்துக்கொண்டாலும், ஒரு சிலர் இன்னமும் பிழைகளுடன் குறிப்புகள் கொடுக்கின்றனர். இது வருத்தத்திற்குரியதுதான்.

மாற்றம்
மே 9, 2008 - 10:32am - வழங்கியவர் admin

சகோதரி மாலதி அவர்களுக்கு,

சகோதரி நர்மதா அவர்களின் குறிப்புகளை தவிர மற்ற சகோதரிகள் அனுப்பிய குறிப்புகள் அனைத்தையும் வெளியிட்டுவிட்டேன். சகோதரி நர்மதா அவர்கள் சமையல் மற்றும் கைவினைப் பொருட்கள் இரண்டிலும் ஏராளமான குறிப்புகள் கொடுத்து இருக்கின்றார். அவை இன்னமும் வெளியிடப்படாமலே இருக்கின்றன. அவரை பெருமைப்படுத்தும் விதத்தில் அவருக்கென்ற தனியாக ஒரு பக்கம் ஒதுக்கவிருக்கின்றேன். அறுசுவை புதிய தளத்தில் அந்த பகுதி இருக்கும். படங்களின் அளவுகளில் மாற்றங்கள் இருக்கும் என்பதால் தற்போது புதிய குறிப்புகளை சேர்க்க கொஞ்சம் தயக்கம் காட்டுகின்றேன். மீண்டும் அவற்றையெல்லாம் எடிட் செய்ய வேண்டியிருக்கும். இதுதான் முக்கிய காரணம்.

வேறு யார் குறிப்பினை அனுப்பிவிட்டு காத்திருக்கின்றார்கள் என்பது தெரியவில்லை. அப்படி யாருடைய குறிப்புகளாவது வெளியிடப்படாமல் இருந்தால் தெரிவிக்கவும். அறுசுவை டீம் சேகரித்து வைத்துள்ள 600க்கும் மேற்பட்ட குறிப்புகள் நாள் ஒன்றுக்கு இரண்டு மூன்று குறிப்புகளாக புதிய தளத்தில் சேர்க்கப்படும்.

புதிய தளத்தின் template ல் எனக்கு இன்னமும் திருப்தி ஏற்படவில்லை. நிறைய மாற்றங்கள் கொண்டு வர நினைப்பதாலும், என்னுடைய மற்ற பணிகளில் நேரம் செல்வதாலும் நான் திட்டமிட்ட நேரத்தில் என்னால் புதிய தளத்தை கொண்டு வர இயலவில்லை. இயன்ற அளவு முயற்சிக்கின்றேன். உங்களின் வேண்டுகோளுக்காக யாரும் சமைக்கலாம் பகுதியில் சில புதிய குறிப்புகளை சேர்க்கின்றேன்.

அட்மின் மற்றும் அனைவருக்கும்
மே 9, 2008 - 1:10pm - வழங்கியவர் இலா

அட்மின் அவர்களுக்கு...
கோழி சாப்ஸ் கொடுத்த புதிய அருசுவை உறுப்பினரை வரவேற்கிறேன். அட்மின் .. தங்களில் விளக்கதிற்க்கு நன்றி...

மற்ற சீனியர் மெம்பர்கள் கொஞ்சமும் புதியவரை வரவேற்று நமது விருந்தோம்பும் பண்பினை காட்டுங்கள்.
என்னை தவறாக எண்ண வேண்டாம்.. இப்போது என் அம்மா மற்றும் பலரும் இன்டெர்னெட்டில் தமிழில் தட்டச்சு பழகுகிறார்கள்.
இதற்கு மேல் தமிழில் நான்( only me ) சொன்னால் யாரும் சரியாக என்னை புரிந்து கொள்ளமாட்ட்டார்கள் .

Please consider this person as some one in your family.If you do so, you will only encourage them to do better and not criticise.

I know that every one was not happy with the way it came out. Let us be patient with newbies to arusuvai and by doing so we will encourage others skills to be shown as well.

I really appriciate the effort the new person took. I hope Admin will help in eliminating the oversight in further issues.

So Let's show that this is where people can come in and be comfortable with.

இப்போதான் பார்த்தேன்.. கேரலின் இம்மனுவெல்.. மிக அருமையான கேக் மற்றும் பிஸ்கெட் குறிப்புகளை கொடுத்து இருக்கிறீகள். ஒரு பேக்கரியே வைக்கலாம் போல...

பிளீஸ் தொடர்ந்து குறிப்புகள் கொடுத்து உதவுங்கள்

ila

Hope is just the part of the equation

சகோ.இல!
மே 11, 2008 - 8:10am - வழங்கியவர் kulasaisulthan

மேற் சொன்ன குறிப்புகள் வெளிவரும் போது அனுப்பியவர் பெயர் கூட இல்லை. அதன் பின்பு தான் அட்மின் கூறிய பிறகு தான் அவரும்(கரோலின்) அறுசுவையின் பழைய அங்கத்தினர் என்று தெரிந்தது. மற்றபடி அந்த சகோதரியை criticise பண்ண வேண்டும் என்ற எண்ணம் எங்களில் யாருக்கும் கிடையாது. நான் பொதுவாக பிழைகளோடு எழுதும் எல்லா சகோதரிகளையும் தான் குறைபட்டு கொண்டேன். அதுவும் பல தடவை இதை பற்றி பதிவுகள் போட்டிருக்கிறேன். அது என்னவோ தெரியவில்லை தமிழை தவறாக எழுதும் போது ஏனோ கோபம் வருகிறது. ஒன்று சொல்லட்டுமா! 1967ல் தமிழ் நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட துணை நின்றவர்களில் என் பங்கும் உள்ளது என்பதை தாழ்மையுடன் இங்கு பதிவு செய்கிறேன்.
நன்றி
குலசை சுல்தான்

வீழ்வதில் வெட்கப் படாதே! மீண்டு எழுவதில் தான் வெற்றி கிட்டும்...