www.arusuvai.com
கோழி சாப்ஸ்
தேவையானப் பொருட்கள்
- கோழி - 1 கிலோ
- பச்சை மிளகாய் - 3
- இஞ்சி - 2 அங்குலம்
- பெரிய வெங்காயம் - 1
- முட்டை - 3
- உப்பு - தேவையான அளவு
செய்முறை
- கோழி இறைச்சியை நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.
- இஞ்சி, பச்சை மிளகாய், பெரிய வெங்காயம் ஆகியவற்றை ஒன்றாய் சேர்த்து அரைத்து, அத்துடன் சிறிது உப்பும் சேர்த்து கோழி இறைச்சியுடன் கலந்து, நன்கு பிசறி வைக்கவும்.
- சிறிது நேரம் சென்றவுடன் இறைச்சியை குக்கரில் ஒரு தனிப்பாத்திரத்தில் வைத்து வேக விடவும். ஒரு விசில் வந்தவுடன் இறக்கி விடவும்.
- ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி, அதில் உப்பு சேர்த்து நுரைக்க அடித்து கலக்கவும்.
- வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் வேக வைத்து எடுத்துள்ள கோழி இறைச்சியை முட்டை கலவையில் முக்கி எடுத்து, எண்ணெய்யில் போட்டு பொரித்து எடுக்கவும்.
பரிமாறும் அளவு
| ஆயத்த நேரம்
| சமைக்கும் நேரம்
|
|
6 நபர் |
15 நிமிடங்கள் |
30 - 45 நிமிடங்கள் |