உள்நுழைதல்

Sponsored links


வாக்கெடுப்பு






புதிதாக இணைந்தவர்கள்

சமீபத்தியக் கருத்துக்கள்

Sponsored link


 

தீயல் குழம்பு

 


தேவையானப் பொருட்கள்

  • தேங்காய் துருவல் - 1கப்
  • சின்ன வெங்காயம் - 20 எண்ணம்
  • முருங்கக்காய் - 1
  • பூண்டு - 10 எண்ணம்
  • மிளகாய்ப்பொடி - 3 டீஸ் ஸ்பூன்
  • மல்லிப்பொடி - 11/2 டீஸ் ஸ்பூன்
  • வெந்தயம் - 1/2 டீஸ் ஸ்பூன்
  • கடுகு - 1/2 டீஸ் ஸ்பூன்
  • உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ் ஸ்பூன்
  • கறிவேப்பிலை - 2 கீற்று
  • புளி - 1கோலிகுண்டு அளவு
  • உப்பு - தேவைக்கேற்ப
  • எண்ணெய் - 5 மேஜை கரண்டி

செய்முறை

  • 1.முருங்கக்காய்யை ஒரு அங்குல துண்டுகளாக நீளவாக்கில் வெட்டி அதையும் கீறி வைக்கவும்.
  • 2.சின்னவெங்காயத்தை தோலுரித்து வைக்கவும்.பூண்டை தோலுரித்து 2 துண்டுகளாக வெட்டி வைக்கவும்.
  • 3.ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் தேங்காய் துருவலை அதில் போட்டு நன்றாக சிவக்க வறுக்கவும். அதை எடுத்து வைத்துவிட்டு மிளகுப்பொடி,மல்லிப்பொடி 2ம் போட்டு அதையும் நன்றாக வறுக்கவும்,கலர் மாறி வாசம் வரும்போது இறக்கி விடவும். கருகிவிடக்கூடாது கவனம் தேவை,வறுத்தவற்றை ஒரு தட்டில் கொட்டி ஆறவைக்கவும்.
  • 4.ஆறிய பிறகு மிக்ஸியில் போட்டு கொஞ்சம்,கொஞ்சமாக தண்ணீர் விட்டு நைசாக அரைத்து எடுக்கவும்.
  • 5.புளியை 1கப் சுடு தண்ணீரில் ஊற வைக்கவும்
  • 6.அடுப்பில் வாணலியை வைத்து அதில் 4 மேஜைகரண்டி எண்ணெய் விட்டு சூடானதும் அதில் கடுகு, உளுத்தம்பருப்பு, வெந்தயம், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
  • 7.பூண்டு, சின்னவெங்காயம், இரண்டும் போட்டு நன்றாக வதக்கவும்.
  • 8.பின்னர் முருங்கக்காய் போட்டு வதக்கி , அதில் அறைத்த விழுதையும் கலந்து 4கப் தண்ணீர் விட்டு ஒரு கொதி வந்தவுடன் புளியை கரைத்து வடிகட்டி கலவையில் சேர்த்து,உப்பு போட்டு குழம்பு வற்றி கட்டியாக வரும் போது இறக்கிவிடவும்.
  • 9.தீயல் குழம்பு தயார்,சாதத்துடன் பரிமாறவும் இந்த குழம்பு காரம் அதனால் காரம் இல்லாத பருப்புகூட்டுக்கறி நல்ல இருக்கும்.

குறிப்பு:

1.முருங்கக்காய் தான் போட வேண்டும் என்று இல்லை,கத்திரிக்காய்,சேனைக்கிழங்கு, கொண்டைக்கடலையும் வைத்து செய்யலாம் 2.வெறும் வெங்காயம், பூண்டு வைத்தும் செய்யலாம். 3.புளி குறைவாக சேர்த்துக்கொள்ளவும் 4.அறைத்தல் நல்ல நைசாக இருக்கவேண்டும்.

வழங்கியவர்

மஹாபிரகதீஸ், China

ஆயத்த நேரம்

சமைக்கும் நேரம்

20min 15min
random food image


comments