தேவையானப் பொருட்கள்
- புளிப்பில்லாத கெட்டி மோர் - 1 கப்
- பொட்டுகடலை - 50 கிராம்
- பச்சை மிளகாய் - 4
- தேங்காய் துருவல் - சிறிது
- பூண்டு - சிறிய பல் (விருப்பட்டால்)
- உப்பு , மஞ்சள் தூள் - தேவையான அளவு
- எண்ணை,கடுகு,பெருங்காயம்,வரமிளகாய்- தாளிப்பதற்கு
செய்முறை
- 1.மோரில் மஞ்சள் தூள்,உப்பு கலக்கி வைக்கவும்
- 2.மிக்சியில் பொட்டு கடலை,தேங்காய் துருவல்,பச்சை மிளகாய், பூண்டு போட்டு நைசாக அரைக்கவும்.
- 3. பின் அரைத்த விழுதை மோரில் கலக்கவும்.
- 4. வாணலியில் எண்ணை ஊற்றி கடுகு,பெருங்காயம்,வர மிளகாய் போடு தாளித்து மோரை ஊற்றவும்.
- 5. இதை கொதிக்க விடாமல் பொங்கி வரும் பொழுது இறக்கவும்.
-
-
குறிப்பு
பக்கோடா அல்லது காராபூந்தியை சாப்பிடும் போது மோர்குழம்பில் கலந்து சாப்பிடால் சூப்பராக இருக்கும்