உள்நுழைதல்

Sponsored links


வாக்கெடுப்பு






புதிதாக இணைந்தவர்கள்

சமீபத்தியக் கருத்துக்கள்

Sponsored link


 

இறால்,பிரெட் கிச்சடி

 


தேவையானப் பொருட்கள்

  • முழு பிரெட்-1
  • இறால் --1/4கிலோ
  • பெரிய வெங்காயம் --3
  • பச்சை மிளகாய் --5
  • இஞ்சி --1துண்டு
  • பூண்டு --6பற்கள்
  • கொத்துமல்லித் தழை --சிறதளவு
  • மிளகாய்த்தூள் --2டீஸ்பூன்
  • கரம் மசாலாத் தூள் --1/2டீஸ்பூன்
  • நெய் --50கிராம்

செய்முறை

  • இறாலுடன் உப்புத்தூள், மஞ்சள் தூள், ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள் கலந்து ஊற வைத்து ஆவியில் வேக வைத்துக் கொள்ளவும்.
  • ரொட்டியை சிறு சிறு சதுரத்துண்டுகளாக நறுக்கவும். பாலில் இரண்டு டீஸ்பூன் மிளகாய்த்தூள், உப்புத்தூள் கலந்து, தெளித்த பிரெட்டுடன் பிசறி வைக்கவும்.
  • கரம்மசாலாத்தூள, இஞ்சி, பச்சைமிளகாய், பூண்டு இவற்றை விழுதாக அரைக்கவும். வெங்காயத்தை நீள, நீளமாக நறுக்கவும்.
  • வாணலியில் நெய் ஊற்றி அரைத்த விழுது சேர்த்து வாசனை வருகையில் வெங்காயம் கரம் மசாலத்தூள் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும், ரொட்டித் துண்டுகள், இறால் சேர்த்து கிளறி மூடி வேக வைக்கவும்.
  • ரொட்டியும், இறாலும் பொன்னிறமாக வதங்கியதும் கொத்துமல்லித்தழை தூவி இறக்கவும்.
  • மணமும், சுவையும் நிறைந்த இறால்-பிரெட் கிச்சடி தயார்.

வழங்கியவர்

குலசை சுல்தான்

பரிமாறும் அளவு

சமைக்கும் நேரம்

4 நபர்கள் 30 நிமிடங்கள்
random food image


comments
இறால்,பிரெட் கிச்சடி
மே 10, 2008 - 12:01pm - வழங்கியவர் Manohari

ஹலோ திரு சுல்தான் அவர்களுக்கு, நேற்று இதே மாதிரியான குறிப்பைதான் செய்து சாம்பில் பார்த்து வைத்திருந்தேன். இன்று நீங்களும் அதே குறிப்பை அதே செய்முறையில் நான் கொடுக்கயிருந்த அதே பெயரில் கொடுத்துள்ளீர்கள்,நாம் எடுத்துக் கொண்ட அளவுகளில் தான் சிறிது மாற்றம் இருந்தது.பார்த்ததும் ஆச்சரியமாகி விட்டது. ஆகவே எனது குறிப்பை மாற்று செய்முறையில் செய்து இணைப்பதில் பிரச்சனையிருக்காது என்று நினைக்கின்றேன். உங்க குறிப்புகள் பார்க்க சுலபமாக இருக்கின்றது ஆகவே அவைகளில் சிலவற்றை செய்யலாம் என்றிருக்கின்றேன் நிச்சயம் பின்னூட்டம் தருகின்றேன் நன்றி.

சகோ.மனோ!
மே 10, 2008 - 12:35pm - வழங்கியவர் kulasaisulthan

மாற்று செய்முறையில் குறிப்புகள் கொடுப்பதில் எந்த ஆட்சேபனையும் எனக்கு இல்லை. தலைப்பை மட்டும் இறால்-பிரெட் கிச்சடி-2 என கொடுக்கலாம்.

வீழ்வதில் வெட்கப் படாதே! மீண்டு எழுவதில் தான் வெற்றி கிட்டும்...