தேவையான பொருட்கள்
- பாசுமதி அரிசி - 2 கப்
- வெள்ளைகொண்டைக்கடலை - 1 1/2 கப்
- வெங்காயம் - 2
- தக்காளி - 2
- உருளைகிழங்கு - 2
- பச்சைமிளகாய் - 4
- இலவங்கம் - 3 எண்ணம்
- பட்டை - 1 துண்டு
- ஏலக்காய் - 2 எண்ணம்
- எலுமிச்சை சாறு - 2 மேஜை கரண்டி
- இஞ்சி,பூண்டு விழுது - 1 மேஜை கரண்டி
- மிளகாய்ப்தூள் - 2 டீஸ் ஸ்பூன்
- மஞ்சள்தூள் - 1/2 டீஸ் ஸ்பூன்
- கரம் மசாலாதூள் - 1 டீஸ் ஸ்பூன்
- கட்டியான தயிர் - 3/4 கப்
- நெய் - 1/2 கப்
- சோடாஉப்பு - 2 சிட்டிகை
- உப்பு - தேவைக்கேற்ப
- புதினா இலை - 4 தண்டு
- பிரியாணி இலை - 2 எண்ணம்
|
செய்முறை
- 1.அரிசியை கழுவி தண்ணீரில் உப்பு கலந்து 10நிமிடம் ஊறவைக்கவும்.
- 2.வெள்ளை கொண்டை கடலையை உப்பு கலந்த நீரில் முதல்நாள் இரவே ஊறவைக்கவும்.
- 3.உருளை கிழங்கை வேகவைத்து துண்டுகளாக நறுக்கிகொள்ளவும், பச்சைமிளகாய், வெங்காயம், தக்காளியை நீளவாக்கில் நறுக்கி கொள்ளவும்.
- 4.குக்கரில் வெள்ளை கொண்டை கடலையுடன் தேவையான அளவு தண்ணீர் விட்டு சோடாஉப்பு, சிறிதளவு உப்பு ஆகியன கலந்து வேகவைக்கவும்.
- 5.தனியாக ஒரு பாத்திரத்தில் ஊறவைத்த அரிசியை களைந்துபோட்டு, அதில் கரம்மசாலாதூள், எலுமிச்சைசாறு, உப்புப்போட்டு அறை வேக்காடாக வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
- 6.பின்னர் ஒரு வாணலிவைத்து அதில் நெய்விட்டு இலவங்கம், பட்டை, ஏலக்காய் போட்டு தாளித்து, இஞ்சி,பூண்டு விழுது போட்டு வதக்கி, அடுத்து பச்சைமிளகாய், வெங்காயாம், தக்காளி போட்டு நன்றாக வதக்கவும் கடைசியில் உருளைகிழங்குப்போட்டு வதக்கவும்.
- 7.பின்னர் கலவையினுள் மஞ்சள்தூள், மிளகாய்தூள் போட்டு 2 நிமிடம் கிண்டு கிண்டி விடவும்,வாணலியை அடுப்பில் இருந்து கீழே இறக்கி தயிர்விட்டு, அதில் வேகவைத்த கொண்டகடலையும் போட்டு கிண்டவும்,அதை மீண்டும் அடுப்பில் வைத்து மிதமான தீயில் நெய் மேலே வரும் வரை சூடுபடுத்தி கலவை சேர்ந்து வரும் வரை வேகவிடவும்.
- 8.கடைசியில் அறைவேக்காடாக வேகவைத்து எடுத்துள்ள சாதத்தை கொண்டகடலை கலவையுடன் கலந்து மிதமான தீயிலேயே 10நிமிடம் மூடிபோட்டு வேகவைக்கவும்,அதில் புதினாஇலை,பிரியாணிஇலை இரண்டையும் தனியாக வதக்கி பிரியாணியில் போடவும்.
- 9.இப்பொழுது சுவையான கொண்டகடலை பிரியாணி தயார்,ஏதேனும் ரெய்த்தாவுடன் பரிமாறவும்.
|
குறிப்பு:
1.தயிர் ஒரு புளிப்புதன்மைக்கு வேண்டிதான் விரும்பினால் கொஞ்சமாக சேர்த்துக் கொள்ளவும்.
2.உப்பு எப்பொழுதுமே பார்த்துப்போடவும் அரிசியும் சரி,கடலையும் சரி உப்பு சேர்த்தேதான் ஊறவைப்பதால் சமைக்கும் போது பார்த்து போடவும்.
3.ஒரே பிரியாணியாக சமைப்பதற்கு இது ஒரு வித்தியாசமான சுவையுடன் இருக்கும் பிரியாணி.
வழங்கியவர்
மஹாபிரகதீஸ், China
பரிமாறும் அளவு
|
ஆயத்த நேரம்
|
சமைக்கும் நேரம்
|
|
3 |
7 hrs |
30 min |
|
|
|
|
சமீபத்தியக் கருத்துக்கள்
2 நிமிடங்கள் 24 நொடிகள் முன்பு -
5 நிமிடங்கள் 11 நொடிகள் முன்பு -
10 நிமிடங்கள் 32 நொடிகள் முன்பு -
17 நிமிடங்கள் 47 நொடிகள் முன்பு -
40 நிமிடங்கள் 18 நொடிகள் முன்பு -
46 நிமிடங்கள் 57 நொடிகள் முன்பு -
56 நிமிடங்கள் 45 நொடிகள் முன்பு -
ஒரு மணிநேரம் 4 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 35 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 57 நிமிடங்கள் முன்பு -