உள்நுழைதல்

வாக்கெடுப்பு







புதிதாக இணைந்தவர்கள்

சமீபத்தியக் கருத்துக்கள்

 

முளைவிட்ட பச்சைப் பயறு சாலட்



தேவையான பொருட்கள்

  • முளைவிட்ட பச்சைப்பயறு - 1 கப்
  • கேரட் - 1/2 கப் மிகப்பொடியாக சதுரங்களாக நறுக்கியது
  • பச்சைகுடமிளகாய் - 1/2 கப் மிகப்பொடியாக சதுரங்களாக நறுக்கியது
  • எலுமிச்சை சாறு - 1 மேஜை கரண்டி
  • கொத்தமல்லி தழை - 1/2 பொடியாக நறுக்கியது
  • நல்லமிளகு தூள் - 1 டீஸ் ஸ்பூன்
  • உப்பு - தேவைக்கேற்ப
  • ஆலிவ் ஆயில் - 1 டீஸ் ஸ்பூன்

செய்முறை

  • 1.பச்சைப்பயறு முழ்கும் வரை தண்ணீர் விட்டு முதல்நாள் இரவே ஊறவைத்து, அடுத்த நாள் தண்ணீரை வடிகட்டி விட்டு ஒரு துணியில் பயிறை கட்டிவைக்கவும்.அடுத்த நாளும் தண்ணீர் தெளிக்கவும்,3ஆவது நாள் சின்னதாக பயிறு முளைவிட்டு இருக்கும் அதுபோதும்.
  • 2. கேரட், பச்சைகுடமிளகாய், கொடுத்த அளவு மிகப்பொடியாக சதுரங்களாக நறுக்கிகொள்ளவும், கொத்தமல்லி தழையையும் பொடியாக நறுக்கிகொள்ளவும்
  • 3.ஒரு பாத்திரத்தில் பயிறு,நறுக்கிய கேரட், குடமிளகாய், கொத்தமல்லி தழை எல்லாம் போட்டு, நல்லமிளகுதூள், எலுமிச்சை சாறு விட்டு, உப்பு போட்டு கிண்டவும்.கடைசியில் ஆலிவ் எண்ணெய்விட்டு கிளறிவைக்கவும்.
  • 4.பிரியாணிக்கு ஏற்ற சாலட்

குறிப்பு:

இது குஜராத் சாலட்டில் ஒன்று இதில் வெள்ளரிக்காய்யும் சேர்த்துக்கொள்ளலாம்

வழங்கியவர்

மஹாபிரகதீஸ், China

பரிமாறும் அளவு

ஆயத்த நேரம்

சமைக்கும் நேரம்

4 3 days 5 min
  food image


comments