கணவா முருங்கைக்கீரைப் பொரியல் |
|
|
|
தேவையானப் பொருட்கள்
- கணவா மீன் - 4
- முருங்கைக்கீரை - கால் கப்
- சோம்பு - அரை தேக்கரண்டி
- மிளகாய் தூள் - அரை மேசைக்கரண்டி
- உப்பு - அரை தேக்கரண்டி
- மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
- தேங்காய் எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
|
கீரையை ஆய்ந்து சுத்தம் செய்துக் கொள்ளவும். கணவாவை சுத்தம் செய்து தண்ணீரில் அலசி எடுத்துக் கொள்ளவும். மற்ற தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும்.
|
 |
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் சோம்பை போட்டு பொரிய விடவும்.
|
 |
சோம்பு பொரிந்ததும் சுத்தம் செய்து வைத்திருக்கும் கணவாவை போட்டு அதனுடன் மஞ்சள் தூள் சேர்த்து 30 நொடிகள் வதக்கவும்.
|
 |
பிறகு அதனுடன் ஆய்ந்து வைத்திருக்கும் முருங்கைக்கீரை, மிளகாய் தூள் மற்றும் உப்பு போட்டு 2 நிமிடங்கள் பிரட்டி விடவும்.
|
 |
அதன் பின்னர் 2 நிமிடங்கள் கழித்து ஒரு தட்டை வைத்து மூடி 5 நிமிடங்கள் வேக வைக்கவும். இடையில் ஒரு முறை திறந்து கிளறி விட்டு மீண்டும் மூடி 8 நிமிடங்கள் வேக விடவும். மூடாமல் செய்தால் கணவா வெடிக்கும்.
|
 |
8 நிமிடம் கழித்து கணவா பொரிந்ததும் ஒரு முறை கிளறி விட்டு அடுப்பில் இருந்து இறக்கி வைத்து விடவும்.
|
 |
இப்போது கணவா முருங்கைக்கீரை பொரியல் தயார்.
|
 |
இந்த குறிப்பினை வழங்கிய திருமதி. சங்கீதா பிரபாகரன் அவர்களின் சொந்த ஊர் இராமநாதபுரம். கடல் உணவுகள் தயாரிப்பதில் நல்ல அனுபவம் வாய்ந்தவர். செட்டிநாடு சமையலும் இவருக்கு அத்துப்படி. திருமணத்திற்கு பிறகுதான் சமைக்க கற்றுக்கொண்டேன் என்று சொல்லும் இவர், கடந்த ஒன்பது வருடங்களில் சமையலில் பட்டம் பெறும் அளவிற்கு திறன் வளர்த்துக் கொண்டிருக்கின்றார். சமையல் மட்டுமன்றி, அழகுக்கலை, கைவினைப் பொருட்கள் செய்தல் ஆகியவற்றிலும் முறையே பயிற்சி எடுத்துக் கொண்டுள்ளார்.
|
 |
|
|
|
|
|
|
|
|
|
முந்தைய குறிப்புகள் பக்கத்திற்குச் செல்ல..
|
சமீபத்தியக் கருத்துக்கள்
ஒரு நிமிடம் 8 நொடிகள் முன்பு -
ஒரு நிமிடம் 34 நொடிகள் முன்பு -
5 நிமிடங்கள் 16 நொடிகள் முன்பு -
5 நிமிடங்கள் 34 நொடிகள் முன்பு -
7 நிமிடங்கள் 35 நொடிகள் முன்பு -
10 நிமிடங்கள் 46 நொடிகள் முன்பு -
12 நிமிடங்கள் 51 நொடிகள் முன்பு -
14 நிமிடங்கள் 44 நொடிகள் முன்பு -
19 நிமிடங்கள் 3 நொடிகள் முன்பு -
19 நிமிடங்கள் 20 நொடிகள் முன்பு -